ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

gOthru charithru...10

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்
தொகுத்தளிப்பவர்
சூர்யாஞானேஸ்வர்

13. ஜாபாலி மகரிஷி

விஸ்வாமித்திரரின் மகன்தான் ஜாபாலி. இவரும் ஒரு பிரசித்தி பெற்ற மகரிஷி ஆவர். மகாபாரதம் அனுசானபருவம் மூலம் இந்த உண்மை தெரியவருகிறது. தசரத சக்கரவர்த்தியின் அரசவையில் வசிஸ்டர் உள்ளிட்ட எட்டு புரோகிதர்களில் இவரும் ஒருவர். இவர் அதர்வண வேதத்தை பரப்பிய மகரிஷிகளில் இவரும் முக்கியமானவர் என்பதை விஷ்ணுபுராணத்தால் தெளிவாகிறது. 

பரதன் ராமபிரானை திரும்ப அயோத்திக்கு அழைத்து வர கானகம் புறப்பட்டபோது வசிஷ்டருடன் ஜாபாலியும் செல்கிறார். பரதன் இராமரை திரும்ப வற்புறுத்தி அழைக்கும்போது இராமபிரான் பரதனுக்கு பல காரணங்களைச் சுட்டிக்காட்டி தந்தையின் வாக்கை தான் மீறக்கூடாது என்றும் பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் வாசம் செய்து மீண்டும் அயோத்திக்கு வருவேன் என்றும்  சொல்கிறார். அப்போது இராமரை எப்படியும் அயோத்திக்கு அழைத்துச் சென்று விடவேண்டும் என்ற ஆவலில் ஜாபாலி மகரிஷி நாத்திகவாதியைப் போல விவாதம் செய்வதாக வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் தெளிவாக காட்டுகிறார்.

ஒருவன் தனியே பிறக்கிறான். தனியே இறக்கிறான். அவனுக்கு தாய் தந்தை என்ற உறவுகளைப் பேசுவது பித்தனைப் போன்ற உளறலாகும். அயோத்தி நகர மக்கள் நீ திரும்பி வந்து முடிசூட்டிக் கொள்ளவேண்டும் என்று ஆவலாய் உள்ளனர். உன் தந்தை இறந்த பிறகு அவருடைய சொற்கள் உன்னை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? இறந்தவனுக்கு சிரார்த்தம் செய்வது உணவை வீணாக்குவதாகும். இறந்தவன் எப்படி சாப்பிட முடியும்? கண்ணால் கண்டதை நம்பு. காணாததை நம்பாதே. வந்து ராஜ்யபாரத்தை ஏற்றுக்கொள் என்று ஜாபாலி மகரிஷி இராமரைப் பார்த்து கூறுவதாக வால்மீகி கூறுகிறார்.

இதனைக் கேட்ட இராமர் சற்றே கோபம் கொண்டதாகவும் ஜாபாலியை பார்த்து பதில் அளித்ததாகவும் வால்மீகி காட்டுகிறார். ஒருவன் அறத்தின் கூற்றுக்களை மீறினால் மற்றவர்கள் அவனை இகழ்வார்கள். நாம் வாழுகின்ற வாழ்க்கையை விட அறம் தான் இன்றியமையாதது. நான் தர்மத்தைப் புறக்கணித்தால் மற்றவர்களும் அதையே பின்பற்றி தர்மத்தை விட்டு விலகி தவறான பாதைக்குச் செல்வார்கள். சத்தியம் தான் உயர்ந்தது. சத்தியத்திற்கு மீறிச் செல்வது மிகவும் தவறாகும். என் தந்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியினை மீற மாட்டேன். நாத்திகன் என்பவன் தர்மத்தை அழிக்கும் திருடன். தர்மத்தை அழித்து தவறான பாதையில் செல்லும் உம்மை என் தந்தை அரசவையில் புரோகிதராக ஆக்கியதற்கு நான் வருந்துகிறேன் என்று இராமபிரான் கூறுகிறார்.

அப்போது வசிஷ்டர் சொல்கிறார். ஜாபாலி நாத்திகன் அல்லர். தர்மத்திலிருந்து வழுவியவரும் அல்லர். நீ அயோத்திக்கு திரும்ப வந்து முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் சொல்கிறார். இக்ஷ்வாகு வம்சத்தில் மூத்த மகன் தான் முடிசூட்டிக் கொள்ளவேண்டும் என்பது தொன்றுதொட்டு வரும் வழக்கம். ஆனாலும் இராமபிரான் தந்தைக்கு கொடுத்த வாக்கினை மீற மறுத்துவிட்டார். இந்தச் செய்திகள் அனைத்தும் வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் 108 முதல் 111 வரையுள்ள சர்க்கத்தில் கூறப்பட்டுள்ளது. 

இம்மகரிஷியின் சிஷ்ய-பிறசிஷ்யர்களின் வழி வந்தவர்கள் ஜாபாலி கோத்திரத்தினராவார். 
நம் சமூக மகான்களில் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் மற்றும் இராமராய் போன்ற பெரியோர்கள் ஜாபாலி கோத்திரத்தவரே.

ஜாபாலி கோத்திரத்தின் ஸ்லோகம்:
தாராஸ்த்ரய ஸ்த்ரீது ஹிமாமஸ{தேவோ
யோநிஸ்ச ஸர்பா த்ரிதஸா கணம்ச
காலக்ஞ பக்ஷீ பதரீச வ்ருகே;ஷா
ஜாபாலி கார்கேயச ஜந்ஹ{நாம்.

ஜாபாலி கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு
நட்சத்ரு : ம்ருகஸீர்ஷம்
கோ3த்ரு : ஜாபாலி கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : சந்திர
க3ணம் : தேவ க3ணம்
வாஹநொ : நாக ஸாப்
பட்சி : குடொ3 (சேவல்)
விருட்சம் : போ3ரு ஜா2ட் (இலந்தை மரம்)
வாந் : வேணு வான்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : ஜாபாலி, ஆஸிர்ஷேண, அநுப ஆகிய கோத்திரங்கள்
                      திரியாரிஷ ப்ரவரம்.

ஜாபாலி மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

1. கொண்டா3
2. திருக்கொண்டா3
3. சின்னக்கொண்டா3
4. மோர்க்கொண்டா3
5. வாழைக்கொண்டா3
6. தெ4ந்நுக் கொண்டா3
7. பில்லுகீஷ்டு கொண்டா3
8. பொலெக்கொண்டா3
9. கூ4ஸ{க்கொண்டா3
10. திம்முக்கொண்டா3
11. சீர்க்கொண்டா3
12. தொ3ப்பே
13. மண்டே3
14. அப்பியா
15. தப்பாளி
16. கோட்டைவீடு
17. குந்து3
18. தா3ளு பநிந்
19. வெளெபேஸ{ந்
20. குளித்பா4துந்
21. புட்டா
22. மூர்த்தியம்மா
23. பட்டணம்
24. கொ2லாந்
25. த3ந்தமுந்
26. புளிந்
27. ஜபிளெந்
28. ஹத்3து3கெந்நிந்
29. செம்பு3
30. ப4ஜ்ஜி
31. கெந்த3படி
32. அம்பலம்
33. புரோஹிதம்
34. ம்ஹ{டி3ந்
35. கெ3ட்3டா3ந்
36. நக3ஜிந்
37. பிண்ணாகுந்
38. கி3ங்கியாந்
39. மொண்டெ3ந்
40. முடிந்
41. தடலாவுந்
42. கடியாந்
43. கொ3ம்டாந்
44. பவ்டர்நு
45. கங்கீந்
46. பேடவீர்யாந்
47. ந:ந்நீந்
48. நீல்மேகுந்
49. வீர்பத்தூர்நு
50. பளநிந்
51. கொட்டேந்
52. கிரிந்
53. காராந்தாந்
54. ரங்கதாமுந்
55. கெ4தோண்ணு
56. ஹ{ந்நுந்
57. வெண்ட3வாந்
58. பில்லிந்
59. கும்மாந்
60. ஸ{தன்னு
61. மத்தேள்நு
இந்த கோத்திரத்தைச் சேர்ந்த வீட்டுப்பெயர்களைக் கொண்டவர்கள் தமிழகத்தில் எந்த ஊரிலிருந்தாலும் எங்களுக்குத் தெரியப்படுத்தினால் அதனை விபரமாக வெளியிடலாம். 

 

User Comments

I'm jabli gothiram .family name mandan.I'm living Madurai.

Harish Kumar

"கொண்டா" என்ற வீட்டுப்பெயர் கொண்டவர் எல்லோரும் ஜாபாலி கோத்திரத்தைச் சேர்ந்தவர் அல்லர். உதாரணத்திற்கு என் வீட்டுப்பெயர் "கொண்டா" ஆனால் நாங்கள் "மைத்ரேய" கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.

Ravindranath Konda Rajaram

கோத்திரங்கள் மாறுப்பட்டாலும் ஆரிஷம் பார்க்க திரியாரிஷத்திலும் பஞ்சாரிஷத்திலும் ஒன்றுபட்டு வருதலால் சகோதரத்துவம் உண்டு என்று அறியலாம். எனவே பெண்ணைக் கொடுப்பதிலும் வாங்குவதிலும் ஆரிஷம் அவசியம் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.

Surya Gnaneswar, Editor

"நாஸ்திகம் என்பது வேத காலத்திலேயே இருந்தது தான். இதை யாராலும் மறுக்க முடியாது. To know more about this please visit my blog in the following link. This is an intermediate link and hence if you want to know more read all the postings before and after this. http://insearchofgodparticle.blogspot.in/.../classificati...

Ravindranath Konda Rajaram
Question : 4
+
7=