Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Sriseetharama Anchaneyar

 

ஸ்ரீசீதா ராமாஞ்சநேய மடாலயம்
ப4கவத் நமமூஸ் மெல்லேத் ஜநொ
ப4க்திஹோரு தந்த3நி க4ல்நொ  
இது போன்றப் பாடலை பாடிக்கொண்டே உஞ்சவிருத்தி செய்த ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் தமது உஞ்சவிருத்தியை முடித்து ஓய்வு எடுக்க ஒரு தோப்புக்குள் வந்தமர்வது வழக்கம். நாயகி சுவாமிகள் ஓய்வு எடுத்த அந்த தோப்பு இப்போது அனுமார் கோவிலாக உள்ளது. நம் சமூகத்தில் பலரும் வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த கோவிலின் சிறப்பம்சமே உஞ்சவிருத்தி விருந்துதான். அதாவது புரட்டாசி மாதம் எல்லா சனிக்கிழமையும் தசள் எனப்படும் உஞ்சவிருத்தி விருந்து இங்கே நடைபெறுவது சிறப்பம்சமாகும். வேறெங்கும் இது போல சனிதோறும் நடைபெறுவதில்லை. இதனாலேயே இக்கோவில் பிரபலமடைந்து வருகிறது. நம் சமூகத்தில் பல கலாச்சார ரீதியான பழக்கவழக்கங்கள் உண்டு. அதன் அடிப்படையி;ல் இயலாதவர்கள் இந்த கோவிலில் பணத்தைக் கட்டி அவர்கள் கோவிந்தா அட்சம் கோவிந்தா என்று கூவி பிட்சை எடுக்கும் அரிசியினைக் கொண்டுவந்து கொடுத்து தசள் விருந்தில் பங்கெடுத்துக் கொண்டு வருகின்ற அனைவருக்கும் வயிறார சாப்பிட வைக்கும் சிறந்த பணி இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.
 
மதுரை காமராசர் சாலையி;ல் தெப்பக்குளம் நோக்கி செல்லும்போது வலதுபுறமுள்ள அலங்கார் தியேட்டருக்குப் பின்புறமுள்ள சந்தில் மதுரை வேதாத்யயன சபையினரால் நிர்வகிக்கப்படும் இக்கோவில் அருள்மிகு ஸ்ரீசீதா ராமாஞ்சநேய மடாலயம் என்ற பெயரில் செயல்படுவதைக் காணலாம். இந்த மடாலயம் மதுரை வேதாத்யயன சபையினரால் நிர்வகிக்கப் படுகிறது. 
இப்போது வேதம் பயிலும் ஆர்வமின்மையால் பயிற்றுவிக்கும் பணி தொடரவில்;லை என்பதை எடுத்துச் சொன்ன சபை செயலாளர் டி.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் இந்த மடாலயம் கோவிலான வரலாற்றைக் கேட்டபோது அவர் கூறிய விபரங்கள் வியப்பில் ஆழ்த்தியது.
வேதங்களை கற்பிப்பதும் அத்யயனம் செய்வதும் இச்சபையினரின் செயல்பாட்டின் முக்கிய அங்கமாகும். நா.ரெ. கோபாலய்யர்ää வி.கே. நன்னய்யர்ää ஜே.வி. ரங்காச்சார்யாää சி.ஆர்.ராமநாதய்யர்ää கந்தாள்ளு. ரா.வெங்கடாசலபதிää குட்டி. பாலுசாமிää பி.டி.அனந்தாச்சாரிää புள்ளா.நா.வெங்கடாசலபதி ஆகிய பெரியோர்களால் 1924 ஜனவரி 4ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த வேதாத்யயன சபை பின்னர் முறைப்படி 1932 டிசம்பர் 16ஆம் நாளன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சபைக்கு ஸ்ரீசதானந்தர் மடாலயம் எனும் சொந்தக் கட்டிடமும் இருந்தது. ஒரு குடும்பக் கோவிலாக இருந்த இந்த இடமும் கோவிலும் 1949ஆம் ஆண்டில் வேதாத்யயன சபைக்கு சாசனம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 
வேதாத்யயன சபையினர் மதுரை ஸெளராஷ்ட்ர சபைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவம் மற்றும் இதர புறப்பாடுகளின்போது பெருமாளின் பின்னே செல்லும் திருக்கோஷ்டியினர். நம் சமூக மக்களுக்கு வேதம் பயிற்றுவிக்கும் பணியினை இச்சபையினர் செய்து கொண்டு வந்துள்ளனர். மதுரை ஸெளராஷ்ட்ர சபைத் தலைவரோடு ஏற்பட்ட சிறு பிணக்கின் காரணமாக பெருமாளின் பின் செல்வதை நிறுத்திக் கொண்டு இந்த மடாலயத்தை புதுப்பிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியே 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற மகாசம்ரோட்சண திருப்பணி. 
இன்றைய தினம் அதுதான் நூதன ஸ்ரீசீதாராம ஆஞ்சநேய மடாலயமாக கட்டப்பட்டு 2001 பிப்ரவரி 4ஆம் நாள் அஞ்சலி அனுமாருக்கு கர்ப்பகிரகமும் அதன்மேல் 17அடி உயரத்தில் மூலஸ்தான நிலைக்கோபுரமும் கட்டப்பட்டு சொர்ண விமானமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 
மேலும் ஸ்ரீசீதாராம லெட்சுமணர்ää ஸ்ரீசந்தான கிருஷ்ணன்ää ஸ்ரீவித்யா கணபதிää ஸ்ரீஐயப்ப சுவாமி மற்றும் ஸெளராஷ்ட்ர ஆழ்வார் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமி ஆகியோhக்கு முறையே தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டு மகாசம்ரோட்சணம் பிரமாண்டமான முறையி;ல் நடந்துள்ளது. 
இந்த சபையில் வேதம் பயின்ற நம் சமூக அன்பர்கள் நமது சமூகத்தின் ஆலயங்களான பிரசன்ன வெங்கடேஸ்வரப் பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீனிவாசப் பெருமாள் தேவஸ்தானம் மற்றும் இதர கோவில்களில் வேதாத்யயனம் செய்து வருகின்றனர். 
இக்கோவிலில் ஸ்ரீராமநவமிää ஆவணி அவிட்டம்ää அனுமார் ஜெயந்திää சமஷ்டி உபநயனம்ää அமாவாசை அபிஷேகம் போன்ற வைபவங்கள் முறையாக நடைப்பெற்று வருகிறது. சமூக அன்பர்கள் இக்கோவிலுக்கு விஜயம் செய்து அனுமாரின் அனுக்கிரகம் பெறுமாறு அழைக்கிறார்கள் கோவில் நிர்வாகிகள். 
கே.எம்.ராஜேந்திரன் தலைவராகவும் டி.வி. பாலாஜி பாபு உபதலைவராகவும் கே.ஆர்.ராஜா பொருளாளராகவும் கே.எஸ்.எம். விஜய் கண்ணா உதவி காரியதரிசியாகவும் டி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கௌரவ காரியதரிசி டிரஷ்டியாகவும் இருந்து சிறப்பாக செயல்படுத்தி வரும் வேதாத்யயன சபைக்கு எல்.வி. பாஸ்கர்ää எம்.ஆர்.சீனிவாசன்ää ஆர்.டி.சரவணன்ää என்.ஆர்.சைலேஷ்குமார்ää எம்.எஸ். அருண்பிரசாத்ää எம்.கே. சுரேந்திரன் ஆகியோர் நிர்வாகக் குழுவில் உள்ளனர் இவர்கள் பணி சிறக்க ஸெளராஷ்ட்ர டைம் உளமார வாழ்த்துகிறது.

ஸ்ரீசீதா ராமாஞ்சநேய மடாலயம்

 

ப4கவத் நமமூஸ் மெல்லேத் ஜநொ

ப4க்திஹோரு தந்த3நி க4ல்நொ  

இது போன்றப் பாடலை பாடிக்கொண்டே உஞ்சவிருத்தி செய்த ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் தமது உஞ்சவிருத்தியை முடித்து ஓய்வு எடுக்க ஒரு தோப்புக்குள் வந்தமர்வது வழக்கம். நாயகி சுவாமிகள் ஓய்வு எடுத்த அந்த தோப்பு இப்போது அனுமார் கோவிலாக உள்ளது. நம் சமூகத்தில் பலரும் வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த கோவிலின் சிறப்பம்சமே உஞ்சவிருத்தி விருந்துதான். அதாவது புரட்டாசி மாதம் எல்லா சனிக்கிழமையும் தசள் எனப்படும் உஞ்சவிருத்தி விருந்து இங்கே நடைபெறுவது சிறப்பம்சமாகும். வேறெங்கும் இது போல சனிதோறும் நடைபெறுவதில்லை. இதனாலேயே இக்கோவில் பிரபலமடைந்து வருகிறது. நம் சமூகத்தில் பல கலாச்சார ரீதியான பழக்கவழக்கங்கள் உண்டு. அதன் அடிப்படையில் இயலாதவர்கள் இந்த கோவிலில் பணத்தைக் கட்டி அவர்கள் கோவிந்தா அட்சம் கோவிந்தா என்று கூவி பிட்சை எடுக்கும் அரிசியினைக் கொண்டுவந்து கொடுத்து தசள் விருந்தில் பங்கெடுத்துக் கொண்டு வருகின்ற அனைவருக்கும் வயிறார சாப்பிட வைக்கும் சிறந்த பணி இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.

 

மதுரை காமராசர் சாலையில் தெப்பக்குளம் நோக்கி செல்லும்போது வலதுபுறமுள்ள அலங்கார் தியேட்டருக்குப் பின்புறமுள்ள சந்தில் மதுரை வேதாத்யயன சபையினரால் நிர்வகிக்கப்படும் இக்கோவில் அருள்மிகு ஸ்ரீசீதா ராமாஞ்சநேய மடாலயம் என்ற பெயரில் செயல்படுவதைக் காணலாம். இந்த மடாலயம் மதுரை வேதாத்யயன சபையினரால் நிர்வகிக்கப் படுகிறது. 

இப்போது வேதம் பயிலும் ஆர்வமின்மையால் பயிற்றுவிக்கும் பணி தொடரவில்லை என்பதை எடுத்துச் சொன்ன சபை செயலாளர் டி.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் இந்த மடாலயம் கோவிலான வரலாற்றைக் கேட்டபோது அவர் கூறிய விபரங்கள் வியப்பில் ஆழ்த்தியது.


வேதங்களை கற்பிப்பதும் அத்யயனம் செய்வதும் இச்சபையினரின் செயல்பாட்டின் முக்கிய அங்கமாகும். நா.ரெ. கோபாலய்யர் வி.கே. நன்னய்யர் ஜே.வி. ரங்காச்சார்யா சி.ஆர்.ராமநாதய்யர் கந்தாள்ளு. ரா.வெங்கடாசலபதி குட்டி. பாலுசாமி பி.டி.அனந்தாச்சாரி புள்ளா.நா.வெங்கடாசலபதி ஆகிய பெரியோர்களால் 1924 ஜனவரி 4ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த வேதாத்யயன சபை பின்னர் முறைப்படி 1932 டிசம்பர் 16ஆம் நாளன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சபைக்கு ஸ்ரீசதானந்தர் மடாலயம் எனும் சொந்தக் கட்டிடமும் இருந்தது. ஒரு குடும்பக் கோவிலாக இருந்த இந்த இடமும் கோவிலும் 1949ஆம் ஆண்டில் வேதாத்யயன சபைக்கு சாசனம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 


வேதாத்யயன சபையினர் மதுரை ஸெளராஷ்ட்ர சபைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவம் மற்றும் இதர புறப்பாடுகளின்போது பெருமாளின் பின்னே செல்லும் திருக்கோஷ்டியினர். நம் சமூக மக்களுக்கு வேதம் பயிற்றுவிக்கும் பணியினை இச்சபையினர் செய்து கொண்டு வந்துள்ளனர். மதுரை ஸெளராஷ்ட்ர சபைத் தலைவரோடு ஏற்பட்ட சிறு பிணக்கின் காரணமாக பெருமாளின் பின் செல்வதை நிறுத்திக் கொண்டு இந்த மடாலயத்தை புதுப்பிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியே 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற மகாசம்ரோட்சண திருப்பணி. 


இன்றைய தினம் அதுதான் நூதன ஸ்ரீசீதாராம ஆஞ்சநேய மடாலயமாக கட்டப்பட்டு 2001 பிப்ரவரி 4ஆம் நாள் அஞ்சலி அனுமாருக்கு கர்ப்பகிரகமும் அதன்மேல் 17அடி உயரத்தில் மூலஸ்தான நிலைக்கோபுரமும் கட்டப்பட்டு சொர்ண விமானமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீசீதாராம லெட்சுமணர், ஸ்ரீசந்தான கிருஷ்ணன், ஸ்ரீவித்யா கணபதி ஸ்ரீஐயப்ப சுவாமி மற்றும் ஸெளராஷ்ட்ர ஆழ்வார் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமி ஆகியோர்க்கு முறையே தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டு மகாசம்ரோட்சணம் பிரமாண்டமான முறையில் நடந்துள்ளது. நாயகி சுவாமிகள் நின்றவண்ணம் இருப்பது இங்கே மட்டுமே!


இந்த சபையில் வேதம் பயின்ற நம் சமூக அன்பர்கள் நமது சமூகத்தின் ஆலயங்களான பிரசன்ன வெங்கடேஸ்வரப் பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீனிவாசப் பெருமாள் தேவஸ்தானம் மற்றும் இதர கோவில்களில் வேதாத்யயனம் செய்து வருகின்றனர். 

 

இக்கோவிலில் ஸ்ரீராமநவமி ஆவணி அவிட்டம் அனுமார் ஜெயந்தி சமஷ்டி உபநயனம் அமாவாசை அபிஷேகம் போன்ற வைபவங்கள் முறையாக நடைப்பெற்று வருகிறது. சமூக அன்பர்கள் இக்கோவிலுக்கு விஜயம் செய்து அனுமாரின் அனுக்கிரகம் பெறுமாறு அழைக்கிறார்கள் கோவில் நிர்வாகிகள். 


கே.எம்.ராஜேந்திரன் தலைவராகவும் டி.வி. பாலாஜி பாபு உபதலைவராகவும் கே.ஆர்.ராஜா பொருளாளராகவும் கே.எஸ்.எம். விஜய் கண்ணா உதவி காரியதரிசியாகவும் டி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கௌரவ காரியதரிசி டிரஷ்டியாகவும் இருந்து சிறப்பாக செயல்படுத்தி வரும் வேதாத்யயன சபைக்கு எல்.வி. பாஸ்கர் எம்.ஆர்.சீனிவாசன் ஆர்.டி.சரவணன் என்.ஆர்.சைலேஷ்குமார் எம்.எஸ். அருண்பிரசாத் எம்.கே. சுரேந்திரன் ஆகியோர் நிர்வாகக் குழுவில் உள்ளனர்.  இவர்கள் பணி சிறக்க ஸெளராஷ்ட்ர டைம் உளமார வாழ்த்துகிறது.

 

User Comments
R. Vivehaa Bharathi
In Paramathi Namakkal Dt We are decided to Start sourastra Bank for Econimically Poor People to get loan facility thriugh our bank with low cost of Interest. So All our people give suffort for that
Editor Sourashtratime e-journal
madurem sourashtra co-op. Bank meni onte seththe. thumi hollo ivarnun kerli harumbam keruvo.
R.R.Dinakaran
Yells Sri Seetha RamaAnjaneya Madalayam lot set he?
Information
Name
Comments
 
Verification Code
3 + 9 =