Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
mumozhi.....ShrEyangam

ஸ்ரேயங்க3ம்:


  Vol. 7                                     5th Aug. 2020                                   Issue: 23


மும்மொழித் திட்டத்திற்கு வரவேற்பு!


மக்களின் பிரதிநிதிகள் தான் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் என்ற உண்மையை ஒரு கணம் புரிந்து கொண்டு அவர்கள் தங்கள் செயல்பாடுகளையும் லட்சியங்களையும் அமைத்துக் கொள்ளவேண்டும். சரி தானே!


மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாகவே அவர்களின் செயல்கள் அமையும்போதுதான் நல்லாட்சியாக மக்களாட்சி என்று சொல்லமுடியும். மாறாக தங்கள் போக்கிற்கு ஒரு லட்சியம் என்று வகுத்துக் கொண்டு மக்களின் உணர்வுகளுக்கு சிறிதும் மதிப்பளிக்காமல் நடந்து கொண்டால் அதற்கு என்னவென்று சொல்வது?


கல்விக் கொள்கை என்பது கல்வி கற்போர்க்கும் அவர்தம் பெற்றோர்களுக்குமான பொறுப்புணர்ச்சி என்றே கூறவேண்டும். கல்வி சம்பந்தமாக எந்த முடிவிற்கும் பொதுமக்கள் கருத்தைக் கேட்டு அவர்களின் விருப்பத்தினை நிறைவேற்றுமுகமாக கொள்கை முடிவுகள் அமையவேண்டுமே தவிர அவரவர்கள் சார்ந்த கட்சிகளின் கொள்கைகளாக மாறுபட்டக் கருத்துக்களை மக்களிடம் திணிக்கக் கூடாது.


மும்மொழித் திட்டம் என்பது வரவேற்கக் கூடியது. நம்மால் படிக்க இயலாததை நம் குழந்தைகள் படிக்கப் போகிறார்கள் என்ற ஆனந்தம் பெற்றோர்களுக்;கு உண்டு. குழந்தைப் பருவத்தில் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதும் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமைவதும் மொழிகள்தானே! திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற நமது முன்னோர்கள் வாக்கு மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்வதில் தயக்கமே கூடாது. அதுவும் பள்ளிப் பருவத்தில் அது ஒரு சுமையாகவும் தோன்றாது.


இன்றைய ஆட்சியாளர்களோ அரசியல்கட்சியினரோ படிக்கப் போவதில்லை. அவர்களின் வாரிசுகளää; பொதுமக்கள் என்றுதானே படிப்பதில் ஆர்வங்காட்டுகின்றனர். இதில் உங்களுக்கு என்ன நஷ்டம் வந்தது? கல்வி அரசியலாகி வியாபாரமாகி தரம் குறைந்து இன்றைய இளைய சமுதாயம் படும் வேதனைகளைக் கண்கூடாக பார்த்தும் ஆள்பவர்கள் கட்சிக் கொள்கைகளை காப்பாற்றும் உறுதி தன்மை உங்கள் மீதான மரியாதையையும் கௌரவத்தையும் குறைத்துவிடும்.


யாரிடமும் எந்த மொழியையும் திணிக்க முடியாது. அவரவர்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகிறது. அந்த வாய்ப்புகளை ஆட்சியாளர்கள் தட்டிப்பறிப்பதில் அர்த்தமே இல்லை. ஏதோ மத்திய அரசு கொண்டுவரும் எந்த திட்டமாக இருந்தாலும் பொதுமக்களுக்குப் பயன்படுவதாக இருந்தால் அதனை எதிர்த்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுவது நல்லாட்சிக்கு அழகல்ல! மும்மொழித் திட்டத்திற்கு இருகரம் நீட்டி வரவேற்றும் செயல்களில் ஈடுபடுங்கள். திராவிடக்கட்சிகளே கல்வி விஷயத்தில் நீங்கள் நடந்து கொள்வது தவறான முன்னுதாரணம் என்று உங்களுக்கே தெரிந்தும் தொடர்ந்து இதுபோன்ற தவறுகளை செய்து கொண்டே போனால்...மக்களிடம் உங்கள் செல்வாக்கு சரிவது உறுதி. பொதுமக்கள் மும்மொழித் திட்டத்திற்கு ஆதரவளிப்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். புரிந்து கொண்டால் சரி!

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 8 =