ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

Puthia vidialukku


புதிய விடியலுக்கு கை கொடு

-சிவஞானசூரியஜி-

ஸெளராஷ்ட்ர இனத்திற்கென்று தனியே ஒரு குணம் உண்டு. அவர்களுக்கென்று தனியே ஒரு பராம்பரியமுண்டு. தமிழகத்தில் அதிகமாக வாழுகின்ற மொழிவாரி சிறுபான்மையினர் ஸெளராஷ்ட்ரர்கள்தான். ஆரம்பகாலம் முதல் அரசியல் வாழ்க்கையில் சரி பொது வாழ்க்கையில் சரி முன்னணியிலிருந்துகொண்டு தங்களுக்கென்று தனி மரியாதையையும் கௌரவத்தையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இவர்கள் வாழ்வில் பொய்யில்லை. அடிதடி போன்ற சட்டத்திற்குப் புறம்பான அராஜக செயல்பாடுகள் அறவே இல்லை. இன்றுவரை காவல்துறையினரிடம் எந்த ஒரு கிரிமினல் வழக்கும் இல்லாத 100 சதவீதம் அக்மார்க் முத்திரைக் கொண்ட ஒரு சமுதாயம் ஸெளராஷ்ட்ர சமுதாயம் என்று காவல்துறையினராலேயே பாராட்டுப் பெறும் இந்த ஸெளராஷட்ரர்கள் சமீப காலமாக இன்றைய அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்டும் தங்களது நிலையிலிருந்து ஒதுக்கப்பட்டும் வருகிறார்கள். 


சற்று வரலாற்று பின்னணியில் பார்த்தால் தெரியும். இந்த சமுதாயத்தினர் வாழுகின்ற ஊர்களில் வசிக்கின்ற பகுதியில் எந்த அளவிற்கு வளர்ச்சிப்பணியினை மேற்கொண்டு அரசுடன் ஒத்துழைத்துள்ளனர் என்பது தெரியவரும். ஒருகாலத்தில் நாம் கூட செல்ல அஞ்சுகின்ற பகுதியில் உங்கள் சமுதாய மக்கள் குடியேறி வாழ்ந்து வந்து அந்த அச்சத்தைப் போக்கியுள்ளனர் என்று மதுரையில் ஒரு அமைச்சர் பேசியுள்ளது நமக்குப் பெருமையாக இருந்தாலும் தேர்தல் காலங்களில் நாம் வெகுவாக வஞ்சிக்கப்படுவது என்னவோ மாற்ற முடியாத செயலாக மாறிவிட்டது. 


அரசியல் வாழ்க்கையில் நமக்கிருந்துவந்த பிரதிநிதித்துவத்தை இழந்துவிட்ட இந்நிலையில் மீண்டும் அதனை தக்க வைத்துக் கொள்ள நாம் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போய்விட்டது. மதுரை திண்டுக்கல் பெரியகுளம் வத்தலக்குண்டு நிலக்கோட்டை பரமக்குடி எமனேஸ்வரம் பாளையங்கோட்டை வீரவநல்லூர் புதுக்குடி கிளாக்குளம் நாகர்கோவிலில் கோட்டார் சேலம் இராசிபுரம் நாமக்கல் திருச்சி தஞ்சை குடந்தை திருபுவனம் அய்யம்பேட்டை அம்மையப்பன் இப்படி அனைத்து ஊர்களிலும் ஊராட்சிகளில் ஸெளராஷ்ட்ரர்களின் பங்கு வரலாற்றுச் சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட பராம்பரியமிக்க இனத்தை தவிர்த்துவிட்டு பாராமுகமாக இருப்பது நம் சமூகத்திற்கு ஏற்பட்ட ஒரு சோதனையான காலக்கட்டம். இந்த சோதனையிலிருந்து விடுபட நாம் என்ன செய்யலாம் என்பதை அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும். 


அரசியல்வாதிகளும் சரி ஆளுகின்றவர்களும் சரி உங்களுக்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லுங்கள் நாம் அதனை நிறைவேற்றுகிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளியுங்கள். நாம் நிச்சயமாக உங்கள் சமூகத்திற்கு செய்வோம் என்று நம் சமூக மேடையிலேயே நமக்கு உறுதியளித்துவிட்டு நம் சமூக மக்களின் வாக்குகளையும் பெற்று அரியணையில் அமர்ந்து விடுவார்கள். அடுத்த தேர்தல் வருகின்றபோது நம் சமூகத்திலிருந்து வேட்பாளர் யாராவது அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். இதுதான் சமீபத்திய நடைமுறை. நாம் சமூத்திலிருந்து சுயேற்சையாக யாரையாவது நிறுத்தினால் அதுவும் கேலி கூத்தாகி விடுகிறது. 


எனவே-


எங்களுக்குத் தேவை அரசியல் பிரதிநிதித்துவம். அதனை வழங்காத எந்தக் கட்சியும் நம் வாக்கினை பெற தகுதியில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு நம் ஜனநாயகக் கடமையை எப்படி செய்வது? வாக்களிக்க வேண்டும் என்பது நமது உரிமையுங்கூட. தமிழகத்தில் இரண்டு பிரதானக் கட்சிகள் ஒருவரையொருவர் தாக்கிப் பேசி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் சற்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சிறுபான்மையினருக்கு நாம் பாதுகாப்பு அளிப்போம். அவர்களின் வாழ்வாதரத்தை  மேம்படுத்துவோம்  என்றெல்லாம்  பேசுகிறார்கள்.   ஆனால்   மத்தியில் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் இவர்களின் ஆதரவும் பங்கும் இருக்காது என்று அவர்களே வாய் கிழிய பேசுகிறார்கள். அப்படியென்றால் மாநிலத்திற்கு தேவையான வசதிகளை ஆளும் மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தர யார் நடுவில் இருப்பார்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆட்சி அமைப்பது இன்னார்தான் என்னும் பட்சத்தில் நாம் அவர்களையே அமோக வெற்றிப் பெறச் செய்துவிட்டால் என்ன? நம் வாக்கும் வீணாகாமல் புதிய ஆட்சியாளர்களுக்கு பயனாகட்டுமே! 


ஸெளராஷ்ட்ரனே புதிதாக ஆட்சியமைப்போர்க்கு வாய்ப்பினைக் கொடுக்கும் வகையில் கை கொடு. 

அவர்களிடம் நம் அரசியல் பிரதிநிதித்துவம் பெற முயற்சிப்போம்.

 

User Comments

Main article from Sourashtras nobody in representation because of non unity among ourselves.with unity strengthened then we will improve our status in our soceity

EKANATHAN K R Coimbatore
Question : 2
+
6=