Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
enu esOs nA.rA.pa

நாவலாசிரியர்  நா.ரா.ப.

பிரபல நாவலாசிரியரும் எனது நண்பருமான தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருபுவனத்தில் பிறந்து மதுரையில் நம்மோடு கைகோர்த்து சிரித்த முகத்துடன் பழகிக்கொண்டிருந்தவர் தான் திரு. நா.ரா.பண்டரிநாதன். இவர் எழுதிய மண்ணின் புதல்வர்கள் நாவல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் இவர் எழுதிய காலமெல்லாம் காத்திருப்பேன், நெஞ்சில் பூத்த மலர்கள் போன்ற நாவல்கள் பிரபலமானவை. இவர் எழுதிய தமிழர் வரலாறு தமிழர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகவில்லை. ஜெயகாந்தனும் இவரும் ஒரே அறையில் சென்னையில் தங்கியிருந்தவர்கள் என்பதை விட ஒரே கொள்கையில் வாழ்ந்தவர்கள் என்றே சொல்லலாம். தமிழ் எழுத்துலகில் புரட்சி எழுத்தாளராக இருந்தார். 

 

1984ஆம் ஆண்டில் ஸெளராஷ்ட்ர டைம் என்ற மாத இதழை நான் தொடங்கி நடத்தவேண்டும் என்பதில் மிகவும் அக்கறைக் காட்டியதுடன் தொடர்ந்து நடத்துவதற்கான வழிமுறைகள் ஆலோசனைகள் பல கூறி உற்சாகப்படுத்திய நண்பர். இவருடைய உந்துதலால்தான் நான் ஸெளராஷ்ட்ரடைம் தொடங்கினேன் என்பதுதான் உண்மை. இவருடன் சேர்ந்து இந்திய முரசு என்ற தினசரியிலும் புது வாழ்வு என்ற மாத இதழிலும் என்னை பணிபுரிய செய்துள்ளார்.  

 

இவர் ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். கவி வேங்கடசூரி சுவாமிகளின் ஸெளராஷ்ட்ர ஸங்கீத ராமாயணத்தில் முதல் மூன்று காண்டங்களை வெளியிட்டார். பின்னர் சங்கு எஸ்.எஸ்.ராம் அவர்களின் ஸ்ரீத்விந் என்னும் ஸெளராஷ்ட்ர மொழிப்பெயர்ப்பான திருக்குறளை வெளியிடும் முயற்சியில் ஈடுப்பட்டு முதல் அதிகாரம் வரை அச்சிலேற்றினார். தொடர்ந்து வந்த சில கசப்பான சம்பவங்களால் மன வேதனையுடன் அம்முயற்சிகளை அப்படியே நிறுத்திக் கொண்டார்.  பின்னர் சில ஆண்டுகள் சென்னையில் மணிமேகலை பிரசுரம் ஆசிரியர் குழுமத்தில் ஒருவராக இருந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். வயது மூப்பின் காரணமாக சமீபத்தில் உடல்நலம் குன்றி தமது 84வது வயதில் மதுரையில் சென்ற 24-03-2015 அன்று காலமானார். 

 

நட்பின் அடையாளமாக மூத்த ஸெளராஷ்ட்ர எழுத்தாளரான அமரர் பண்டரிநாதன் அவர்களை கௌரவிக்கும் விதமாக அவருடைய படத்தையும் அவரைப் பற்றிய சிறு செய்தியினையும் வெளியிட்டு பெருமிதம் கொள்கிறோம். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 5 =