Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
miindum tirumbungaL
ஸ்ரேயங்கம்: 

முற்றிலும் சமூகத்திற்கு திரும்புங்கள்!


Vol. 9                                    1st May 2022                                   Issue: 17


 

 
தமிழ் மொழியில் பைபிள் மொழிபெயர்ப்பு செய்தார்கள். எதிர்ப்புகள் இல்லை. லட்சக்கணக்கில் தமிழர்கள் கிறித்தவத்திற்கு மதம் மாறியிருக்கிறார்கள்.
 
கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பைபிள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது. எதிர்ப்போ கண்டனமோ கிடையாது. ஆனால் வெகுவாக எளிதில் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நாளில் இருக்கும் கிறித்தவர்கள் அனைவருமே மதம் மாறிய கிறித்தவர்களே என்றால் அது உண்மைக்கு புறம்பாகக் கருத இயலாது.
 
கிறித்தவர்கள் தமிழ் மொழிக்கு செய்த சேவையாக கருதுகிறார்கள். அன்றைய நாளில் தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் மிகக்குறைவு. தமிழ் எழுத்தை அச்சு வடிவில் கொண்டு வந்து உலகளாவிய வகையில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் கிறித்தவர்கள் என்று மாணவர்களுக்கு பாடமாகவே வைத்திருக்கிறார்கள் தமிழர்கள்.
 
இந்த நிலை நமக்கு இல்லை. ஸெளராஷ்ட்ர மொழிக்கு தொண்டாற்ற ஸெளராஷ்ட்ர மொழியார்வலர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இலக்கியம் படைப்போர் இருக்கிறார்கள். அந்நிய மதத்தினரால் நமது மொழி சீரடையவேண்டிய அவசியமே நமக்கு இல்லை. மதமாற்றுவதில் கை தேர்ந்த கிறித்தவர்களால் நமது சமூகம் சீர்குலையும் நிலைக்கு வந்து விடக்கூடாது. நமது கலாச்சாரம் பண்பாடு பாழ்பட்டு விடக்கூடாது.
 
அவனவன் சங்கரா என்று இருந்துவிட்டாலே எதையாவது எப்படியும் செய்த விடலாம் என்று மட்டும் எண்ணி விடக்கூடாது. தேவையில்லாத வேலையை இழுத்து விட்டுக்கொண்டு மொழிக்கும் சமுதாயத்திற்கு துரோகம் செய்யும் கீழ்தரமான சேவை தேவையற்றது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
 
தனிப்பட்ட முறையில் நமது மொழிக்கும் சமுதாயத்திற்கு அந்த சேவையை அர்ப்பணித்தால் சமூகமே கொண்டாடும். தலைமுறைக்கும் மாறாத புகழுடன் இருப்பதை விட்டுவிட்டு இப்படி அந்நிய மதத்தினரோடு கூட்டு சேர்ந்து பணம் பண்ண பார்க்கும் உங்களது மனப்பான்மையை விட்டுவிடுங்கள். முற்றிலும் சமூகத்திற்கு திரும்புங்கள்!
User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 6 =