ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

gOthru charithru...2

கோ3த்ரு சரித்ரு - கே4ருநாவுந் 

தொகுத்தளிப்பவர்:

சூர்யா ஞானேஸ்வர்

மௌத்கல்ய மஹரிஷியின் வரலாறு அந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர் விபரமாக சென்ற இதழில் பார்த்தோம். கோத்ரு ஸ்லோகம் என்று உள்ளதையும் வெளியிட்டால் சிறப்பாக இருக்குமென பலர் கூறியதைக் கருத்தில்கொண்டு மௌத்கல்ய மஹரிஷியின் கோத்ரு சுலோகத்தைக் கொடுத்துள்ளேன். இனி ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சுலோகத்தைக் கொடுத்து விளக்கம் எழுதப்படும்.
மௌத்3க3ல்ய மைத்ரேய மதங்க கோ3த்ர
ஸம்பூ4த ஜாநாம் துரக3ஸ்ச யோநி:
தாராஸ்த்ரயோ தே3வக3ணம் புமாம் ஸ:
ஸைநஸ்ச பகூரூP விஷம்ருஷ்டி வ்ருகூரூ :
இந்த இதழில் மதங்க மஹரிஷியின் வரலாறும் வீட்டுப்பெயர்களும் காண்பதற்கு முன்னர் ரிஷியின் வரலாறு காண்போம். 
ரிஷியமுக பர்வதம் என்னும் மலைப்பகுதியில் மதங்க மகரிஷி ஆசிரமம் அமைத்துக்கொண்டு தவம் செய்து வந்தார். அரக்கர்களில் ஒருவனான மயனின் புதல்வனான துந்துபி மகா பலம் பொருந்தியவன். அவனை வாலி வதம் செய்து அவனுடைய உடலை வீசியெறிய அவ்வுடல் மதங்க மகரிஷியின் ஆசிரமத்தின் அருகே விழுந்தது. இதனை அறிந்து கோபங்கொண்ட மகரிஷி ரிஷியமுக பர்வதத்தில் வாலி நுழைந்தால் அவனுடைய தலை வெடித்து சிதறி மாள்வான் என்று சாபமிட்டார். இதனால் வாலி மதங்க மகரிஷி ஆசிரமம் உள்ள பகுதியில் நுழைவதில்லை. வாலியின் பராக்கிரமம் செல்லாத இந்த பகுதியிலி:ருந்துதான் சுக்கிரீவன் தன் சேனையுடன் தஞ்சம் புகுந்தான். ஸ்ரீராமபிரான் ஆரண்ய வாசத்தின்போது அவரிடம் சரண் அடைந்து அவரால் சகோதரனாக்கப்பட்ட வரலாறு ஆரண்ய காண்டத்தில் நாம் அறிந்ததே. பிரியவர்தன் என்ற கந்தர்வன் செருக்குடன் சுற்றித் திரிந்தபோது அவனை யானையாக போகும்படி சாபமிட்ட தவசீலர் மதங்க மகரிஷி. சபரியும் மதங்க மகரிஷியின் சிஷ்யை ஆவார். இவருடைய ஆசிரமம் அமைந்துள்ள பகுதி மதங்கவனம் எனப்பட்டது. இவருடைய ஆசிரமத்தின் சிஷ்யர் பிறசிஷ்யர்களின் வழி வந்தவர்கள் மதங்க கோத்திரத்தவர்கள்.
மதங்க கோத்திரத்தின் சுலோகம் முன்னர் சொல்லிய மௌத்3க3ல்ய மஹரிஷியன் கோத்திரத்தின் சுலோகமும் ஒன்றாகவே வருகிறது என்பதை உணரலாம்.
மௌத்3க3ல்ய மைத்ரேய மதங்க கோ3த்ர
ஸம்பூ4த ஜாநாம் துரக3ஸ்ச யோநி:
தாராஸ்த்ரயோ தே3வக3ணம் புமாம் ஸ:
ஸைநஸ்ச பகூரூP விஷம்ருஷ்டி வ்ருகூரூ :
மதங்க கோ3த்ரம்:
வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு
நட்சத்ரு : அஸ்வினி
கோ3த்ரு : மதங்க கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : ஹயக்ரீவர்(அஸ்விநி தே3வதாந்)
க3ணம் : தே3வ க3ணம்
வாஹநொ : அஸ்வம் (கொ4டொ)
பட்சி : ராஜாளி (பேரண்டம்)
விருட்சம் : முஸிண்டி3 ஜா2ட் (விஷம் ம்ருஷ்டி)
வாந் : க்4ருணுவாந்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : ஆங்கீரஸ வம்ஸோத்3ப4வ பிரவரம். இந்த பிரவரத்தில் ஆத்ரேயää
அர்ச்சநாநஸää சாவாஸ்வ ஆகிய கோத்திரங்கள் அடங்கும்.
இங்கே ஆரிஷம் என்பதற்கு சென்ற இதழிலேயே விளக்கம் கொடுத்திருக்கவேண்டும். தவறிவிட்டதால் இந்த இதழில் அதற்கான விளக்கத்தை தருகிறேன். கோத்திரம் என்பதற்கு உறவுமுறை காண்பது என்று பொருள் கொள்ளலாம். அதாவது ஆரோக்கியமான குடும்ப உறவுகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் ஒரு தகவல் களஞ்சியம் என்றும் சொல்லலாம். இது விஞ்ஞான முறைப்படி அமைந்துள்ளதே சிறப்பாகும். ஒரு தவமுதல்வரின் வழியில் அவருக்கு ஆதரவாக விளங்கும் தவசீலர்களைக் கொண்ட குடும்பமே கோத்திரமாகும் என்று நமது முன்னோர்கள் விரித்து பொருள் கூறியுள்ளார்கள். முனிவர்களை மூலப்பிரவரர்களாக ஏற்று அம்முனிவர்கள் மூவரையோ ஐவரையோ எழுவரையோ கொண்டு கோத்திரங்களை நிறுவி அதன்படி குடும்பங்களில் ஆச்சார அனுஷ்டானங்களை கடைப்பிடித்து வாழ்ந்துவரலாயினர். கோத்திரங்கள் மூலத்தலைவருடன் அதனை வளர்த்தவர்களும் அந்த குடும்பத்தின் பிரவரர்கள் எனப்படுவர். அவர்கள் மூவரானால் திரியாரிஷம் எனவும் ஐவரானால் பஞ்சாரிஷம் எனவும் எழுவரானால் ஸப்தாரிஷம் என்றும் மூன்று பிரிவுகளாக வழங்கப்பட்டது. இதில் ஸெளராஷ்ட்ரர்கள் திரியாரிஷம் மற்றும் பஞ்சாரிஷம் மட்டுமே வழக்கில் உள்ளது. ஒரே உறவுமுறையில் பெண் கொடுப்பதும் எடுப்பதும் பின்வரும் சந்ததியில் பிறப்பில் குறைபாடுகள் உருவாகும் அபாயம் உண்டாகிறது என்பதால் ஆரிஷம் பிரவரம் பார்த்து சகோதர உறவு பற்றி தெரிந்து கொண்டு கொள்வினை-கொடுப்பு வினை செய்யவேண்டும். 
மதங்க மஹரிஷி கோ3த்ருக் செரெ கே4ருநாவுந்:
1. கு3ணுவாந்
2. பு2ள்ளாந்
3. நோமுந் (நோம்பு)
4. பு3ட்3டா3ந்
5. து3டு3குச்சிந்
6. அட்3ட3 பு3;ட்3டா3ந்
7. ரமணாந்
8. க்ரீடி3;
9. ஸ்ரீரங்க3தா3முந்
இந்த கோத்ரத்தைச் சேர்ந்த வேறு வீட்டுப்பெயர் கொண்டவர்கள் இருந்தால் நமக்கு தெரிவிக்கலாம். அடுத்த இதழில் மதங்க மஹரிஷியின் வரலாறும் வீட்டுப்பெயர்களும் இடம்பெறும்.
தொகுத்தளிப்பவர்: சூர்யா ஞானேஸ்வர்

மௌத்கல்ய மஹரிஷியின் வரலாறு அந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர் விபரமாக சென்ற இதழில் பார்த்தோம். கோத்ரு ஸ்லோகம் என்று உள்ளதையும் வெளியிட்டால் சிறப்பாக இருக்குமென பலர் கூறியதைக் கருத்தில்கொண்டு மௌத்கல்ய மஹரிஷியின் கோத்ரு சுலோகத்தைக் கொடுத்துள்ளேன். இனி ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சுலோகத்தைக் கொடுத்து விளக்கம் எழுதப்படும்.

மௌத்3க3ல்ய மைத்ரேய மதங்க கோ3த்ர

ஸம்பூ4த ஜாநாம் துரக3ஸ்ச யோநி:

தாராஸ்த்ரயோ தே3வக3ணம் புமாம் ஸ:

ஸைநஸ்ச பட்சி விஷம்ருஷ்டி வ்ருட்ச:    

இந்த இதழில் மதங்க மஹரிஷியின் வரலாறும் வீட்டுப்பெயர்களும் காண்பதற்கு முன்னர் ரிஷியின் வரலாறு காண்போம். 

ரிஷியமுக பர்வதம் என்னும் மலைப்பகுதியில் மதங்க மகரிஷி ஆசிரமம் அமைத்துக் கொண்டு தவம் செய்து வந்தார். அரக்கர்களில் ஒருவனான மயனின் புதல்வனான துந்துபி மகா பலம் பொருந்தியவன். அவனை வாலி வதம் செய்து அவனுடைய உடலை வீசியெறிய அவ்வுடல் மதங்க மகரிஷியின் ஆசிரமத்தின் அருகே விழுந்தது. இதனை அறிந்து கோபங்கொண்ட மகரிஷி ரிஷியமுக பர்வதத்தில் வாலி நுழைந்தால் அவனுடைய தலை வெடித்து சிதறி மாள்வான் என்று சாபமிட்டார். இதனால் வாலி மதங்க மகரிஷி ஆசிரமம் உள்ள பகுதியில் நுழைவதில்லை. வாலியின் பராக்கிரமம் செல்லாத இந்த பகுதியிலிருந்துதான் சுக்கிரீவன் தன் சேனையுடன் தஞ்சம் புகுந்தான். ஸ்ரீராமபிரான் ஆரண்ய வாசத்தின்போது அவரிடம் சரண் அடைந்து அவரால் சகோதரனாக்கப்பட்ட வரலாறு ஆரண்ய காண்டத்தில் நாம் அறிந்ததே. பிரியவர்தன் என்ற கந்தர்வன் செருக்குடன் சுற்றித் திரிந்தபோது அவனை யானையாக போகும்படி சாபமிட்ட தவசீலர் மதங்க மகரிஷி. சபரியும் மதங்க மகரிஷியின் சிஷ்யை ஆவார். இவருடைய ஆசிரமம் அமைந்துள்ள பகுதி மதங்கவனம் எனப்பட்டது. இவருடைய ஆசிரமத்தின் சிஷ்யர் பிறசிஷ்யர்களின் வழி வந்தவர்கள் மதங்க கோத்திரத்தவர்கள்.


மதங்க கோத்திரத்தின் சுலோகம் முன்னர் சொல்லிய மௌத்3க3ல்ய மஹரிஷியின் கோத்திரத்தின் சுலோகமும் ஒன்றாகவே வருகிறது என்பதை உணரலாம்.


மௌத்3க3ல்ய மைத்ரேய மதங்க கோ3த்ர

ஸம்பூ4த ஜாநாம் துரக3ஸ்ச யோநி:

தாராஸ்த்ரயோ தே3வக3ணம் புமாம் ஸ:

ஸைநஸ்ச பட்சி விஷம்ருஷ்டி வ்ருட்ச:  

மதங்க கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : அஸ்வினி

கோ3த்ரு : மதங்க கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : ஹயக்ரீவர்(அஸ்விநி தே3வதாந்)

க3ணம் : தே3வ க3ணம்

வாஹநொ : அஸ்வம் (கொ4டொ)

பட்சி : ராஜாளி (பேரண்டம்)

விருட்சம் : முஸிண்டி3 ஜா2ட் (விஷம் ம்ருஷ்டி)

வாந் : க்4ருணுவாந்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : ஆங்கீரஸ வம்ஸோத்3ப4வ பிரவரம். இந்த பிரவரத்தில் ஆத்ரேய,

அர்ச்சநாநஸ, சாவாஸ்வ ஆகிய கோத்திரங்கள் அடங்கும்.


இங்கே ஆரிஷம் என்பதற்கு சென்ற இதழிலேயே விளக்கம் கொடுத்திருக்கவேண்டும். தவறிவிட்டதால் இந்த இதழில் அதற்கான விளக்கத்தை தருகிறேன். கோத்திரம் என்பதற்கு உறவுமுறை காண்பது என்று பொருள் கொள்ளலாம். அதாவது ஆரோக்கியமான குடும்ப உறவுகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் ஒரு தகவல் களஞ்சியம் என்றும் சொல்லலாம். இது விஞ்ஞான முறைப்படி அமைந்துள்ளதே சிறப்பாகும். ஒரு தவமுதல்வரின் வழியில் அவருக்கு ஆதரவாக விளங்கும் தவசீலர்களைக் கொண்ட குடும்பமே கோத்திரமாகும் என்று நமது முன்னோர்கள் விரித்து பொருள் கூறியுள்ளார்கள். முனிவர்களை மூலப்பிரவரர்களாக ஏற்று அம்முனிவர்கள் மூவரையோ ஐவரையோ எழுவரையோ கொண்டு கோத்திரங்களை நிறுவி அதன்படி குடும்பங்களில் ஆச்சார அனுஷ்டானங்களை கடைப்பிடித்து வாழ்ந்து வரலாயினர். கோத்திரங்கள் மூலத்தலைவருடன் அதனை வளர்த்தவர்களும் அந்த குடும்பத்தின் பிரவரர்கள் எனப்படுவர். அவர்கள் மூவரானால் திரியாரிஷம் எனவும் ஐவரானால் பஞ்சாரிஷம் எனவும் எழுவரானால் ஸப்தாரிஷம் என்றும் மூன்று பிரிவுகளாக வழங்கப்பட்டது. இதில் ஸெளராஷ்ட்ரர்கள் திரியாரிஷம் மற்றும் பஞ்சாரிஷம் மட்டுமே வழக்கில் உள்ளது. ஒரே உறவுமுறையில் பெண் கொடுப்பதும் எடுப்பதும் பின்வரும் சந்ததியில் பிறப்பில் குறைபாடுகள் உருவாகும் அபாயம் உண்டாகிறது என்பதால் ஆரிஷம் பிரவரம் பார்த்து சகோதர உறவு பற்றி தெரிந்து கொண்டு கொள்வினை-கொடுப்பு வினை செய்யவேண்டும். 

மதங்க மஹரிஷி கோ3த்ருக் செரெ கே4ருநாவுந்:

1. கு3ணுவாந்

2. பு2ள்ளாந்

3. நோமுந் (நோம்பு)

4. பு3ட்3டா3ந்

5. து3டு3குச்சிந்

6. அட்3ட3 பு3ட்3டா3ந்

7. ரமணாந்

8. க்ரீடி3ந்

9. ஸ்ரீரங்க3தா3முந்

இந்த கோத்ரத்தைச் சேர்ந்த வேறு வீட்டுப்பெயர் கொண்டவர்கள் இருந்தால் நமக்கு தெரிவிக்கலாம். அடுத்த இதழில் மதங்க மஹரிஷியின் வரலாறும் வீட்டுப்பெயர்களும் இடம்பெறும்.

 

 

User Comments

Question : 3
+
8=