ad1
askinAk nava orsu subha nanthinin

therinthu koLvom

இவரை தெரிந்து கொள்வோம்

நெற்றியில் திருநீரும் பட்டையாக குங்குமப்பொட்டும் இட்டு பார்த்தவுடன் கைகூப்பி வணக்கம் சொல்லத் தோன்றும் ஆஜானுபாவமான தோற்றம் கொண்ட ஒருவர் சரளமாக மேடையில் தமிழ் பேசி அனைவரையும் கவர்கிறார் என்றால் அது நம் எம். எஸ். ராமலிங்கம் தான். இவர் தஞ்சையில் ஸெளராஷ்ட்ரர்கள் அதிகமாக வாழ்ந்து வரும் மகரநோம்புச்சாவடி என்னும் மானம்புச்சாவடி பகுதியில் இருக்கும் மாணிக்கா சீனிவாசன்-பத்மாவதி தம்பதியர்க்கு பிறந்தவர்தான். இவர் கல்லூரியில் புகுமுக வகுப்பு (PUC) வரை படித்தவர். குலத்தொழிலான பட்டுஜவுளியில் ஈடுப்பட்டு ஜீவனம் நடத்தி வந்தார். இவருக்கு நம் சமூகப்பணியிலும் அரசியலிலும் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தஞ்சை ஸெளராஷ்ட்ர மக்களுக்கு தன்னாலான சேவைகளை செய்து வந்தார்.

 

பாரதீய ஜனதா கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டு அரசியல் வாழ்க்கையில் இவரது பணியைத் தொடர்ந்தார். மேடையில் சிறப்பாக தமிழைப் பேசும் இவருக்கு எல்லா தரப்பினரிடமும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. தஞ்சையில் இரண்டு முறை சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் பொதுக்காரியதரிசியாக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

 

தற்பொழுது இவர் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக இருக்கிறார். இவரைப்பற்றிய மேலும் அறிந்துகொள்ளவும் இவரது உதவியைப் பெற விரும்புவோரும் தொடர்பு கொள்ள வேண்டிய எண். 94431 35120. இவரது Mail ID: msrbjp@gmail.com

User Comments

Question : 1
+
5=