ad1
askinAk nava orsu subha nanthinin

chalni kaLatni 1-31-8

தமிழ்நாடு ஸெளராஷ்ட்ர கல்வியாளர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ். ஆர். அனந்தராமன் ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் பொதுச்செயலாளர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் சென்ற வாரம் டெல்லி சென்றனர். அங்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் அவர்களுடன் மத்திய சிறுபான்மை நல்த்துறை அமைச்சர் மாண்புமிகு. முக்தா அப்பாஸ் நக்வி அவர்களை சந்தித்து மதவாரி சிறுபான்மையினருக்கு வழங்கும் சலுகைகள் மொழிவாரி சிறுபான்மையினரான ஸெளராஷ்ட்ரர்களுக்கும் கிடைக்க வலியுறுத்தியும் நமது மொழியை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 8வது அட்டவணையில் சேர்க்கவும் ஸெளராஷ்ட்ர மத்ய சபை, தமிழ்நாடு ஸெளராஷ்ட்ர கல்வியாளர் கூட்டமைப்பு மற்றும் பெங்களுர் குசோ சார்பாகவும் கேட்டுக்கொண்டு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதுசமயம் டெல்லி ஸெளராஷ்ட்ர அசோசியேசன் செயலாளர் கிஷோர் மற்றும் பாராளுமன்ற கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.


 

சென்ற 15-08-2016 அன்று சேலம் ஸெளராஷ்ட்ர சமூக சேவா சங்கத்தின் 28வது ஆண்டு மாணவ-மாணவியர்க்கு கல்வி ஊக்கத்தொகை பரிசளிப்பு விழாவும் சாகித்ய அகாடமி விருது பெற்ற கே.ஆர்.சேதுராமன் அவர்களின் சாதனையைப் பாராட்டி கௌரவிக்கும் வகையி;ல் தபால்தலை வெளியீட்டு விழாவும் ஸெளராஷ்ட்ர இலக்கிய புத்தகக் கண்காட்சியும் சேலம்டவுன் பட்டைக்கோயில் அருகிலுள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. 
இந்த முப்பெரும் விழாவிற்கு ஸெளராஷ்ட்ர மத்ய சபைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமசுப்பிரமணியன்ää காரியதரிசி சாந்தாராம்ää டாக்டர் ராசகோபால்ää சேலம் மாநகராட்சியின் மண்டலம் 3ன் தலைவர் ஜெயப்பிரகாஷ்ää பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை சரோஜா சுந்தரராஜன் இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது. தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையுரையாற்றினார். தொடர்ந்து ராமசுப்பிரமணியன்ää மண்டலத் தலைவர் ஜெயப்பிரகாஷ் பேராசிரியர் தாமோதரன் ஆகியோர் உரையாற்றினார்கள். 
பின்னர் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் பதிப்பாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். தி.இரா.தாமோதரன்ää கே.ஆர்.சேதுராமன்ää உறையூர் ரெங்கராஜன்ää திருபுவனம் எம்.எஸ்.ரமணிää ராசிபுரம் அனந்தராமன்ää கோவை சரோஜா சுந்தரராஜன்ää சேலம் எம்.எல்.ஜெயபால்ää பாலாஜிää ராஜாராம்ää தேவிகாää திருச்சி உமாபதிää ஈரோடு கிருஷ்ணமாச்சாரி ஆகியோரின் படைப்புகள் இடம் பெற்றது. பத்திரிகையாளர்களான ஸொந்நாகொடு3ம் ஆசிரியர் சதாசிவன்ää ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன்ää உதயமணி ஆசிரியர் சாமி மற்றும் சமூககுரல் ஆசிரியர் உமாபதி ஆகியோரும் பங்கு கொண்டனர்.
தொடர்ந்து சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ்நாட்டில் ஸெளராஷ்ட்ரர் என்ற முதல் வரலாற்று நூலை எழுதி சாதனைப்படைத்த கே. ஆர். சேதுராமன் அவர்களை கௌரவிக்கும் விதத்தில் அவருடைய தபால்தலையை தலைவர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டார். பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரையாற்றினார் சேதுராமன். கோவை சரோஜா சுந்தரராஜன் அவர்கள் எழுதிய புண்ய ஸாஹித்யுந் ஸெரொ ஷீரடி ஸாயி ஆரத்தி என்னும் நூல் வெளியீடு செய்யப்பட்டது. இது முற்றிலும் ஸெளராஷ்ட்ர மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
மாலை 5.00 மணிக்குமேல் புத்தகக் கண்காட்சியில் பங்குகொண்ட பத்திரிகையாளர்கள் பதிப்பாளர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என்று அனைவரையும் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவித்தனர். பின்னர் 10ää 12ஆம் வகுப்பு மற்றும் சிபிஎஸ் மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகளும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் விநாயகமிஷன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்க்கு பரிசுகளை வழங்கினார். கல்வி மற்றும் முயற்சி பற்றி சிறப்பாக உரையாற்றினார். 
தொடர்ந்து முனைவர் தா.கு.சுப்பரமணியன் நடுவராக சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய தேவை பா4ஷா பக்தி கீ? சமூக பக்தி கீ? என்னும் தலைப்பில் மாபெரும் பட்டிமன்றம் நடைப் பெற்றது. இதில் நன்னியான்.லெ.நாகராஜன்ää திருபுவனம் ரமணிää பி.எஸ்.தனபாலன் ஆகியோர் பா4ஷா ப4க்தி என்ற தலைப்பிலும தி.இரா.தாமோதரன்ää உறையூர் ரெங்கராஜன்ää ஹேமநாதன் ஆகியோர் சமூக பக்தியே என்ற தலைப்பிலும்; விவாதங்களை வைத்து பேசினார்கள். சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய தேவை சமூக பக்தியே என்று நடுவர் தீர்ப்பு வழங்கி முடித்து வைத்தார்.
இறுதியாக நன்னியான் நாகராஜன் நன்றி கூறினார். 

சென்ற 15-08-2016 அன்று சேலம் ஸெளராஷ்ட்ர சமூக சேவா சங்கத்தின் 28வது ஆண்டு மாணவ-மாணவியர்க்கு கல்வி ஊக்கத்தொகை பரிசளிப்பு விழாவும் சாகித்ய அகாடமி விருது பெற்ற கே.ஆர்.சேதுராமன் அவர்களின் சாதனையைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் தபால்தலை வெளியீட்டு விழாவும் ஸெளராஷ்ட்ர இலக்கிய புத்தகக் கண்காட்சியும் சேலம்டவுன் பட்டைக்கோயில் அருகிலுள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. 

 

இந்த முப்பெரும் விழாவிற்கு ஸெளராஷ்ட்ர மத்ய சபைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமசுப்பிரமணியன், காரியதரிசி சாந்தாராம்,     டாக்டர் ராசகோபால், சேலம் மாநகராட்சியின் மண்டலம் 3ன் தலைவர் ஜெயப்பிரகாஷ்,     பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை சரோஜா சுந்தரராஜன் இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது. தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையுரையாற்றினார். தொடர்ந்து ராமசுப்பிரமணியன், மண்டலத் தலைவர் ஜெயப்பிரகாஷ், பேராசிரியர் தாமோதரன் ஆகியோர் உரையாற்றினார்கள். 

 

பின்னர் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் பதிப்பாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். தி.இரா.தாமோதரன்ää கே.ஆர்.சேதுராமன், உறையூர் ரெங்கராஜன், திருபுவனம் எம்.எஸ்.ரமணி, ராசிபுரம் அனந்தராமன், கோவை சரோஜாசுந்தரராஜன், சேலம் எம்.எல்.ஜெயபால், பாலாஜி, ராஜாராம், தேவிகா, திருச்சி உமாபதி, ஈரோடு கிருஷ்ணமாச்சாரி ஆகியோரின் படைப்புகள் இடம் பெற்றது. பத்திரிகையாளர்களான ஸொந்நாகொடு3ம் ஆசிரியர் சதாசிவன்ää ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன், உதயமணி ஆசிரியர் சாமி மற்றும் சமூககுரல் ஆசிரியர் உமாபதி ஆகியோரும் பங்கு கொண்டனர்.

தொடர்ந்து சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ்நாட்டில் ஸெளராஷ்ட்ரர் என்ற முதல் வரலாற்று நூலை எழுதி சாதனைப்படைத்த கே. ஆர். சேதுராமன் அவர்களை கௌரவிக்கும் விதத்தில் அவருடைய தபால்தலையை தலைவர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டார். பாராட்டுக்கு நன்றி தெரிவித்து ஏற்புரையாற்றினார் சேதுராமன்.

அதனை தொடர்ந்து ஸெளராஷ்ட்ர மொழி எழுத்தில் சுவர் கடிகாரம் வெளியிடப்பட்டது. இந்த புதிய முயற்சிக்கு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் விழாக்குழுவினரை பாராட்டி பேசினார்கள். விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள் அனைவருக்கும் இந்த கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது.

கோவை சரோஜா சுந்தரராஜன் அவர்கள் எழுதிய புண்ய ஸாஹித்யுந் ஸெரொ ஷீரடி ஸாயி ஆரத்தி என்னும் நூல் வெளியீடு செய்யப்பட்டது. இது முற்றிலும் ஸெளராஷ்ட்ர மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாலை 5.00 மணிக்குமேல் புத்தகக் கண்காட்சியில் பங்குகொண்ட பத்திரிகையாளர்கள் பதிப்பாளர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என்று அனைவரையும் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

பின்னர் 10, 12ஆம் வகுப்பு மற்றும் சிபிஎஸ் மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகளும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் விநாயகமிஷன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்க்கு பரிசுகளை வழங்கினார். கல்வி மற்றும் முயற்சி பற்றி சிறப்பாக உரையாற்றினார். 

தொடர்ந்து முனைவர் தா.கு.சுப்பரமணியன் நடுவராக சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய தேவை பா4ஷா பக்தி கீ? சமூக பக்தி கீ? என்னும் தலைப்பில் மாபெரும் பட்டிமன்றம் நடைப் பெற்றது. இதில் நன்னியான்.லெ.நாகராஜன், திருபுவனம் ரமணி, பி.எஸ்.தனபாலன் ஆகியோர் பா4ஷா ப4க்தி என்ற தலைப்பிலும தி.இரா.தாமோதரன், உறையூர் ரெங்கராஜன்   ஹேமநாதன் ஆகியோர் சமூக பக்தியே என்ற தலைப்பிலும்; விவாதங்களை வைத்து பேசினார்கள். சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய தேவை சமூக பக்தியே என்று நடுவர் தீர்ப்பு வழங்கி முடித்து வைத்தார்.

 இறுதியாக நன்னியான் நாகராஜன் நன்றி கூறினார். 


 


 

 

 

User Comments

Question : 1
+
9=