Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Peper chicken

 

 

பெப்பர் சிக்கன்

மாலினி, மதுரை

தேவையானவை:

1. தோல் எலும்பு நீக்கப்பட்ட சிக்கன் அரைக்கிலோ

2. மிளகுப்பொடி சிறிதளவு

3. தேவையான அளவு உப்பு

4. வெங்காயம் 100 கிராம்

5. எண்ணெய் அல்லது நெய் 2 கரண்டி

 

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். கோழிக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொண்டு நீர் வற்றிய பின் உப்பையும் மிளகுப்பொடியையும் போட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். பின்னர் கோழிக்கறியை போட்டு கிளறி விடவும். 100மி.லி. அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும். நன்கு வேகவைத்த பின்னர் தண்ணீiர் வற்றவைத்து இறக்கி வைத்து மூடிவைக்கவும். சிறிது நேரம் கழித்து சாப்பாட்டுடன் சாப்பிட சுவையாக இருக்கும். 

கொழுப்புச் சத்து குறைவாக சாப்பிடவேண்டும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார் என்று சொல்பவர்களுக்கு இந்த பெப்பர் சிக்கன் ஆறுதலாக இருக்கும். ஒரு முறை செய்து பாருங்களேன். பொள்டெ சய்னொ ஸொகன் பொள்டெ குடி மெநுவாய்.

 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 9 =