Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni-kaLatni Feb 1/17

மதுரை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி.சுப்புராமன் அவர்களின் புதல்வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்பாபு - ஷகிலா(எ)ஷோபனா அவர்களுடைய செல்வப்புத்திரி சுப்ரஜா B.E.க்கு மதுரை இராமியா மரு.ஆர்.ஆர்.விஜயகுமார் - ஷோபனா தம்பதியரின் செல்வப்புத்திரன் அச்யுதன் B.E.க்கும் சென்ற 30-01-2017 அன்று ஐராவதநல்லூர் என்.எஸ்.மகாலில் திருமணம் உறவினர்கள் நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் புடைசூழ சிறப்பாக நடைப்பெற்றது. 

இத்திருமண விழாவில் சமூகப்பிரமுகர்கள் அரசியல் பிரமுகர்கள் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஸெளராஷ்ட்ர மத்ய சபைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் சபை நிர்வாகிகள் சமூகப்பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தனர்.


 

குஜராத் ராஜ்கோட்டில் இருக்கும் ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸெளராஷ்ட்ர ஹெரிட்டேஜ் சேர் சார்பில் சென்ற 31-01-2017 அன்று மதுரை ஸெளராஷ்ட்ர பெண்கள் மேனிலைப்பள்ளியில் தேசிய அளவில் ஸெளராஷ்ட்ரர்களின் திருமண கலாச்சாரம் பற்றிய கருத்தரங்கம் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியினை பேராசிரியர் முனைவர் தாமோதரன்ää பேராசிரியர் முனைவர் கோவர்தனன் மற்றும் முனைவர் கிருஷ்ணாராம் ஆகியோர் முன்னின்று ஏற்பாடுகள் செய்திருந்தனர். 

ஈசா பொறியியல் கல்லூரியின் தலைவரும் ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் தலைவருமான ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். மதுரை காந்தி சுப்புராமன் பெண்கள் கல்லூரியின் காரியதரிசி ஜனரஞ்ஜனிபாய் வரவேற்புரையாற்றினார். ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழக துணை முதல்வர் பேராசிரியர் முனைவர். பிரதாப்சிங் சவ்ஹான் விழாவைத் தொடங்கி வைத்தார். ஹெரிட்டேஜ் சேர் இணை இயக்குனர் பேராசிரியர் முனைவர் ஜாலா தமது மாணவர்களுடன் வந்து கருத்தரங்கில் கலந்து கொண்டார். கே.எல்.என். பாலிடெக்னிக் காரியதரிசி ராதாகிருஷ்ணன் துணைவேந்தரைப் பாராட்டிப் பேசினார். 

ஸெளராஷ்ட்ரர்களின் திருமண கலாச்சாரம் பற்றிய கருத்தரங்கம் பேராசிரியர் முனைவர் கோவர்தனன் தலைமையில் தொடங்கியது. பேராசிரியர் ஜாலா, என்.எம்.ஆர்.சுப்புராமன் மகளிர் கல்லூரி முதல்வர் மல்லிகா மற்றும் சரோஜினி குட்டின் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்த்திய உரையுடன் மதிய உணவு இடைவேளை கொடுக்கப்பட்டது. மதிய உணவிற்குப் பின் தொடங்கிய கருத்தரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசியர் முனைவர் சுதர்சன், ராஜ்கோட் ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழக ஆங்கிலத் துறை ஆய்வாளர் லஷ்க்ஹரி நேஹா வசந்த்பாய் மற்றும் மதுரை கல்லூரி பேராசிரியர் ஜெகந்நாத் ஆகியோர் உரையாற்றினார்கள். ஜாதக பரிவர்த்தனை, நிச்சயதார்த்தம், திருமணம், வரதட்சணை மற்றும் பரிசுப்பொருட்கள், பெண்கள் பங்கு போன்றவைகள் குறித்துப் பேசப்பட்டது.

திருமணச் சடங்கில் நாம் கையாளுகின்ற பழக்கவழக்கங்கள் தொடர்ந்து செய்துவரும் சடங்கின்போது நடக்கும் செயல்பாடுகள் குறித்த விளக்கங்கள் கலாச்சார ரீதியில் செயல்படும் தன்மை குறித்த பேராசியர் சுதர்சன் படங்களுடன் விளக்கமளித்தார். குஜராத்திலுள்ள ஸெளராஷ்ட்ரர்களின் திருமணச் சடங்கும் தமிழ்நாட்டில் வாழும் ஸெளராஷ்ட்ரர்களின் திருமணச் சடங்கும் எந்த அளவில் மாறுபட்டுள்ளது என்பது பற்றி விளக்கமாக பேராசிரியர் ஜாலா மற்றும் அவரது மாணவி லஷ்க்ஹரி நேஹா வசந்த்பாய் பேசினார். விஜயநகர பேரரசில் குடிபெயர்ந்த பின்பு தெலுங்கு கலாச்சாரம் நம்முள் ஒன்றிவிட்டதை பேராசிரியர் ஜெகந்நாத் குறிப்பிட்டு பேசினார். 

விழாவின்போது கவிஞர் விஸ்வநாதன் தொகுத்து எழுதிய சுலப ஸெளராஷ்ட்ரி என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நூல் தமிழ் எழுத்து-தமிழ் மொழி மூலம் ஸெளராஷ்ட்ரீ பாஷையைச் சுயமாக கற்றுக் கொள்ளும் முறை பற்றி விளக்கமாக கூறிச்செல்கிறது என்றும் இதற்கு நன்கொடையாக ரூபாய் நூறு என்றும் விலை கிடையாது என்றும் சொல்லி கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. 

பின்னர் கசின் ஆனந்தம் எழுதிய பாண்ட3வுந் கெ2தொ துணைவேந்தருக்கும் பேராசிரியர் ஜாலாவிற்கும் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் சுப்புராமன் மகளிர் கல்லூரி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. பேராசிரியர் முனைவர் தா.கு.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.


மதுரை யானைமலை தேவபாறை ஸ்ரீபாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சென்ற 02-02-2017 வியாழக்கிழமையன்று நடைபெற்றது. 31-01-2017 காலை 10.30 மணிமுதல் அனுக்ஞ, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நந்தி பூஜை நடைபெற்றது. 01-02-2017 காலை 9.00 மணிமுதல் யாகசாலை பூஜைகளும் 02-02-2017 காலை 6.00 மணிமுதல் மூர்த்தி ஹோமங்கள் பூர்ணாஹ{தி முடித்து 9.40 மணிக்குமேல் 10.10 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகனின் திருவருளைப் பெற்றனர். 

திருப்பணிக் குழுவின் தலைமை பொறுப்பினை ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் தலைவரும் கோவை ஈசா பொறியியல் கல்லூரியின் தலைவருமான ஈஸ்வரமூர்த்தி ஏற்று சிறப்பாக செய்து முடித்துள்ளார். கௌரவத்தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராம்பாபு உபதலைவராக ஸ்ரீதரமூர்த்தி, பொருளாளராக ரகுநாத் காரியதரிசியாக ராஜன் மற்றும் ஜெயந்தி ஆகியோருடன் கமிட்டி உறுப்பினர்களாக சாந்தமூர்த்தி, கிருஷ்ணசாமி, ஜீவன்லால், கிரிதரன், வாசுதேவன், கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், கணேஷ்பாபு, கோபிநாத், ஆனந்த்பாபு ஆகியோர் இருந்து இவ்விழாவினை சிறப்பாக நடத்தி பாராட்டுக்களைப் பெற்றனர்.


 

ஸெளராஷ்ட்ர மத்ய ஸபையின் 6வது செயற்குழுக் கூட்டம் வருகின்ற 20-02-2017 அன்று தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் ஸ்ரீசங்கீத மகாலில் காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது. தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்குகிறார். டி.எம்.எஸ். அவர்களுக்கு தபால் தலை வெளியிட்ட மத்ய அரசிற்கு நன்றி தெரிவிக்கவும் சாகித்ய அகாடமியின் விருதுபெறும் பேராசிரியர் தாமோதரன், கோவை சரோஜாசுந்தரராஜன் ஆகியோர்க்கு பாராட்டு தெரிவிக்கவும் குஜராத் அரசின் Non Residence Gujarathi துறை சம்பந்தமாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை பற்றிய விபரம் தெரிவிக்கவும் இக்கூட்டத்தின் முக்கிய சாரம்சமாகும். உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள பொதுச்செயலாளர் ராமசுப்பிரமணியன் வேண்டுகிறார். 


 

 

 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 7 =