Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
kon-konak

மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் நம் சமூகத்தவர்கள் பெரும்பான்மை இருந்தும் அரசியல் கட்சிகள் நம் சமூகத்தை சார்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்திய சில வார்டுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மொத்தம் நான்கு பேர்தான். அவர்களில் ஒருவர்தான் திரு. எஸ்.எஸ் சரவணன். இவருடைய வீட்டுப்பெயர் சோமங்கிளி. இவருடைய தந்தை திரு. சுப்பிரமணியன் தாயார் திருமதி. இந்துமதி இந்த தம்பதியருக்கு 15-09-1975 அன்று பிறந்தார்.


 இவருக்கு திருமணமாகி விட்டது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.


சரவணன் ஒரு இளம் பொறியியல் பட்டதாரி. இவர் சிவில் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் ஸ்ட்ரக்சர்ஸ் (M.Tech., Structures)  பிரிவிலும் தேர்ச்சிப் பெற்று கட்டிடத்துறையில் சிறந்து விளங்குகிறார். சட்டத்துறையில் LLB படித்துவரும் இவர் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 73வது வார்டுக்கு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாமன்ற வேலைக்குழு உறுப்பினராகவும் இருக்கும் இவர் கழகத்தின் வட்டச் செயலாளராகவும் இருக்கிறார். 


சமீபத்தில் நடைபெற்ற கூட்டுறவு வங்கி தேர்தலில் நம் ஸெளராஷ்ட்ர கூட்டுறவு வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சிப்பணியிலும் சமூகப்பணியிலும் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டுவரும் இவர் பொறுமையுடனும் அமைதியாக அணுகும் முறையிலும் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி வருகிறார். இவரைப் போன்ற நம் சமூக இளைஞர்கள் அரசியலில் சிறப்பாக பணியாற்றி பற்பல பதவிகளைப் பெற்று நம் சமூகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். அவ்வகையில் சரவணன் நல்ல முன்னுதாரணமாக விளங்குவார் என்று எதிர்பார்க்கலாம். இன்று மாமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் எதிர்காலத்தில் சட்ட மன்ற உறுப்பினர் அமைச்சர் என்று பல பதவிகள் வகிக்க சமூக மக்களின் சார்பில் வாழ்த்துகிறோம்.


இவரை தொடர்பு கொள்ள இவருடைய கைப்பேசி எண்: 9942417649 அணுகலாம். 

E Mail: saravananss7573@gmail.com

  sssmc7573@gmail.com 

 

User Comments
சி.ஆர்.சாரநாத்
பார்த்தேன்..படித்தேன்..ரசித்தேன்..சுவைத்தேன்...அம்புட்டும் தேன்..தேன்..தேன்..
Information
Name
Comments
 
Verification Code
3 + 9 =