sourashtra thirukkuraL

தமிழக ஆளுநர் மாளிகை ராஜ் பவன் தர்பார் அரங்கில் பத்து மொழிகளில் ஒரு மொழியாக ஸெளராஷ்ட்ர மொழியில் திருக்குறள் ஒலித்தது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த குறளின் குரல் நிகழ்ச்சி 2014 நவம்பர் 13 அன்று மாலையில் தமிழக ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கத்தில் சிறப்பாக நடைப் பெற்றது.
மேதகு தமிழக ஆளுநர் முனைவர் கே. ரோசய்யா அவர்கள் இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக வருகை தந்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திருக்குறள் மொழிப்பெயர்ப்பு வெளியீடுகளை வெளியிட்டார்.
அத்துடன் பன்மொழித் திருக்குறள் வாசிப்பு விழாவும் சிறப்பாக நடைப்பெற்றது. நிறுவனத்தின் இயக்குநர் திருமதி வி.ஜி. Pooma வரவேற்புரையாற்றினார். நன்றியுரையை நிறுவனத்தின் பதிவாளர் டாக்டர். முத்துவேலு வழங்கினார். டாக்டர் ஐராவதம் மஹாதேவன் அவர்களின் ஏர்லி தமிழ் எபிகிராபி - நூல் வெளியீட்டுக்குப் பின் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, மணிப்புரி, பிரெஞ்சு, அராபிக், மராத்தி, சைனிஸ் மொழிகளில் திருக்குறள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸெளராஷ்ட்ர மொழியில் ஏற்கனவே சங்குராம் அவர்களால் மொழிப் பெயர்க்கப்பட்டிருந்த திருக்குறள் தொகுப்பிலிருந்து டாக்டர் எல்.வி.கே. ஸ்ரீதர் அவர்கள் கணீர் குரலில் ஸெளராஷ்ட்ர மொழியில் வாசித்தார்.
நன்றி: ஜுட்டிசன்ஸ் ஆட் பேஜ்