ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

Samooka Chinthanai-6

சமூகச் சிந்தனை: 6
நம் ஸெளராஷ்ட்ரர்களை முன் உதாரணமாகக் கொண்டு பல விதங்களில் முன்னேறியஃமுன்னேறி வரும் ஒரு சமுதாயத்தினர் நம் சமூகத்தினரின் பொருளாதாரத்தை மறைமுகமாகச் சுரண்டிக் கொண்டிருப்பது எத்தனை பேருக்குத்தான் புரிந்திருக்கும்? மதுரையி;ல் திருமண மண்டபம் பாத்திரக்கடை ஜவுளிக் கடை என்று ஏகபோகமாக உருவாக்கி தொழில் செய்யும் இவர்களிடம் நம் சமூகத்தின் வருவாய் மொத்தமாக போய்க்கொண்டிருக்கிறது. நம் சமூகத்தினரின் கௌரவம் பார்க்கும் தன்மை அடுத்த சமுதாயத்தினருக்கு வருமானத்தை அள்ளிக்கொடுக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டு முடிந்தவரை சில பழக்கவழக்கங்களை தவிப்பது நல்லது.
உதாரணமாக திருமணம் நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகள் சுப நிகழ்ச்சிகள். இந்த நிகழ்ச்சியின்போது மகளிர் மங்கலகரமாக காணவேண்டும் என்பதற்காக பட்டுச்சேலை உடுத்தி நகைநட்டுகள் என்று ஏகமாக அணிந்துகொண்டு வருவார்கள். அவர்களுக்கு தலையில் சூடிக்கொள்ள மலர் கொடுப்பது ஒரு வழக்கம். இந்த வழக்கம் சம்பிரதாயமான சடங்காகி விட்டது. ஒவ்வொரு திருமணம் மற்றும் பிற சுபநிகழ்ச்சிகளில் குறைந்த பட்சம் 500 முதல் 1000 பேர் கலந்து கொள்வார்கள். இதில் பாதிக்குப்பாதி பெண்கள். மாப்பிள்ளை வீட்டாரும் சரி பெண் வீட்டாரும் சரி இருவரும் மகளிருக்கு மலர் கொடுப்பது வழக்கம். குறைந்த பட்சம் ஒவ்வொரு வீட்டாரும் ரூபாய் 50000 முதல் 70000 வரை வழக்கத்திற்காக செலவழிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். ஆனால் இதை நாம் மனம் வைத்தால் நிச்சயமாக இருவீட்டாருக்கும் இந்த செலவிலிருந்து காப்பாற்ற முடியும்.
எப்படி என்று கேட்கிறீர்களா? கேள்வி கேட்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நன்கு அலங்கரித்து விசேஷங்களுக்கு வெளியில் செல்லும் உங்கள் வீட்டு மகாலட்சுமிகளுக்கு ஒரு பத்து இருபது ரூபாய் செலவழித்து ப10 வாங்கி கொடுத்து விட்டால் போதும். விசேஷங்களுக்கு சென்றால் ப10 கொடுப்பார்கள் என்ற சம்பிராதயத்தை விட்டொழித்தால் போதுமே. ஏனென்றால் இந்தப் பழக்கம் நம் சமூகத்தினர் அனைவருக்கும் அதாவது அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்களுக்கும் பொதுவானதல்ல. மதுரையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் மட்டுமே இந்த பழக்கம் உள்ளது. எனவே இதனை தவிர்ப்பதில் தவறில்லை.
திருமண மண்டபம் என்பது இன்றைய சூழ்நிலைக்கு காலத்தின் கட்டாயம். மக்கள் தொகை பெருக்கமும் சொந்த வீடு வைத்திருந்தவர்கள் எல்லாம் அந்த மாற்று சமுதாயத்தினரிடம் விற்றுவிட்டு மதுரையின் நகர்புறத்திற்கு அப்பால் வீடு வாங்கிக் கொண்டு வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருவதால் திருமண மண்டபம் அவசிய தேவையாகிறது. இதிலும் கொஞ்சம் ஆடம்பரம் திணிக்கப்படுகிறது. இதனாலும் செலவுகள் அதிகமாகிறது. 
விருந்து….இதை பொருத்தவரையில் நாம் அதிக சிரத்தையுடன் நன்கு தேர்ந்த கேட்டரிங்கை தேர்வு செய்கிறோம். இந்த கேட்டரிங் மற்றும் சமையல் செய்துதரும் வேலைகள் யாவும் நம் சமூத்தினரே செய்வதால் நம்முடைய சுவைக்கு ஏற்ற உணவு பதார்த்தங்கள் நமக்கு கிடைத்துவிடுகிறது. மனநிறைவுடன் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கும் நல்ல பண்பாட்டிற்கு விருந்தே முக்கிய காரணமாகிறது என்றால் அது மிகையாகாது. இதில் செலவழிக்கும் தொகை நம் சமூத்தவரிடமே செல்கிறது. இதில் நாம் பேரம் பேசுவோம். தேவைப்படும் வசதிகள் சரியாக செய்துகொடுக்காத திருமண மண்டப நிர்வாகத்தினரிடம் கேட்ட தொகையை பேரம் பேசாமல் கொடுத்துவிட்டு வருவோம். இந்த மனநிலையில் ஒரு மாறுதல் தேவை. அதுவும் மாற்றுக் கருத்து இல்லாமல்.
இது இப்படி இருக்க மணப்பெண் வீட்டார் மணமகனுக்கு செய்யும் சீர்வரிசையில் எந்தவித பயன்பாடும் இல்லாமல் பாங்க் லாக்கரிலும் வீட்டுப் பெட்டியிலும் முடங்கிக் கிடக்கும் தங்கம் வெள்ளி போன்ற இனங்களுக்கு தரும் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஒரு விழிப்புணர்ச்சி வேண்டும். கேட்கும் நகையும் வெள்ளிப்பாத்திரங்களும் கிடைக்காததால் பெண் அமையவில்லை என்று ஆணுக்கும் கேட்கும் நகையும் வெள்ளிப்பாத்திரமும் கொடுக்க இயலாததால் மணமகன் அமையவில்லை என்று பெண்ணுக்குமாக தடைகள் தவிர்க்கப்படலாம். இதற்கு முழுக்க முழுக்க காரணமாகும் பெற்றோர்களின் மனநிலையில்தான் மாறுதல் உருவாக வேண்டும். அடம்பிடிக்கும் பெற்றோர்களின் மனநிலையே அவர்கள் குழந்தைகளின் திருமணம் தள்ளிப்போக காரணமாகிறது என்பதை உணரவேண்டும்.
நிச்சயதார்த்தின் போது இருவீட்டாரும் அமர்ந்து பேசுகின்ற தன்மையை நோக்கினால் கல்யாணச் சந்தையில் அதிகம் பேசுபவருக்குத்தான் லாபம் என்பது போலிருக்கும். வாழ்க்கையில்தான் பெண்கள் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்றால் வாழ்க்கையை தொடங்கும்போதுகூட பெண் வீட்டார்கள் தான் விட்டுக்கொடுத்துப் பேசி சமதானப்படுத்திக் கொண்டு தங்கள் பெண்ணை வாழ வைக்க மேற்கொள்ளும் சிரமங்கள் அப்பப்பா….சொல்லி முடியாது. 
ஒட்டுமொத்தமாக பார்த்தால் மணமக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவரவர் பெற்றோர்களின் மனநிலையே காரணமாகிறது. அவர்கள் மனநிலையில் மாறுதல் உருவாகின்ற வரையில் எந்த மணமக்களும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது என்பதற்கு இன்றைய காலக்கட்டத்தில் நாம் காணும் உண்மை நிகழ்வுகள் சான்று பகரும். உறவினர்களுக்கும் சம்பந்தி வீட்டார்க்கும் பங்கு பிரித்து கொடுப்பதற்காகவே கேட்கப்படும் பலகார எண்ணம் மற்ற சமுதாயத்தினர் பார்த்து மலைக்கச்செய்யும் அளவிற்கு உயர்ந்து கொண்டே போகிறது. சீர் வரிசைகள் மற்ற சமுதாயத்தினரை விட குறைவுதான் என்றாலும் நம் சமூத்தை பொறுத்தவரை அதிகம்தான். இதில் ஆண் வீட்டார்கள் விட்டுக்கொடுத்துப் போவதால் எவ்வித நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. மாறாக குடும்பத்தில் மகிழ்ச்சியும் பெருமையும்தான் கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
பரஸ்பர நம்பிக்கை தானே குடும்ப வாழ்க்கைக்கு அஸ்திவாரமாகிறது. சில ஆண் வீட்டார்கள் அதிலிருந்து மாறுபட்டு மணநாள் அன்றே மணப்பெண் அணிந்து வந்த நகைகளை சரிபார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் சிறுசிறு பிணக்குகள் மாறாத வடுவாகி பெண் வீட்டார்கள் மனம் வெந்து நொந்து காணப்படுவார்கள். பெருந்தன்மை என்ற பண்பாடு சகஜமாக நம்மில் அனைவருக்கும் இருந்துவிட்டால் நம் சமூகம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை என்று சொல்லலாம். அதனை எதிர்நோக்கி நாமும் செல்;வோம். 
விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய சில பழக்கங்கள் ஆதிக்கத்தின் உச்சத்தால் எந்த அளவிற்கு குடும்பச் சூழ்நிலையை மாற்றுகிறது. மணப்பெண்ணின் மனநிலையில் உருவாகும் ஒருவித தாக்கம் பெண்ணைப் பெற்றவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் இதனால் மணமகன் மாமனார் குடும்பத்தோடு உறவாடும் ஒட்டுதலின்மை இவைகளைப்பற்றி விரிவாக அடுத்த இதழில் காண்போம்.

சமூகச் சிந்தனை: 6

நம் ஸெளராஷ்ட்ரர்களை முன் உதாரணமாகக் கொண்டு பல விதங்களில் முன்னேறிய/முன்னேறி வரும் ஒரு சமுதாயத்தினர் நம் சமூகத்தினரின் பொருளாதாரத்தை மறைமுகமாகச் சுரண்டிக் கொண்டிருப்பது எத்தனை பேருக்குத்தான் புரிந்திருக்கும்? மதுரையில் திருமண மண்டபம் பாத்திரக்கடை ஜவுளிக் கடை என்று ஏகபோகமாக உருவாக்கி தொழில் செய்யும் இவர்களிடம் நம் சமூகத்தின் வருவாய் மொத்தமாக போய்க்கொண்டிருக்கிறது. நம் சமூகத்தினரின் கௌரவம் பார்க்கும் தன்மை அடுத்த சமுதாயத்தினருக்கு வருமானத்தை அள்ளிக்கொடுக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டு முடிந்தவரை சில பழக்கவழக்கங்களை தவிப்பது நல்லது.

உதாரணமாக திருமணம் நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகள் சுப நிகழ்ச்சிகள். இந்த நிகழ்ச்சியின்போது மகளிர் மங்கலகரமாக காணவேண்டும் என்பதற்காக பட்டுச்சேலை உடுத்தி நகைநட்டுகள் என்று ஏகமாக அணிந்துகொண்டு வருவார்கள். அவர்களுக்கு தலையில் சூடிக்கொள்ள மலர் கொடுப்பது ஒரு வழக்கம். இந்த வழக்கம் சம்பிரதாயமான சடங்காகி விட்டது. ஒவ்வொரு திருமணம் மற்றும் பிற சுபநிகழ்ச்சிகளில் குறைந்த பட்சம் 500 முதல் 1000 பேர் கலந்து கொள்வார்கள். இதில் பாதிக்குப்பாதி பெண்கள். மாப்பிள்ளை வீட்டாரும் சரி பெண் வீட்டாரும் சரி இருவரும் மகளிருக்கு மலர் கொடுப்பது வழக்கம். குறைந்த பட்சம் ஒவ்வொரு வீட்டாரும் ரூபாய் 50000 முதல் 70000 வரை வழக்கத்திற்காக செலவழிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். ஆனால் இதை நாம் மனம் வைத்தால் நிச்சயமாக இருவீட்டாருக்கும் இந்த செலவிலிருந்து காப்பாற்ற முடியும்.

எப்படி என்று கேட்கிறீர்களா? கேள்வி கேட்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நன்கு அலங்கரித்து விசேஷங்களுக்கு வெளியில் செல்லும் உங்கள் வீட்டு மகாலட்சுமிகளுக்கு ஒரு பத்து இருபது ரூபாய் செலவழித்து தேவையான புஷ்பங்களை  வாங்கி கொடுத்து விட்டால் போதும். விசேஷங்களுக்கு சென்றால் புஷ்பங்களை கொடுப்பார்கள் என்ற சம்பிராதயத்தை விட்டொழித்தால் போதுமே. ஏனென்றால் இந்தப் பழக்கம் நம் சமூகத்தினர் அனைவருக்கும் அதாவது அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்களுக்கும் பொதுவானதல்ல. மதுரையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் மட்டுமே இந்த பழக்கம் உள்ளது. எனவே இதனை தவிர்ப்பதில் தவறில்லை.

திருமண மண்டபம் என்பது இன்றைய சூழ்நிலைக்கு காலத்தின் கட்டாயம். மக்கள் தொகை பெருக்கமும் சொந்த வீடு வைத்திருந்தவர்கள் எல்லாம் அந்த மாற்று சமுதாயத்தினரிடம் விற்றுவிட்டு மதுரையின் நகர்புறத்திற்கு அப்பால் வீடு வாங்கிக் கொண்டு வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருவதால் திருமண மண்டபம் அவசிய தேவையாகிறது. இதிலும் கொஞ்சம் ஆடம்பரம் திணிக்கப்படுகிறது. இதனாலும் செலவுகள் அதிகமாகிறது. 

விருந்து…. இதை பொருத்தவரையில் நாம் அதிக சிரத்தையுடன் நன்கு தேர்ந்த கேட்டரிங்கை தேர்வு செய்கிறோம். இந்த கேட்டரிங் மற்றும் சமையல் செய்துதரும் வேலைகள் யாவும் நம் சமூத்தினரே செய்வதால் நம்முடைய சுவைக்கு ஏற்ற உணவு பதார்த்தங்கள் நமக்கு கிடைத்துவிடுகிறது. மனநிறைவுடன் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கும் நல்ல பண்பாட்டிற்கு விருந்தே முக்கிய காரணமாகிறது என்றால் அது மிகையாகாது. இதில் செலவழிக்கும் தொகை நம் சமூத்தவரிடமே செல்கிறது. இதில் நாம் பேரம் பேசுவோம். தேவைப்படும் வசதிகள் சரியாக செய்துகொடுக்காத திருமண மண்டப நிர்வாகத்தினரிடம் கேட்ட தொகையை பேரம் பேசாமல் கொடுத்துவிட்டு வருவோம். இந்த மனநிலையில் ஒரு மாறுதல் தேவை. அதுவும் மாற்றுக் கருத்து இல்லாமல்.

இது இப்படி இருக்க மணப்பெண் வீட்டார் மணமகனுக்காக சம்பந்தி வீட்டார்க்கு செய்யும் சீர்வரிசையில் எந்தவித பயன்பாடும் இல்லாமல் பாங்க் லாக்கரிலும் வீட்டுப் பெட்டியிலும் முடங்கிக் கிடக்கும் தங்கம் வெள்ளி போன்ற இனங்களுக்கு தரும் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஒரு விழிப்புணர்ச்சி வேண்டும். கேட்கும் நகையும் வெள்ளிப்பாத்திரங்களும் கிடைக்காததால் பெண் அமையவில்லை என்று ஆணுக்கும் கேட்கும் நகையும் வெள்ளிப்பாத்திரமும் கொடுக்க இயலாததால் மணமகன் அமையவில்லை என்று பெண்ணுக்குமாக தடைகள் தவிர்க்கப்படலாம். இதற்கு முழுக்க முழுக்க காரணமாகும் பெற்றோர்களின் மனநிலையில்தான் மாறுதல் உருவாக வேண்டும். அடம்பிடிக்கும் பெற்றோர்களின் மனநிலையே அவர்கள் குழந்தைகளின் திருமணம் தள்ளிப்போக காரணமாகிறது என்பதை உணரவேண்டும்.

நிச்சயதார்த்தின் போது இருவீட்டாரும் அமர்ந்து பேசுகின்ற தன்மையை நோக்கினால் கல்யாணச் சந்தையில் அதிகம் பேசுபவருக்குத்தான் லாபம் என்பது போலிருக்கும். வாழ்க்கையில்தான் பெண்கள் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்றால் வாழ்க்கையை தொடங்கும்போதுகூட பெண் வீட்டார்கள் தான் விட்டுக்கொடுத்துப் பேசி சமதானப்படுத்திக் கொண்டு தங்கள் பெண்ணை வாழ வைக்க மேற்கொள்ளும் சிரமங்கள் அப்பப்பா….சொல்லி முடியாது. 

ஒட்டுமொத்தமாக பார்த்தால் மணமக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவரவர் பெற்றோர்களின் மனநிலையே காரணமாகிறது. அவர்கள் மனநிலையில் மாறுதல் உருவாகின்ற வரையில் எந்த மணமக்களும் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது என்பதற்கு இன்றைய காலக்கட்டத்தில் நாம் காணும் உண்மை நிகழ்வுகள் சான்று பகரும். உறவினர்களுக்கும் சம்பந்தி வீட்டார்க்கும் பங்கு பிரித்து கொடுப்பதற்காகவே கேட்கப்படும் பலகார எண்ணம் மற்ற சமுதாயத்தினர் பார்த்து மலைக்கச்செய்யும் அளவிற்கு உயர்ந்து கொண்டே போகிறது. சீர் வரிசைகள் மற்ற சமுதாயத்தினரை விட குறைவுதான் என்றாலும் நம் சமூத்தை பொறுத்தவரை அதிகம்தான். இதில் ஆண் வீட்டார்கள் விட்டுக்கொடுத்துப் போவதால் எவ்வித நஷ்டமும் ஏற்படப்போவதில்லை. மாறாக குடும்பத்தில் மகிழ்ச்சியும் பெருமையும்தான் கூடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

பரஸ்பர நம்பிக்கை தானே குடும்ப வாழ்க்கைக்கு அஸ்திவாரமாகிறது. சில ஆண் வீட்டார்கள் அதிலிருந்து மாறுபட்டு மணநாள் அன்றே மணப்பெண் அணிந்து வந்த நகைகளை சரிபார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். இதனால் ஏற்படும் சிறுசிறு பிணக்குகள் மாறாத வடுவாகி பெண் வீட்டார்கள் மனம் வெந்து நொந்து காணப்படுவார்கள். பெருந்தன்மை என்ற பண்பாடு சகஜமாக நம்மில் அனைவருக்கும் இருந்துவிட்டால் நம் சமூகம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை என்று சொல்லலாம். அதனை எதிர்நோக்கி நாமும் செல்வோம். 

விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய சில பழக்கங்கள் ஆதிக்கத்தின் உச்சத்தால் எந்த அளவிற்கு குடும்பச் சூழ்நிலையை மாற்றுகிறது. மணப்பெண்ணின் மனநிலையில் உருவாகும் ஒருவித தாக்கம் பெண்ணைப் பெற்றவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் இதனால் மணமகன் மாமனார் குடும்பத்தோடு உறவாடும் ஒட்டுதலின்மை இவைகளைப்பற்றி விரிவாக அடுத்த இதழில் காண்போம்.

User Comments

துமி ஸௌராஷ்ட்ராம் மெள்ளி லிக்குவாய் அமி தெல்லேஸ் வெதுர் ஸாரியொ ! ஸௌ.இன்.தமிழ் ம் மெள்ளி லிக்குவோ

Sourashtra Sourashtrian

Samuga sindhanai 6 ennai veguvaaga kavarndadhu. Kalyana mahal vaadagai adhigam aanadhinaal iru veettarum inandhu ore kalyana mahaalil vishesham nadaththum palakkattai erppaduthikkolla vendum. irattai selavu thavirkkappadum. maatram tevai ena unarndhu seyal pada vendum.

R.N. Sadasivan, Editor Sonnakodum
Question : 4
+
8=