Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
gOthru charithru...9

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்

தொகுத்தளிப்பவர்

சூர்யாஞானேஸ்வர்

11. ஸாண்டில்ய மகரிஷி கோ3த்ரம்

ஸாண்டில்ய மகரிஷியைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. ஸாண்டில்ய ஸ்மிருதி என்ற அற்புதமான கிரந்தம் இவர் அருளியுள்ளார். தோத்தாத்ரி மலையில் ஸ்ரீஹரியின் திவ்ய ஆலயத்தில் எழுந்தருளியிருந்து நல்ல உபதேசங்கள் செய்தவர். இன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடிக்கு அருகில் இம்மலை உள்ளது. இதனை நம்பிமலை என்று அழைக்கின்றனர். இந்த குறிப்பு தவிர இவரது வாழ்க்கை வரலாறு எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இவரது சிஷ்ய-பிரசிஷ்ய வழித்தோன்றல்கள் ஸாண்டில்ய கோத்திரத்தவர்.

ஸாண்டில்ய மகரிஷியின் ஸ்லோகம்:

ப்3ரஹ்மாதி தே3வஸ்ச பு4ஜங்க3 யோனி:

ஸ்த்ரீ பஞ்சதாரா ந்ருக3ணம்ச க்ருஷ்ண: 

ஜம்பூ4தரு: பிங்க3ள பகஷிகம்ச

வஸிஷ்ட2 ஸாண்டி3ல்ய ச கௌ3தமாநாம் 

ஸாண்டில்ய கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : ரோஹிணி

கோ3த்ரு : ஸாண்டில்ய கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : பி3ரஹ்மா

க3ணம் : மனுஷ்ய க3ணம்

வாஹநொ : ஆதிஸேஷன்

பட்சி : குடுல்குப்பொ (கு3ட்லகூ3ப) ஆந்தை

விருட்சம் : ஜெம்பு3 ஜா2ட் (நாவல்மரம்)

வாந் : கொங்கடிவான்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : ஸாண்டில்யää அசீதää தே3வல ஆகிய கோத்திரங்கள்

                      திரியாரிஷ ப்ரவரம்.


ஸாண்டில்ய மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

இந்த கோத்திரத்தைச் சேர்ந்த வீட்டுப்பெயர்களைக் கொண்டவர்கள் தமிழகத்தில் எந்த ஊரிலிருந்தாலும் எங்களுக்குத் தெரியப்படுத்தினால் அதனை விபரமாக வெளியிடலாம். 

12. கௌதம மகரிஷி

கௌதம மகரிஷி தீர்கதம முனிவரின் குமாரர். இவர் ஸப்தரிஷிகளில் ஒருவர். வுடமொழியில் கௌ என்பதற்கு ஒளியின் கிரணங்கள் என்றும் தமஸ் என்பதற்கு இருள் என்றும் பொருள். இருளைப் போக்குகின்றவன் என்ற அர்த்தத்தில் கௌதமர் என்று பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.

பிற்காலத்தில் சாஸ்திரங்கள் கற்றறிந்து பல சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்ததால் வெளி இருளை மட்டுமில்லாமல் மனதிலிருக்கும் அஞ்ஞான இருளையும் போக்க வல்லவர் என்ற பொருளையும் கொள்ளலாம் என்று மகாபாரதம் அனுசான பருவத்தில் 93வது அத்தியாயத்தில் 94வது சுலோகத்தில் சொல்லியிருப்பதிலிருந்து உணரலாம். இவர் அகலிகையை மணந்து ஆஸ்ரமத்தில் இல்லறம் நடத்தி வந்தார். 

ஒரு முறை இந்திரன் அகலிகை மேல் மோகம் கொண்டு கௌதம ரிஷி ஆஸ்ரமத்தில் இல்லாத சமயம் கௌதமரைப் போல உருவங்கொண்டு அகலிகையின் கற்பைக் கெடுத்தார். இதனை அறிந்த கௌதமர் மனைவி அகலிகையை கல்லாகப் போகும்படி சபித்தார். இந்திரனுக்கும் சாபம் அளித்தார். பின்னர் ஸ்ரீராமாவதாரத்தின்போது விஸ்வாமித்திர முனிவருடன் கானகம் செல்லும் வழியில் ஸ்ரீராமபிரானின் காலடிப்பட்டு அகலிகை சாப விமோசனம் அடைந்த வரலாறு யாவரும் அறிந்ததே. 

இம்மகரிஷியின் சிஷ்ய பிரசிஷ்யர்களின் வழித்தோன்றல்கள் கௌதம கோத்திரத்தினராவர்.

கௌதம மகரிஷியின் ஸ்லோகம்:

ப்3ரஹ்மாதி தே3வஸ்ச பு4ஜங்க3 யோனி:

ஸ்த்ரீ பஞ்சதாரா ந்ருக3ணம்ச க்ருஷ்ண: 

ஜம்பூ4தரு: பிங்க3ள பகஷிகம்ச

வஸிஷ்ட2 ஸாண்டி3ல்ய ச கௌ3தமாநாம் 


கௌதம கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : ரோஹிணி

கோ3த்ரு : கௌதம கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : பி3ரஹ்மா

க3ணம் : மனுஷ்ய க3ணம்

வாஹநொ : ஆதிஸேஷன்

பட்சி : குடுல்குப்பொ (கு3ட்லகூ3ப) ஆந்தை

விருட்சம் : ஜெம்பு3 ஜா2ட் (நாவல்மரம்)

வாந் : கேதா3ரிவான்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : ஆங்கீ3ரஸ, ஆயாஸ்ய, கௌ3தம ஆகிய கோத்திரங்கள்

                      திரியாரிஷ ப்ரவரம்.


கௌதம மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

1. கெ3ருடா3தி3ந்

2. பு3ஸ்ஸ{ந்

3. தொ3ட்3டி3ந்

இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் அந்தந்த ஊரில் உள்ளவர்கள் அந்த வீட்டுப்பெயர்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 6 =