ad1
askinAk nava orsu subha nanthinin

Samooka Chinthanai-8

சமூகச் சிந்தனை: 8
ஸெளராஷ்ட்ர சமூகத்தில் பையைனைப் பெற்றவர்களுக்கு நல்ல யோகம் என்றால் பெண்ணைப் பெற்றவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்று சொல்லாமலே புரிந்துக் கொள்ளலாம். படித்து முடித்துவிட்ட மகன் ஒரு வேலையி;ல் அமர்ந்து சம்பாதிக்கத் தொடங்கிய உடனேயே இவர்கள் நடைஉடை பாவனைகள் அனைத்தும் மாறுபடுகின்றன. பணக்கார தோரணையைக் காட்டும் விதத்தில் மிடுக்கானத் தோற்றமும் அகங்கார தோரணையில் பேச்சும் ஸஸரும் உஜி லெக்குநும் லம்பு3 கெரத்தெநொ ஸோன்ஸே என்பார்களே ஸெளராஷ்ட்ர மொழியில் அதுபோல தோன்றும்.
இவையெல்லாம் எதற்காக என்றால் பையனுக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கி விட்டது என்று அர்த்தம். இப்போது பெரும்பாலானவர்கள் பையனுக்கு சமமாக படித்த வேலைப் பார்க்கும் பெண்ணாக இருக்க வேண்டும் என்று தரகரிடம் முதலிலேயே பீடிகைப் போட்டு விடுவார்கள். அதன் படியே படித்த வேலை பார்க்கும் பெண்ணின் ஜாதகம் பொருந்தி விட்டால் கொடுக்கல்-வாங்கல் வியாபார பேரம் போல ஆரம்பித்து ஒரு வழியாக முடிந்தது என்று பெண்ணின் பெற்றோர்கள் நினைத்து பெருமூச்சு விடும் முன்னர் சம்பளத்தை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற பிரச்னை பெரிதாக கிளம்பும். 
இந்த விஷயத்தில் பெண் வீட்டார் சொல்லுகின்ற முடிவுகள் நியாயமாக இருந்தாலும் இறுதி முடிவு எடுப்பது என்னவோ ஆண் வீட்டார்தான். அவர்கள் சொல்வது போலவே நடக்கவேண்டும் என்ற உறுதியில் சிறிதும் தளர்ச்சி ஏற்படாது. திருமணம் முடிந்து கணவன் மனைவி வாழத் தொடங்கிய பின் பெண் வீட்டார் பாதி சம்பளத்தை பெற்றுக் கொள்வதால் ஒவ்வொரு விசேஷத்திற்கும் அதிகமான பலகாரங்கள் கேட்டு வாங்கிக்  கொள்ளப்படுகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் பலகாரத்தை சாப்பிடவோ பகிர்ந்து கொடுக்கவோ இயலாதவர்கள் பணமாக கொடுத்து விடுங்கள். நம் தேவைக்கு வாங்கிக் கொள்கிறோம் என்பதும் ஒருவிதமான அநகாரிகமான செயலாக உருவாகிறது என்பதுகூட தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் வேதனையான விஷயம்.
இன்னொரு புறம் திருமண முடிந்தபின் வேலைக்குப் போகும் பெண்ணால் தொடர்ந்து குழந்தை பெற்றபின்பு செல்ல முடியுமா என்பது கேள்விக்குறிதான். குழந்தையைப் பார்த்துக் கொள்ள பெண்ணைப் பெற்றவர்கள் முதலில் ஒரு ஐந்து மாதம்வரை பார்த்துக் கொள்வதோடு நில்லாமல் தங்களால் இயன்றவரை குழந்தை தவழும் பருவம் வரை பார்த்துக் கொள்கிறார்கள். பெண்ணோட மாமியார் தங்கள் குடும்ப வாரிசை தாங்கள்தான் பராமரிப்பு செய்ய வேண்டும் என்ற சிந்தனை சிறிதும் இல்லாமல் தங்கள் போக்கி;ல் ஏதாவது காரணகாரியங்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். குழந்தையை கவனிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தி;ல் சிலர் இல்லை பலப் பெண்கள் வேலையை விட்டுவிட்டு குழந்தைக்கு நல்ல தாயாகவும் கணவனுக்கு நல்ல மனைவியாகவும் குடும்பப் பொறுப்பினை ஏற்று தங்களது கடமையைத் தொடங்குகின்றார்கள். அத்துடன் அவர்களது கற்பனை வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. 
குடும்பம் என்ற சாகரத்தில் விழுந்துவிட்டாலே உலகத்தில் உள்ள அனைத்து அறிவும் ஒரு பெண்ணுக்கு கிடைத்து விடுகிறது என்பதுபோலவே அவர்களுக்குள் ஒரு பிரமை உருவாகிறது. ஒரு புறம் மாமியார்-மாமனார் குடும்பம். மறுபுறம் தன்னை பெற்ற தாய் தந்தையர் குடும்பம் பிறகு தனது குடும்பம் என்று ஏகமாக குடும்பச் சுமைகள் ஏற்க நேர்கிறது. இதி;ல் வெற்றிக் காணும் பெண்கள் வாழ்க்கையில் உதாரணமாகத் திகழ்கிறார்கள். வெற்றியைத் தேடுபவர்கள் பல சிரமங்களை சந்திக்கின்றனர். பல துயரங்களை அனுபவிக்கின்றனர். இறுதியில் நல்ல மருமகள் என்று பெயர் எடுப்பதற்குள் பாதி வாழ்;க்கை முடிந்து விடுகிறது. எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் பரவாயில்லை நான் வேலையை விட மாட்டேன் என்ற வைராக்கியத்தி;ல் வாழும் பெண்கள் குழந்தையை வளர்ப்பதில் படும் அவஸ்தையை சொல்லி முடியாது. கணவனும் மனைவியும் சேர்ந்து உழைத்தால்தான் நிறைய சம்பாதிக்க முடியும் சொத்துக்களை சேர்க்க முடியும் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளிக் கல்லூரி என்று சேர்த்து தரமானக் கல்வியைக் கொடுக்க முடியும் என்ற எண்ணத்தில் இயந்திர வாழ்க்கையாக தங்கள் வாழ்க்கையினை மாற்றிக் கொள்ளும் அவல நிலையைக் காணமுடிகிறது. 
இதற்கெல்லாம் காரணம் திருமணத்தின் போது நடக்கும் பேரம். கொடுக்கல் - வாங்கல் என்ற போர்வையில் நடக்கும் வியாபாரம். இரண்டு மனங்கள் இணையப் போகும் இடத்தில் மனங்களைப் பார்க்காமல் பணங்களை பார்க்கும் குடும்பத்தினரால் ஏற்படும் மனக்கசப்பு நம் ஸெளராஷ்ட்ர சமூகத்திலிருந்து அடியோடு அகற்றப்பட வேண்டும். ஒரு பெண் ஆயிரமாயிரம் கற்பனைகளை சுமந்து மாமியார் வீட்டிற்கு அடியெடுத்து வைக்கிறாள். அவள் மனதைப் புரிந்து கொண்டு தங்களை பிள்ளையின் மனதையும் புரிந்து கொண்டு இருவரின் இல்வாழ்க்கை மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் காண இரண்டு வீட்டு பெற்றவர்களும் என்று முற்படுகிறார்களோ அன்றுதான் வாழ்வில் வசந்தம் உண்டாகும். அந்த நன்னாளை தங்கள் பிள்ளைகளுக்கு விரைவில் உருவாக்க பெற்றவர்கள் முன்வரவேண்டும். 
கணவன் மனைவி குழந்தை என்ற வட்டத்தில் மகிழ்ச்சியுடன் தொடங்கிய சில தம்பதியர்களின் வாழ்க்கையில் நடந்த சில அநாகரீகமான செயல்கள் பழக்கங்கள் சம்பிரதாயம் என்ற போர்வையில் வாழ்க்கையை தொலைக்கச் செய்யும் சில பெற்றோர்களின் முரண்பாடான செயல்பாடுகள் குறித்தும் அவர்களது அநாகரீகமான கண்ணியமற்ற சிறிதும் மனிதத் தன்மையற்ற செயல் குறித்தும் அதனால் வாழ்க்கையை தொலைக்க முற்படும் தம்பதியர்களின்  நிலைப்பாடு பற்றிய விளக்கம் குறித்தும் அடுத்த இதழில் காண்போம்.

சமூகச் சிந்தனை: 8

ஸெளராஷ்ட்ர சமூகத்தில் பையைனைப் பெற்றவர்களுக்கு நல்ல யோகம் என்றால் பெண்ணைப் பெற்றவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்று சொல்லாமலே புரிந்துக் கொள்ளலாம். படித்து முடித்துவிட்ட மகன் ஒரு வேலையி;ல் அமர்ந்து சம்பாதிக்கத் தொடங்கிய உடனேயே இவர்கள் நடைஉடை பாவனைகள் அனைத்தும் மாறுபடுகின்றன. பணக்கார தோரணையைக் காட்டும் விதத்தில் மிடுக்கானத் தோற்றமும் அகங்கார தோரணையில் பேச்சும் ஸஸரும் உஜி லெக்குநும் லம்பு3 கெரத்தெநொ ஸோன்ஸே என்பார்களே ஸெளராஷ்ட்ர மொழியில் அதுபோல தோன்றும்.

இவையெல்லாம் எதற்காக என்றால் பையனுக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கி விட்டது என்று அர்த்தம். இப்போது பெரும்பாலானவர்கள் பையனுக்கு சமமாக படித்த வேலைப் பார்க்கும் பெண்ணாக இருக்க வேண்டும் என்று தரகரிடம் முதலிலேயே பீடிகைப் போட்டு விடுவார்கள். அதன் படியே படித்த வேலை பார்க்கும் பெண்ணின் ஜாதகம் பொருந்தி விட்டால் கொடுக்கல்-வாங்கல் வியாபார பேரம் போல ஆரம்பித்து ஒரு வழியாக முடிந்தது என்று பெண்ணின் பெற்றோர்கள் நினைத்து பெருமூச்சு விடும் முன்னர் சம்பளத்தை எப்படி பகிர்ந்து கொள்வது என்ற பிரச்னை பெரிதாக கிளம்பும். 

இந்த விஷயத்தில் பெண் வீட்டார் சொல்லுகின்ற முடிவுகள் நியாயமாக இருந்தாலும் இறுதி முடிவு எடுப்பது என்னவோ ஆண் வீட்டார்தான். அவர்கள் சொல்வது போலவே நடக்கவேண்டும் என்ற உறுதியில் சிறிதும் தளர்ச்சி ஏற்படாது. திருமணம் முடிந்து கணவன் மனைவி வாழத் தொடங்கிய பின் பெண் வீட்டார் பாதி சம்பளத்தை பெற்றுக் கொள்வதால் ஒவ்வொரு விசேஷத்திற்கும் அதிகமான பலகாரங்கள் கேட்டு வாங்கிக்  கொள்ளப்படுகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் பலகாரத்தை சாப்பிடவோ பகிர்ந்து கொடுக்கவோ இயலாதவர்கள் பணமாக கொடுத்து விடுங்கள். நம் தேவைக்கு வாங்கிக் கொள்கிறோம் என்பதும் ஒருவிதமான அநகாரிகமான செயலாக உருவாகிறது என்பதுகூட தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் வேதனையான விஷயம்.இன்னொரு புறம் திருமண முடிந்தபின் வேலைக்குப் போகும் பெண்ணால் தொடர்ந்து குழந்தை பெற்றபின்பு செல்ல முடியுமா என்பது கேள்விக்குறிதான். குழந்தையைப் பார்த்துக் கொள்ள பெண்ணைப் பெற்றவர்கள் முதலில் ஒரு ஐந்து மாதம்வரை பார்த்துக் கொள்வதோடு நில்லாமல் தங்களால் இயன்றவரை குழந்தை தவழும் பருவம் வரை பார்த்துக் கொள்கிறார்கள். பெண்ணோட மாமியார் தங்கள் குடும்ப வாரிசை தாங்கள்தான் பராமரிப்பு செய்ய வேண்டும் என்ற சிந்தனை சிறிதும் இல்லாமல் தங்கள் போக்கில் ஏதாவது காரணகாரியங்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். குழந்தையை கவனிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் சிலர் இல்லை பல பெண்கள் வேலையை விட்டுவிட்டு குழந்தைக்கு நல்ல தாயாகவும் கணவனுக்கு நல்ல மனைவியாகவும் குடும்பப் பொறுப்பினை ஏற்று தங்களது கடமையைத் தொடங்குகின்றார்கள். அத்துடன் அவர்களது கற்பனை வாழ்க்கை முற்றுப் பெறுகிறது. 

குடும்பம் என்ற சாகரத்தில் விழுந்துவிட்டாலே உலகத்தில் உள்ள அனைத்து அறிவும் ஒரு பெண்ணுக்கு கிடைத்து விடுகிறது என்பதுபோலவே அவர்களுக்குள் ஒரு பிரமை உருவாகிறது. ஒரு புறம் மாமியார்-மாமனார் குடும்பம். மறுபுறம் தன்னை பெற்ற தாய் தந்தையர் குடும்பம் பிறகு தனது குடும்பம் என்று ஏகமாக குடும்பச் சுமைகள் ஏற்க நேர்கிறது. இதில் வெற்றிக் காணும் பெண்கள் வாழ்க்கையில் உதாரணமாகத் திகழ்கிறார்கள். வெற்றியைத் தேடுபவர்கள் பல சிரமங்களை சந்திக்கின்றனர். பல துயரங்களை அனுபவிக்கின்றனர். இறுதியில் நல்ல மருமகள் என்று பெயர் எடுப்பதற்குள் பாதி வாழ்க்கை முடிந்து விடுகிறது. எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் பரவாயில்லை நான் வேலையை விட மாட்டேன் என்ற வைராக்கியத்தில் வாழும் பெண்கள் குழந்தையை வளர்ப்பதில் படும் அவஸ்தையை சொல்லி முடியாது. கணவனும் மனைவியும் சேர்ந்து உழைத்தால்தான் நிறைய சம்பாதிக்க முடியும் சொத்துக்களை சேர்க்க முடியும் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளிக் கல்லூரி என்று சேர்த்து தரமானக் கல்வியைக் கொடுக்க முடியும் என்ற எண்ணத்தில் இயந்திர வாழ்க்கையாக தங்கள் வாழ்க்கையினை மாற்றிக் கொள்ளும் அவல நிலையைக் காணமுடிகிறது. 

இதற்கெல்லாம் காரணம் திருமணத்தின் போது நடக்கும் பேரம். கொடுக்கல் - வாங்கல் என்ற போர்வையில் நடக்கும் வியாபாரம். இரண்டு மனங்கள் இணையப் போகும் இடத்தில் மனங்களைப் பார்க்காமல் பணங்களை பார்க்கும் குடும்பத்தினரால் ஏற்படும் மனக்கசப்பு நம் ஸெளராஷ்ட்ர சமூகத்திலிருந்து அடியோடு அகற்றப்பட வேண்டும். ஒரு பெண் ஆயிரமாயிரம் கற்பனைகளை சுமந்து மாமியார் வீட்டிற்கு அடியெடுத்து வைக்கிறாள். அவள் மனதைப் புரிந்து கொண்டு தங்களை பிள்ளையின் மனதையும் புரிந்து கொண்டு இருவரின் இல்வாழ்க்கை மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் காண இரண்டு வீட்டு பெற்றவர்களும் என்று முற்படுகிறார்களோ அன்றுதான் வாழ்வில் வசந்தம் உண்டாகும். அந்த நன்னாளை தங்கள் பிள்ளைகளுக்கு விரைவில் உருவாக்க பெற்றவர்கள் முன்வரவேண்டும். 

கணவன் மனைவி குழந்தை என்ற வட்டத்தில் மகிழ்ச்சியுடன் தொடங்கிய சில தம்பதியர்களின் வாழ்க்கையில் நடந்த சில அநாகரீகமான செயல்கள் பழக்கங்கள் சம்பிரதாயம் என்ற போர்வையில் வாழ்க்கையை தொலைக்கச் செய்யும் சில பெற்றோர்களின் முரண்பாடான செயல்பாடுகள் குறித்தும் அவர்களது அநாகரீகமான கண்ணியமற்ற சிறிதும் மனிதத் தன்மையற்ற செயல் குறித்தும் அதனால் வாழ்க்கையை தொலைக்க முற்படும் தம்பதியர்களின்  நிலைப்பாடு பற்றிய விளக்கம் குறித்தும் அடுத்த இதழில் காண்போம்.

User Comments

Question : 1
+
6=