ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

iLam IAS ...

இளம் IAS...

ஈன்றப் பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்

என்ற வள்ளுவம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவரால்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்லெனும் சொல்.

என்ற குறள் வழிக்கு இலக்கியம் அமைக்கத் தெரியாமலா போய்விடும். நம் சமூகப்பிரமுகர்கள் உறவினர்கள் நண்பர்கள் பத்திரிகையாளர்கள் என்று ஏகமாக வந்து எனது மகன் உமேஷை வாழ்த்தி பாராட்டுவது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார் கேசவன். 

 

மதுரையில் கொவ்ண்டாந் (மேல்நாட்டாண்மை) என்ற வீட்டுப்பெயர் கொண்ட கேசவன்பானுமதி தம்பதியரின் இளைய மகன் உமேஷ் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்று IAS தரவரிசையில் 77ஆம் இடத்தைப் பிடித்து மாபெரும் சாதனைப் படைத்துள்ளார். இந்த இளம்வயதில் நேரடியாக IAS தேர்ச்சிப் பெற்ற முதல் ஸெளராஷ்ட்ரர் இவராகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அவரைக்காண நேரில் சென்ற போது அவருடைய நடவடிக்கைகள் ஆச்சரியப்பட வைத்தது. எந்த பந்தா இல்லாமல் இப்போதுதான் கல்லூரி படிப்பை முடித்தவர் போல மிகமிகச் சாதரணமாக இருந்தார். வீட்டிற்கு வந்திருந்த விருந்தினரோடும் தன்னைப்பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கும் நண்பர்களிடமும் பேசிக்கொண்டே என்னிடம் பேட்டிக்கொடுத்த பாங்கு பாராட்டும்படி இருந்தது.


இவருடைய தந்தை கேசவன் ஓய்வுப்பெற்ற இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர். தாயார் பானுமதி சிண்டிகேட் வங்கி ஊழியர். இவருடைய மூத்த மகன்  ஓம்கார் கோவையில் உள்ள CTSல் பணிபுரிந்து வருகிறார். உமேஷ் தனது ஆரம்பப்பள்ளிப் படிப்பை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோட்டிலும் சேலம் பாலபாரதி பள்ளியில் பிளஸ் 2 படிப்பையும் முடித்துவிட்டு கோவை பி.எஸ்.ஜி. காலேஜ் ஆப் டெக்னாலஜியில் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தனது கனவான IAS படிப்பிற்கு தயார்படுத்தத் தொடங்கினார்.

 

டில்லியில் மூன்றுமாதம் பயிற்சி வகுப்புக்களில் சேர்ந்து படித்து தேர்வு எழுதி முதல் முறையாக வெற்றியை தவறவிட்டவர் சிறிதும் கலங்காமல் மீண்டும் அடுத்த முறை நன்றாக தயார்படுத்திக் கொண்டு இரண்டாவது முறையாக தேர்வு எழுத அப்போதும் வெற்றியை சந்திக்காமல் போகவே சிறிதும் விரக்தியடையாமல் மூன்றாவது முறையாக தேர்வு எழுதி வெற்றியடைந்தார். அதிலும் தரவரிசையில் இந்திய அளவில் 77வது இடத்தைப் பிடித்தார்.


இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் தனது மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் இப்போதுதான் படிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது போன்ற நிலையில் எல்லோரிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார். சிறுவயது முதல் நீ பெரிய கலெக்டாராக வேண்டும் என்று தனது தாய்மாமன் ரவீந்திரன் சொல்வதுண்டாம். அது மனதில் நன்றாக விருட்சம்போல ஊன்றி விட்டது. பின்னர் தன்னுடைய பள்ளிநாட்களிலும் IAS கனவைத் தூண்டிவிட அது துளிர்விட்டு வளரத் தொடங்கியது. கல்லூரியில் அருண்குமார் என்ற நண்பர் தன்னை சிவில் சர்வீஸ் தேர்வை எழுதத் தயார் செய்ய ஆலோசனைகள் வழங்கினார். மேலும் தன்னுடைய தாய்மாமன் ரவீந்திரன், ஆட்சியாளராக இருந்த டி.என். ராமநாதன் மற்றும் ஜவஹர் ஆகியோரிடமும் ஆலோசனைப் பெற அழைத்துச் சென்றதுண்டு. அவர்களும் இவருக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்கள். இந்த தருணத்தில் அவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


புத்தகங்களை படிப்பதில் அதிகமாக தன்னுடைய நேரத்தை செலவிடும் இவர் சுஜாதாவின் நவீன இந்தியா இளம் IAS அதிகாரிகள் கையில் உள்ளது என்ற ஒரு வாசகத்தை திருவாசகமாக கொண்டார். அதன் வெளிப்பாடுதான் இந்த வெற்றிக்குக் காரணமானது என்கிறார். ஏழைகளின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் விழிப்புணர்ச்சிக்கும் தன்னை ஒப்படைப்பதையே தேசபத்தி என்று காந்தியடிகள் சொன்ன வார்த்தைக்கு உயிரோட்டம் கொடுக்க விரும்புவதாகக் கூறும்போது அவருடைய தன்னடக்கம் பணிவு சேவாமனப்பான்மை ஆகியவற்றைக் காண முடிந்தது. 

 

இவர் படிப்பதில் மட்டுமின்றி எழுதுவதிலும் ஆர்வமிகுந்தவர் என்பதற்கு அவருடைய www.theumeshblog.blogspot.com ஒன்றே சான்று. அவரிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் விடைப்பெற்று கிளம்பும் முன் விரைவில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு பிறந்த மண்ணுக்கே சேவை செய்ய வரவேண்டும் என வாழ்த்தி கைகுலுக்கி விடைப்பெற்றேன்.  

                                                             – சூரியாஞானேஸ்வர்

 

User Comments

The humility of a celebrity always wins admiration. Congrats, once again, Mr. Umesh. India, and \"amre samugam\" in especial, looks forward to your developmental services after your training. Our hearty wishes for your thumping success in all your endeavours.

Govardanan Laguduva
Question : 1
+
5=