ad1
askinAk nava orsu subha nanthinin

college...Shreyangam

 

ஸ்ரேயங்க3ம்:
ஸெளராஷ்ட்ரக் கல்லூரி தேர்தல்!
மதுரையி;ல் செயல்பட்டு வரும் நம் சமூகக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸெளராஷ்ட்ரக் காலேஜ் கௌன்சில் தேர்தல் வருகின்ற 24ஆம் நாள் நடைபெறுகிறது. தற்போதைய நிர்வாகிகளால் சீர்க்குலைந்துப் போன கல்லூரியின் செயல்பாடு குறித்து பல்வேறு அவதூறுகள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளது. அது போக சமூக ஆர்வலர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் கர்வத்துடன் சர்வாதிகாரப் போக்கில் செயல் பட்டுவரும் இந்த நிர்வாகத்தை வேரோடு தூக்கிவிட்டு புதிய நிர்வாகம் வரவேண்டும் என்பதில் ஆர்வலர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். 
இதற்காக களமிறங்கி செயல்படுவோர் அனைத்து பதவிகளுக்கும் வலுவான போட்டியை உருவாக்கியுள்ளனர். இந்த போட்டியில் வெல்வது யார்? பழைய நிர்வாகிகளா? இல்லை புதிதாக களமிறங்கியிருக்கும் திறமைசாலிகளா என்பதை கௌன்சில் உறுப்பினர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். என்னதான் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் வெற்றி வாய்ப்பினைத் தக்கவைத்துக் கொள்ள தற்போதைய நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது கடைசி நேரத்தில் அவர்கள் உறுப்பினர் எண்ணிக்கையை பலப்படுத்தியிருப்பது போட்டியை சமாளிக்கும் உத்தி. ஆனால் இம்முறை உறுப்பினர்கள் (அதாவது தங்களது சொந்த பணத்தைக் கட்டி சேராத உறுப்பினர்களே அதிகம்!) கல்வி நிறுவனத்தின் மாண்பைக் காக்க முற்படவேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பு. பாக்கெட் ஓட் என்பதுபோல குடும்ப நண்பர்கள் உறவினர்கள் என்று ஏகமாக சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு மப்ளெ ஸங்கி3ரியொää மமொ ஸங்கி3ரியொää ஸிங்க3தி செர்சிரியொ என்று வாக்களிக்கும் பாமரத்தனத்தை விடுத்து காலேஜ் இவர்கள் பிடியி;லிருந்து விடுபடவேண்டும் என்பதை விட காப்பாற்றப்பட வேண்டும் என்று மனதில் கொண்டு சிந்தித்து வாக்களித்தால் எதிர்பார்க்கும் மாற்றம் உருவாக வாய்ப்புக் கிடைக்கும். 
தலைமை பதவிக்கு ஐவர்ää காரியதரிசி ஸ்;தானத்திற்கு நால்வர்ää பொருளாளர் பதவிக்கு நால்வர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பத்தொன்பது என்று முப்பத்து இரண்டு பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். சபாஷ் சரியான போட்டிதான். ஆனால் குறிப்பிட்ட சில குடும்பத்தினரின் ஆக்கிரமிப்பு சந்தி சிரிக்க செய்துள்ளது என்றால் யாராலும் மறுக்கமுடியாது. இந்த உண்மையை மனதில் கொண்டு அந்த சில குடும்பங்கள் குடும்ப வாரிசுகள் என்று ஏகமாக தவிர்த்து சமூகத்தின் பொது சொத்து பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களிக்க முன்வாருங்கள். 
இதுவரை யாரும் சமூகப் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்க முன்வரவில்லை. தங்களது செயல்பாடு குறித்த விளக்கமோ தாங்கள் பதவிக்கு வந்தபின்பு எப்படி செயல்பட போகிறோம் என்பதையோ விளக்கமாக சொல்ல முற்படவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயமாகும். சொல்லப் போனால் இன்றைய பிரமுகர்கள் பலருக்கும் சமூகத்தில் பத்திரிகை இருப்பதே தெரியாது. இவர்கள் சமூக ஸ்தாபனங்களில் செயல்பட வருகிறார்கள் என்றால் நகைப்பாகத்தான் இருக்கிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்று செயல்படும் நம் ஸெளராஷ்ட்ர வழக்கறிஞர்களில் பலருக்கும் செய்திகளை சமூகப்பத்திரிகைகள் வாயிலாக வெளியிட முற்படவேண்டும் என்ற அடிப்படை இங்கிதம்கூட தெரியவில்லை. நீயா நானா என்று ஈகோ வளர்த்துக் கொள்வதில் சமூகத்திற்கு எந்த லாபமும் இல்லை என்பதை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.
சமூக ஸ்தாபனங்கள் நல்லமுறையி;ல் இயங்கவேண்டும். எவ்வித களங்கமும் நிர்வாகத்தால் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் இதுவரை களம் காணாத புதிய திறமைசாலிகளை வரவேற்பதில் தயக்கம் காட்டாமல் முற்றிலும் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுத்து நிர்வகிக்க அனுப்பி வையுங்கள். மாற்றிக் காட்டினால் தானே மாற்றத்தைக் காணமுடியும். 

ஸ்ரேயங்க3ம்:


Vol.5 16th September  2017 Issue: 2


ஸெளராஷ்ட்ரக் கல்லூரி தேர்தல்!

மதுரையில் செயல்பட்டு வரும் நம் சமூகக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸெளராஷ்ட்ரக் காலேஜ் கௌன்சில் தேர்தல் வருகின்ற 24ஆம் நாள் நடைபெறுகிறது. தற்போதைய நிர்வாகிகளால் சீர்க்குலைந்துப் போன கல்லூரியின் செயல்பாடு குறித்து பல்வேறு அவதூறுகள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளது. அது போக சமூக ஆர்வலர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் கர்வத்துடன் சர்வாதிகாரப் போக்கில் செயல் பட்டுவரும் இந்த நிர்வாகத்தை வேரோடு தூக்கிவிட்டு புதிய நிர்வாகம் வரவேண்டும் என்பதில் ஆர்வலர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். 

 

இதற்காக களமிறங்கி செயல்படுவோர் அனைத்து பதவிகளுக்கும் வலுவான போட்டியை உருவாக்கியுள்ளனர். இந்த போட்டியில் வெல்வது யார்? பழைய நிர்வாகிகளா? இல்லை புதிதாக களமிறங்கியிருக்கும் திறமைசாலிகளா என்பதை கௌன்சில் உறுப்பினர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். என்னதான் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் வெற்றி வாய்ப்பினைத் தக்கவைத்துக் கொள்ள தற்போதைய நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது கடைசி நேரத்தில் அவர்கள் உறுப்பினர் எண்ணிக்கையை பலப்படுத்தியிருப்பது போட்டியை சமாளிக்கும் உத்தி. ஆனால் இம்முறை உறுப்பினர்கள் (அதாவது தங்களது சொந்த பணத்தைக் கட்டி சேராத உறுப்பினர்களே அதிகம்!) கல்வி நிறுவனத்தின் மாண்பைக் காக்க முற்படவேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பு. பாக்கெட் ஓட் என்பதுபோல குடும்ப நண்பர்கள் உறவினர்கள் என்று ஏகமாக சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு மப்ளெ ஸங்கி3ரியொ, மமொ ஸங்கி3ரியொ, ஸிங்க3தி செர்சிரியொ என்று வாக்களிக்கும் பாமரத்தனத்தை விடுத்து காலேஜ் இவர்கள் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதை விட காப்பாற்றப்பட வேண்டும் என்று மனதில் கொண்டு சிந்தித்து வாக்களித்தால் எதிர்பார்க்கும் மாற்றம் உருவாக வாய்ப்புக் கிடைக்கும். 

 

தலைமை பதவிக்கு ஐவர், காரியதரிசி ஸ்தானத்திற்கு நால்வர், பொருளாளர் பதவிக்கு நால்வர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பத்தொன்பது என்று முப்பத்து இரண்டு பேர் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். சபாஷ் சரியான போட்டிதான். ஆனால் குறிப்பிட்ட சில குடும்பத்தினரின் ஆக்கிரமிப்பு சந்தி சிரிக்க செய்துள்ளது என்றால் யாராலும் மறுக்கமுடியாது. இந்த உண்மையை மனதில் கொண்டு அந்த சில குடும்பங்கள் குடும்ப வாரிசுகள் என்று ஏகமாக தவிர்த்து சமூகத்தின் பொது சொத்து பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களிக்க முன்வாருங்கள். 

 

இதுவரை யாரும் சமூகப் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்க முன்வரவில்லை. தங்களது செயல்பாடு குறித்த விளக்கமோ தாங்கள் பதவிக்கு வந்தபின்பு எப்படி செயல்பட போகிறோம் என்பதையோ விளக்கமாக சொல்ல முற்படவில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயமாகும். சொல்லப் போனால் இன்றைய பிரமுகர்கள் பலருக்கும் சமூகத்தில் பத்திரிகை இருப்பதே தெரியாது. இவர்கள் சமூக ஸ்தாபனங்களில் செயல்பட வருகிறார்கள் என்றால் நகைப்பாகத்தான் இருக்கிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் என்று செயல்படும் நம் ஸெளராஷ்ட்ர வழக்கறிஞர்களில் பலருக்கும் செய்திகளை சமூகப்பத்திரிகைகள் வாயிலாக வெளியிட முற்படவேண்டும் என்ற அடிப்படை இங்கிதம்கூட தெரியவில்லை. நீயா நானா என்று ஈகோ வளர்த்துக் கொள்வதில் சமூகத்திற்கு எந்த லாபமும் இல்லை என்பதை புரிந்து கொண்டு செயல்படவேண்டும்.

 

சமூக ஸ்தாபனங்கள் நல்லமுறையில் இயங்கவேண்டும். எவ்வித களங்கமும் நிர்வாகத்தால் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் இதுவரை களம் காணாத புதிய திறமைசாலிகளை வரவேற்பதில் தயக்கம் காட்டாமல் முற்றிலும் புதிய நிர்வாகத்தை தேர்ந்தெடுத்து நிர்வகிக்க அனுப்பி வையுங்கள். மாற்றிக் காட்டினால் தானே மாற்றத்தைக் காணமுடியும். 

 

User Comments

Question : 1
+
9=