Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
echarikai tevai - ShrEyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol. 7                                     1st July 2020                                   Issue: 21


 

எச்சரிக்கை தேவை!

ஸெளராஷ்ட்ர சமூகத்தின் குரலாகவும் ஒவ்வொரு ஸெளராஷ்ட்ரனின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நாடித்துடிப்பாக ஸெளராஷ்ட்ரப் பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்றைய ஸெளராஷ்ட்ர மத்ய சபை சமூகப் பத்திரிகைகளை மதிக்காமல் தன்னிச்சையாக முகநூல், வாட்ஸ்அப் என்று தங்களுடைய செய்திகளை ஒருதலைபட்சமாக வெளியிடத் தொடங்கியது. இதனால் சபையின் வெளிப்படைத் தன்மை அறவே ஒதுங்கியது. பத்திரிகைகளும் சபையின் நிகழ்வுகள் அதனைக் குறித்த விமர்சனங்கள் எதையும் வெளியிடாமல் ஒதுங்கிக் கொண்டது.


மத்ய சபையின் நிர்வாகத்தில் ஏகப்பட்டக் குழுக்கள். ஆனால் அதில் பயன்பாடுள்ள குழு எதுவென்று யாருக்கும் தெரியாது. எந்த நிர்வாக சபைக் கூட்டத்திலும் குழுக்களின் பணி குறித்த விபரங்கள், குழுவைச் சார்ந்தோரால் வெளியிடப்படுவதில்லை. இந்த விமர்சனத்திற்குரிய சபையயை நிர்வகிக்க முன்னாள் நிர்வாகிகளின் ஆலோசனைக்குழு மற்றும் உயர்மட்டக்குழு என்று அமைத்துக் கொண்டு அது ஒரு தனிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் உரிய தொடர்பில் விரிசல் அதிகம் காணப்படுகிறது. யார் யாரை எப்படி கவிழ்க்கலாம் அடுத்த தலைவரை எப்படி உருவாக்கலாம் என்ற சிந்தனையின் முத்தாய்ப்பாக ஒரு வாட்ஸ்அப் குழு இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது.


ஆனால் எதிலும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவில்லை. இன்றைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடியும் நிலையில் தேர்தலை சந்திக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாக உருப்படியாக எந்த செயல்பாடும் இல்லை. சபையை மறுபதிவு செய்வதில் ஏற்பட்ட பிரச்னை இன்றளவும் தீர்ந்தபாடில்லை. பரபரப்பாக பேசிய பகட்டான தலைவரும் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை மெய்ப்பித்து விட்டார். முன்னாள் இன்னாள் நிர்வாகிகளின் கடிவாளம் அந்த அளவிற்கு இறுகுகிறது என்று கேள்வி!


சமூகத்தின் பெயரைச் சொல்லி மந்திரிகளிடம் நின்று போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டதோடு பதவி பந்தா நிறைவு பெற்றது. இனி அடுத்ததாக இதைப்போலவே ஒரு பந்தா நிர்வாகம் வரும். முதல் வருடம் ஆஹா ஓஹோ என்று பேசப்படும். பிறகு அமைதியாகும். பிறகு மறுபடியும் தேர்தல் வரும்.


இப்படியே போய்க்கொண்டிருந்தால் மத்ய சபையால் யாருக்கு என்ன பயன் என்று சாதாரண மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? ஒன்றைமட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஸெளராஷ்ட்ர மத்ய சபை என்பது ஒரு பலமான அஸ்திரம். இதனை சமூகத்திற்கு நல்ல விதத்தில் பயன்படுத்த தெரிந்தவர்கள் மட்டும் பிரயோகிப்பது நல்லது. சுயநலத்திற்கும் சுயவிளம்பரத்திற்கும் பயன் படுத்துபவர்களை இனம்கண்டு வரும் தேர்தலில் அவர்களை ஒதுக்கிவிட்டு ஓர் ஆரோக்கியமான சபையாக உருவாக்க பாடுபடுபவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் கொடுத்துவிடுங்கள். இல்லாவிட்டால் சபைக் காணாமல் போய்விடும்! உறுப்பினர்களே எச்சரிக்கையாக செயல்படுங்கள்!

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 9 =