Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
vizhitezhu vizhipuNarvudan....ShrEyangam 16-7-20

ஸ்ரேயங்க3ம்:


Vol. 7                                     16th July 2020                                   Issue: 22


 விழித்தெழு விழிப்புணர்வுடன்!


நம் சமுதாயத்தில் ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியங்கள் வளர்ச்சிக்கு ஒரு நல்ல விழிப்புணர்ச்சி உருவாகிக் கொண்டிருக்கும் வேளையில்தான் இந்த கொரானா நம்மை அச்சுறுத்தி வீட்டில் முடங்கிக் கிடக்கச் செய்துள்ளது. என்னுடைய பி3ந்து3லா கெ2நியின் இறுதிப் பகுதியான வஞ்சிக்காண்டம் வெளியிட்டீற்குப் பின் மாபெரும் பின்னடைவு. அதே வேளையில் ஒரு சபதமாக ஏற்று இந்த கொரானா ஊரடங்கில் ஒரு சிறிய அகராதிப் பணியை முடித்து வெளியிட்டது பெருமையாக இருக்கிறது. இருந்தாலும் அச்சிடப்பட்ட புத்தகங்கள் யாவும் மக்களை சென்றடைய வழியில்லாமல் உள்ளது.


முகநூல், வாட்ஸ்ஆப் இரண்டும் சற்றே ஆறுதல் தரும் முகமாக உதவியாக இருந்தது. அதன் மூலம் விளம்பரப்படுத்தி ஓரளவு விற்பனை செய்ய முடிந்தது.

ஸெளராஷ்ட்ர மொழி வகுப்புகள் நடத்த இடமும் தேதி குறிக்கப்பட்ட நாளிலிருந்து ஊரடங்கு! இதனால் தாய்மொழி கற்றுக் கொடுப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மொழி இலக்கிய ஆர்வலர்கள் ஊரடங்கிற்குப் பின் எங்களது செயல்பாட்டினை முழுதுமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தாய்மொழியைக் கற்றுக் கொள்வதில் தங்கள் குழந்தைகளுக்கு ஆர்வமூட்டி அனுப்பி வைக்கவேண்டும். எந்தெந்த ஊர்களில் எந்தெந்த பகுதிகளில் வகுப்புகள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் அப்பகுதிவாழ் ஸெளராஷ்ட்ரர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


கற்பிப்போர் உற்சாகம் குறையாமல் இருக்கிறார்கள் என்பதையும் இங்கே நான் குறிப்பிட்டு சொல்லவிரும்புகிறேன். ஊரடங்கு முடிந்து விழித்தெழும்போது நாமும் விழித்தெழுந்து விழிப்புணர்வுடன் தாய்மொழி பயில்வோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்!

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 7 =