Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Neethi sambu

ஸெளராஷ்ட்ர நீதி ஸம்பு3
சிறு ஆய்வுரை
எஸ்.டி.ஞானேஸ்வரன்
ஸெளராஷ்ட்ர இனம் பெருமைக்குரிய இனம். ஓரினம் தன்னை பெருமைக்குரிய இனம் என்று கூறிக்கொள்ள வேண்டுமென்றால் அந்த இனம் இலக்கிய-இலக்கணங்களை தன்னுள் கொண்டிருக்க வேண்டும். இலக்கிய இலக்கணம் கொண்டு தமது மொழிக்கு தனி வரிவடிவம் கொண்டிருந்தால் அந்த இனம் தனித்துவம் பெற்று விடுகிறது. இத்தகைய சிறப்பியல்புகளோடு சிறந்து விளங்குவது நமது ஸெளராஷ்ட்ர இனம். 
பல இசையரசர்களையும் பெற்ற சால்பு நம்மினத்திற்குண்டு. தூபதீர்த்தார்யர்ää வேங்கடரமண பாகவதர்ää குருக்கு சுப்பார்யர்ää கவி வேங்கடசூரி சுவாமிகள்ää புட்டா அழகார்யர்ää ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் போன்ற உத்தமபுருஷர்கள் அவதரித்த இனம் ஸெளராஷ்ட்ர இனம். ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியம் இலக்கணம் ஆகியவற்றால் தலைநிமிர்ந்து நிற்கச்செய்ய மற்றொரு உத்தம புருஷரையும் ஈன்று கொடுத்தது. மதுரையில் ஜாபாலி கோத்தி;ரத்தில் தொப்பே குடும்பத்தில் பிறந்தவரே ஸ்ரீஇராமாராய் அவர்கள்.
இளமையில் நன்றாக கல்வியில் தேர்ந்து பல மொழிகளையும் பயின்று மேதாவியானார். தாய்மொழிப்பற்றுக் கொண்ட இவர் “தாய்மொழிக்கென்று எதுவும் செய்யாத ஈனப்பிறவியாய் இருத்தலாகாது” என எண்ணி தனது தாய்க்கு இலக்கிய மாலைச் சூட்டினார். ஸெளராஷ்ட்ர வியாகரணு என்னும் இலக்கண நூலையும் நந்தி நிகண்டு என்னும் அகராதியினையும் நீதி ஸம்பு என்னும் நீதி நூலையும் இயற்றினார். மேலும் பல இனிய நூல்களையும் படைத்து ஸெளராஷ்ட்ர இலக்கியச் சோலையில் நறுமணம் பரப்பினார். தமிழினத்திற்கு தி:ருக்குறள் ஒரு நீதிநூலாக விளங்குவதுபோல ஸெளராஷ்ட்ர இனத்திற்கு இராமராயின் நீதி ஸம்பு ஒரு நீதி நூலாக திகழ்கிறது. 
ஸெளராஷ்ட்ர நீதி ஸம்பு முழுவதையும் கற்று அதன் மகத்துவத்தை உணர்ந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஹெச்.என். ராண்டேல் என்பவர் தமது கைப்பட அதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளது இன்னும் சிறப்பாகும். அத்தகு சிறப்புடைய நீதிஸம்புவின் சில துளிகளை மட்டும் இக்கட்டுரையில் நுகர்வோம்.
ஒரு புலவன் நூலை எழுதும் முன்னர் இறைவனை துதித்துவிட்டு பிறகுதான் தொடங்குவான். இது எல்லா மொழிக்கும் மரபு. இதனை பின்பற்றி இராமராய் அவர்களும் நீதி ஸம்புவில் முதல் சுலோகத்தில் நாராயணனைத் துதித்து விட்டு பின் அடுத்த வரியிலேயே நூற்பயனையும் தெளிவாகக் கூறிவிடுகிறார்.
ஸ்ரீமந் நாராயணா வன்னொ
வந்தி3ன் லிக்குஸ{ தீ3ஸிரின்
ஜுட3த்திஸொ யிக3த்தெங்கொ
ஸெளராஷ்ட்ர நீதி ஸம்பு3நுன் - என்னும் இந்த முதல் சுலோகத்தில் எவ்வுயிர்க்கும் அருள் பாலிக்கும் கருணையே உருவான பாம்பணை பள்ளிக்கொண்ட நாராயணனை வணங்கிவிட்டு இந்நூல் கற்போர்க்கு இகலோகம் பரலோகம் என்னும் இரு செல்வங்களும் உறுதியாக கிடைக்கமாறு இந்நூலை படைப்பதாக கூறுகிறார்.
அறிவு என்பது இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்க்கும் அமைந்துள்ள ஓரு வரப் பிரசாதமாகும். மனிதன் அறிவால் செயல்படவேண்டும் - செயல் படுகிறான் என்பது யாவரும் அறிந்த உண்மை. அறிவு என்பது நல்லது கெட்டது எது என்பதை ஆய்ந்து அறிந்து செயல்பட உதவுகிறது. இதனை விளக்க வந்த இராமராய் அவர்கள் ஒரு சிறந்த உதாரணத்துடன் கூறுகிறார். 
லோகு3ம் கொ2வ்ளொ ஸொகன்தே3வு
லைடொ3 க2ள்யவ்னா ரட்சவnனு…. என்கிறார். 
இடையன் ஆடு மாடுகளை மேய்க்கிறான். சிறந்த இரை கிடைக்குமிடத்தைக் காட்டி அவைகளை காக்கின்றான். அவைகளை தன் வழிக்கு கொண்டுவர கையில் பிரம்பு ஒன்றும் வைத்திருக்கிறான். அதுபோன்றே இவ்வுலகில் இறைவனின் பணியும் அமைகிறது. இறைவன் மனிதர்களை மேய்க்கிறான். இடையன் கையில் பிரம்பு வைத்துள்ளதைப் போல இறைவன் கையில் பிரம்புடன் வருவதில்லை. பின் எவ்வாறு மனிதர்களை வழிப்படுத்துகிறான்.
பதன் வழிக்கு கொண்டுவர கையில் பிரம்பு ஒன்றும் வைத்திருக்கிறான். அதுபோன்றே இவ்வுலகில் இறைவனின் பணியும் அமைகிறது. இறைவன் மனிதர்களை மேய்க்கிறான். இடையன் கையில் பிரம்பு வைத்துள்ளதைப் போல இறைவன் கையில் பிரம்புடன் வருவதில்லை. பின் எவ்வாறு மனிதர்களை வழிப்படுத்துகிறான்.
ப4க்துனுக் மதிமெக்3 தே3ஸ{
ரட்சுல்னொ தெகஹால் தெனு - என்கிறார்.
அதாவது மதி என்னும் சிறந்த கருவியினை இறைவன் மனிதர்களுக்கு தருகிறான். இடையன் பிரம்பினால் ஆடு மாடுகளை வழிப்படுத்துவதுபோல மனிதன் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட அறிவினால் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.
இன்றைய நாளில் பெரும்பாலோர் எந்த வேலையையும் முழுமையாகச் செய்யாது போனாலும் அதுக்கதுக்கு அதிர்ஷ்டம் வேணும்பா என்று கூறியே நாளைக் கடத்துகின்றனர். ஒருவனுக்கு இறைவனின் அருளால் கிடைக்கும் அதிர்ஷ்டம் மட்டும் போதாது என்று கூறும் இராமராய் அவர்கள் அதனோடு இணைந்து செயல்பட என்ன வேண்டும் என்பதையும் கூறுகிறார்.
தை3வத்த நொண்டயோஸ் பு2ர்னா
மெனிக்யத்தன் மிளின் ஹொனொ
தி3ய்யொ மிள்னாத்தொ காமஸ்கொ
ஹோன கை ப10ர்த்தி ஸத்தம – என்கிறார்.
அதிர்ஷ்டத்துடன் இணைந்து செயல்பட “மெனிக்யத்தன் மிளின் ஹொனொ என்கிறார். அதாவது மனித முயற்சியும் வேண்டும். தி2ய்யொ மிள்னாத்தொ காமஸ்கொ ஹோன என்கிறார். அதிர்ஷ்டமும் மனித முயற்சியும் இணைய வேண்டும். இரண்டும் இணைந்தால் தான் எந்த காரியமும் கைக்கூடும் என்று கூறுகிறார்.
கற்றறிந்த அறிஞர்கள் அதிர்ஷ்டம் தன்னை வந்து சேருமென்று எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருக்காது காரியமாகுமாறு காரியங்களை செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டிருப்பார்கள் என்று நான்காவது சுலோகத்தில் சொல்கிறார். அதிர்ஷ்டமும் மனித முயற்சியும் இணையாது இருக்குமானால் அது எதைப்போன்றது என்பதை மற்றொரு சிறந்த உதாரணத்தால் விளக்குகிறார். 
தை3வத்தன் பீ3ஸொகன் மென்னொ
மெனிக்யத்தன் பொ4ய்ஞ் ஸொகன் 
பொ4ய்ஞ்பீ3ன் மிளேத்ன ஹோஸ் ஸஸ்யொ
தி3ய்யொ மிள்னாத்தொ ஹோனா கை – என்கிறார்.
அதாவது அதிர்ஷ்டம் என்பது விதை போன்றது. மனித முயற்சி என்பது நிலம் போன்றது. நிலத்தைப் போல நல்லது கெட்டது எதுவரினும் தாங்கிக்கொள்ளும் மனோதிடத்துடன் மனிதன் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக இங்கு மனித முயற்சியினை நிலத்திற்கு ஒப்பிடுகிறார். அதே நேரத்தில் விதை நல்ல சூழ்நிலையில்தான் முளைக்க தொடங்கும். அத்தருணத்தில் நன்றாக கவனித்தால்தான் முளையைக் காக்கமுடியும். நீர் அதிகமாகி போனாலும் விதை அழுகிவிடும். 
எனவே நல்ல நிலம் போன்ற மனித முயற்சியுடையவனிடம் அதிர்ஷ்டம் என்ற விதை செல்ல அது நன்கு முளைக்கும். முயற்சியில்லா மனிதனிடம் அதிர்ஷ்டம் செல்ல அது பயனற்றுவிடும் என்பதற்காகவே இராமராய் இத்தகு சிறந்த உவமையை கையாள்கிறார். நிலமும் விதையும் இணையாமல் முளைக்காது. அதுபோல மனிதமுயற்சியும் அதிர்ஷ்டமும் இணையாமல் முழுப்பயனளிக்காது என்று உறுதியாகக் கூறுகிறார். 
அதிர்ஷ்டமும் மனிதமுயற்சியும் இணையவேண்டும் என்று வலியுறுத்தும் இராமராய் மனிதன் எவ்வாறு வாழ்ந்து காட்டவேண்டும் என்றும் கூறுகிறார். பொதுவாக இந்த மண்ணுலக வாழ்வில் மனித எண்ணமானது ஒரு சாண் வயிற்றை நோக்கியே சுழன்றுக் கொண்டிருக்கிறது. வயிற்றுக்காக எப்படியும் வாழலாம் என்றில்லாமல் தன்மானத்துடன் இப்படித்தான் வாழ்வது என்று வரையறுத்துக் கொள்ளவேண்டும். தன்மானத்திற்கு இழுக்கு வரும் விதத்தில் இழிந்த செயலை செய்யக்கூடாது என்பதை ஏழாவது சுலோகத்தில் கூறுகிறார்.
பீ4கு3 மைநாத்தொ ஹோ இந்து3ரு
அபுல் ஸ்ரமொதொகன் மிளெ
ப4ஜ்ஜிதி க2ய்ஜிவெத் நிம்மள்
க3ரன்ஸே தெங்கொ கொ2ப்பி3கு3 
அதாவது பிறரை அண்டிச்சென்று இரந்து வாழ்வதைவிட தனக்கு கிடைக்கும் அதாவது சுயசம்பாத்தியத்தால் கிடைக்கும் கீரை போன்ற எளிய உணவாக இருந்தாலும் அதனையே திருப்தியாக உண்டு வாழ்வதால் கிடைக்கும் இன்பமே என்றும் நிலைக்கும் என்கிறார்.
பீ4கு3 மைனாத்தபுல் கொ4ம்மொ
ப4ஜ்ஜிதி க2ய்ஜிவெத் ப3ரொ
ஸெஜ்ஜெகே4ர் ஜெமன் மென்தின்
ஜெமே தௌமானுஜை தெகொ
இந்த சுலோகத்தில் மேலே சொன்ன கருத்தினை வலியுறுத்தும் விதத்தில் இரந்துண்டு வாழாதே அதற்கு பதிலாக தன் வீட்டிலேயே இருந்து கொண்டு கீரைப்போன்ற எளிய உணவாக இருப்பினும் அதனை உண்டு வாழ்வதே சாலச்சிறந்தது. அண்டைவீட்டில் அறுசுவையோடு அமுது படைப்பினும் அங்குச் செல்லக்கூடாது என்கிறார். அப்படி சென்றால் என்ன என்று ஒரு வினாவை எழுப்பினால் அதற்கும் பதிலளிக்கிறார். ஸெஜ்ஜெகே4ர் ஜெமன் மென்தின் ஜெமே தௌமானுஜை தெகொ என்று கூறுகிறார்.
அடுத்து வாய்மையைப் பற்றி கூறுகிறார். நான்மறைகளையும் சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்று புண்ணிய நீராடியிருப்பினும் அவையெல்லாம் வாய்மைக்கு ஈடாகாது. வாய்மைக்கு ஈடான எந்த அறநூலும் கிடையாது என்று வள்ளுவப் பெருந்தகை கூறியிருப்பதை இங்கு நினைவு கொள்ளலாம். 
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லைஎனைத் தொன்றும்
வாய்மையின் நல்ல பிற – திருக்குறள் 300
வாய்மை தவறாது வாழ வேண்டும். சத்தியத்தின் அன்பு கொண்டு அதனை பின்பற்றி வாழ்பவரே உத்தம புருஷர்கள் என்பது அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கையால் யாவரும் அறிந்த ஓர் உண்மை. சத்தியம் என்பது எத்தகைய சிறப்பி;னையுடையது என்பதை இராமராய் அவர்கள் பத்தாவது சுலோகத்தில் சொல்கிறார்.
ஸம்ஹீர்னுகு ஹிரோஸ் லானி
ஸம்ஹிரானுக் க்ரதூஸ் ப3ர
ஸம்யாகு3னுக் பெ3டோஸ் லானி
ஸம்பெ3டானுக் நிப103ஸ் ப3ர 
என்ற இந்த சுலோகத்தில் நிலைத்த இன்பம் தருவது எதுவெனக் கூறுகிறார். நூறு கிணறுகளை விட ஒரு குளம் மேல். நூறு குளங்களை விட ஒரு யாகம் செய்வது மேல். அவ்வாறு செய்யப்படும் நூறு யாகங்களைவிட ஒரு மகனைப் பெறுவது மேல். நூறு மகன்களைவிட ஒருவனுக்கு சத்தியமே நிலைத்த இன்பம் தரும்.
மேலும் அடுத்த சுலோகத்திலேயே சத்தியத்திற்கு மதிப்பீடும் தருகிறார். ஆயிரம் குதிரைகளை வைத்து செய்யப்படும் அசுவமேத யாகமானது ஒருவருக்கு எண்ணற்ற சிறப்பினை தருமென்று கூறுகிறது வேதநூல். அப்படிப்பட்ட யாகத்தை ஒரு தட்டிலும் ஒருவன் அன்றாட வாழ்க்கையில் எப்பேர்பட்ட துன்பம் வந்தபோதிலும் விடாது கடைப்பிடித்துவரும் சத்தியத்தினை மறுதட்டிலும் வைத்து நிறுத்தினால் யாகமும் சாதாரணமாகிவிடும். சத்தியமே எல்லாவற்றிலும் மேலாகி எப்போதும் எங்கும் நிலைத்த சிறப்பினை தரவல்லது என்று அழகாக கூறுகிறார்.
சத்தியத்தின் சிறப்பினைக் கூறி அதற்கு மதிப்பீடும் கொடுத்து அதனையே அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தும் இராமராயின் இந்த நீதி ஸம்புவின் பன்னிரெண்டாவது சுலோகமே எப்பொழுதும் எடுத்தாளப்படுகிறது. ஸெளராஷ்ட்ரராக பிறந்த ஒவ்வொருவரும் தமது உள்ளத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டிய ஒப்பற்ற சுலோகமாகும். நீதிஸம்பு என்றதுமே நினைவிற்கு வரும் சுலோகமும் அதுவாகவே இருக்கும். அந்த அளவிற்கு என்ன சொல்லியிருக்கிறார் என்பதை காண்போம்.
ஓவ்வொரு கருத்தினையும் ஆணித்தரமாக உறுதிபட கூறுகிறார் இராமராய். ஸெத்துக் ஸமான் தெ4ரும் ஜுண்ணா. சத்தியத்திற்கு இணையான அறம் எதுவும் இல்லை. ஸெத்து ஸொம்மரு ஸ்ரேஷ்டு நீ: சத்தியத்தைவிட உயர்ந்த செல்வமும் எதுவும் இல்லை. ஸெத்தும் ஹீனும் பொ4வெ பாபுன் ஸெத்து ஸேத்தெகொ ஸேக3ரன். சத்தியத்தினை கடைப்பிடியாதவனிடத்தே பாவங்கள் மலிந்திருக்கும். சத்தியத்தை கடைப்பிடிப்பவனுக்கு என்றுமே மதிப்பும் மரியாதையும் கௌரவமும் உண்டு. இதற்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கையே சிறந்த எடுத்துக்காட்டாகும். சத்தியத்தை தவறாது கடைப்பிடித்ததின் விளைவு இன்றும் அண்ணலை மகாத்மா என்று உலகமே போற்றும் உத்தமப் புருஷராகத் திகழ்கிறார். அதுபோல நாமும் சத்தியத்தை கடைப்பிடிக்கவேண்டும் என்கிறார்.
இவ்வாறு முதல் பன்னிரெண்டு சுலோகங்களிலேயே மனிதன் உத்தமனாக விளங்க வழிவகுக்கும் ஸெளராஷ்ட்ர நீதிஸம்பு3 முழுவதையும் கற்று அதன்படி வாழ்க்கையில் நடந்துகொண்டால் இராமராய் முதல் சுலோகத்தில் கூறிய தி3ஸிரின் அதாவது இக பர லோகம் என்னும் இரண்டு செல்வங்களையும் பெற்று வளமோடு வாழலாம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று விளங்கும்.
இக்கட்டுரை எழுத உதவியவை:
1. ஸெளராஷ்ட்ர நீதி ஸம்பு3 – கு.வே. பத்மநாபய்யர் வெளியீடு
2. திண்டுக்கல் ஸெளராஷ்ட்ர இளைஞர் பேரணியின் 4வது ஆண்டுவிழா சிறப்புமலர்.
3. புலவர் சி.இரா. சுhரநாத் அவர்கள் எழுதிய குறிப்பு

ஸெளராஷ்ட்ர நீதி ஸம்பு3

சிறு ஆய்வுரை

எஸ்.டி.ஞானேஸ்வரன்

(1976ஆம் ஆண்டு மொதிரெத்து முதலாண்டு மலரில் நான் எழுதிய இந்தக் கட்டுரையை மீண்டும் இன்றைய நாளில் வெளியிட்டுள்ளேன். காரணம் நம் சமூக இளைஞர்களிடையே இப்போது மொழி ஆர்வம் அதிகமாகி விட்டது. இதனால் இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகின்ற சமயத்தில் அவர்களின் ஆர்வம் இன்னும் அதிகமாகலாம் என்பதற்காகவே நாம் இதனை வெளியிட்டுள்ளோம். –ஆசிரியர்) 

ஸெளராஷ்ட்ர இனம் பெருமைக்குரிய இனம். ஓரினம் தன்னை பெருமைக்குரிய இனம் என்று கூறிக்கொள்ள வேண்டுமென்றால் அந்த இனம் இலக்கிய-இலக்கணங்களை தன்னுள் கொண்டிருக்க வேண்டும். இலக்கிய இலக்கணம் கொண்டு தமது மொழிக்கு தனி வரிவடிவம் கொண்டிருந்தால் அந்த இனம் தனித்துவம் பெற்று விடுகிறது. இத்தகைய சிறப்பியல்புகளோடு சிறந்து விளங்குவது நமது ஸெளராஷ்ட்ர இனம். 

பல இசையரசர்களையும் பெற்ற சால்பு நம்மினத்திற்குண்டு. தூபதீர்த்தார்யர், வேங்கடரமண பாகவதர், குருக்கு சுப்பார்யர், கவி வேங்கடசூரி சுவாமிகள, புட்டா அழகார்யர், ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் போன்ற உத்தமபுருஷர்கள் அவதரித்த இனம் ஸெளராஷ்ட்ர இனம். ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியம் இலக்கணம் ஆகியவற்றால் தலைநிமிர்ந்து நிற்கச்செய்ய மற்றொரு உத்தம புருஷரையும் ஈன்று கொடுத்தது. மதுரையில் ஜாபாலி கோத்திரத்தில் தொப்பே குடும்பத்தில் பிறந்தவரே ஸ்ரீஇராமாராய் அவர்கள்.

இளமையில் நன்றாக கல்வியில் தேர்ந்து பல மொழிகளையும் பயின்று மேதாவியானார். தாய்மொழிப்பற்றுக் கொண்ட இவர் “தாய்மொழிக்கென்று எதுவும் செய்யாத ஈனப்பிறவியாய் இருத்தலாகாது” என எண்ணி தனது தாய்க்கு இலக்கிய மாலைச் சூட்டினார். ஸெளராஷ்ட்ர வியாகரணு என்னும் இலக்கண நூலையும் நந்தி நிகண்டு என்னும் அகராதியினையும் நீதி ஸம்பு என்னும் நீதி நூலையும் இயற்றினார். மேலும் பல இனிய நூல்களையும் படைத்து ஸெளராஷ்ட்ர இலக்கியச் சோலையில் நறுமணம் பரப்பினார். தமிழினத்திற்கு திருக்குறள் ஒரு நீதிநூலாக விளங்குவதுபோல ஸெளராஷ்ட்ர இனத்திற்கு இராமராயின் நீதி ஸம்பு ஒரு நீதி நூலாக திகழ்கிறது. 

ஸெளராஷ்ட்ர நீதி ஸம்பு முழுவதையும் கற்று அதன் மகத்துவத்தை உணர்ந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஹெச்.என். ராண்டேல் என்பவர் தமது கைப்பட அதை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளது இன்னும் சிறப்பாகும். அத்தகு சிறப்புடைய நீதிஸம்புவின் சில துளிகளை மட்டும் இக்கட்டுரையில் நுகர்வோம்.

ஒரு புலவன் நூலை எழுதும் முன்னர் இறைவனை துதித்துவிட்டு பிறகுதான் தொடங்குவான். இது எல்லா மொழிக்கும் மரபு. இதனை பின்பற்றி இராமராய் அவர்களும் நீதி ஸம்புவில் முதல் சுலோகத்தில் நாராயணனைத் துதித்து விட்டு பின் அடுத்த வரியிலேயே நூற்பயனையும் தெளிவாகக் கூறிவிடுகிறார்.

 ஸ்ரீமந் நாராயணா வன்னொ

வந்தி3ன் லிக்கு தீ3ஸிரின்

ஜுட3த்திஸொ யிக3த்தெங்கொ

ஸெளராஷ்ட்ர நீதி ஸம்பு3நுன் 

என்னும் இந்த முதல் சுலோகத்தில் எவ்வுயிர்க்கும் அருள் பாலிக்கும் கருணையே உருவான பாம்பணை பள்ளிக்கொண்ட நாராயணனை வணங்கிவிட்டு இந்நூல் கற்போர்க்கு இகலோகம் பரலோகம் என்னும் இரு செல்வங்களும் உறுதியாக கிடைக்குமாறு இந்நூலை படைப்பதாக கூறுகிறார்.

அறிவு என்பது இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்க்கும் அமைந்துள்ள ஓரு வரப் பிரசாதமாகும். மனிதன் அறிவால் செயல்படவேண்டும் - செயல் படுகிறான் என்பது யாவரும் அறிந்த உண்மை. அறிவு என்பது நல்லது கெட்டது எது என்பதை ஆய்ந்து அறிந்து செயல்பட உதவுகிறது. இதனை விளக்க வந்த இராமராய் அவர்கள் ஒரு சிறந்த உதாரணத்துடன் கூறுகிறார். 

  லோகு3ம் கொ2வ்ளொ ஸொகன்தே3வு

லைடொ3 க2ள்யவ்னா ரட்சவனு…. என்கிறார். 

இடையன் ஆடு மாடுகளை மேய்க்கிறான். சிறந்த இரை கிடைக்குமிடத்தைக் காட்டி அவைகளை காக்கின்றான். அவைகளை தன் வழிக்கு கொண்டுவர கையில் பிரம்பு ஒன்றும் வைத்திருக்கிறான். அதுபோன்றே இவ்வுலகில் இறைவனின் பணியும் அமைகிறது. இறைவன் மனிதர்களை மேய்க்கிறான். இடையன் கையில் பிரம்பு வைத்துள்ளதைப் போல இறைவன் கையில் பிரம்புடன் வருவதில்லை. பின் எவ்வாறு மனிதர்களை வழிப்படுத்துகிறான்.

ப4க்துனுக் மதிமெக்3 தே3{

ரட்சுல்னொ தெகஹால் தெனு - என்கிறார்.

அதாவது மதி என்னும் சிறந்த கருவியினை இறைவன் மனிதர்களுக்கு தருகிறான். இடையன் பிரம்பினால் ஆடு மாடுகளை வழிப்படுத்துவதுபோல மனிதன் தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட அறிவினால் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

இன்றைய நாளில் பெரும்பாலோர் எந்த வேலையையும் முழுமையாகச் செய்யாது போனாலும் அதுக்கதுக்கு அதிர்ஷ்டம் வேணும்பா என்று கூறியே நாளைக் கடத்துகின்றனர். ஒருவனுக்கு இறைவனின் அருளால் கிடைக்கும் அதிர்ஷ்டம் மட்டும் போதாது என்று கூறும் இராமராய் அவர்கள் அதனோடு இணைந்து செயல்பட என்ன வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

தை3வத்த நொண்டயோஸ் பு2ர்னா

மெனிக்யத்தன் மிளின் ஹொனொ

தி3ய்யொ மிள்னாத்தொ காமஸ்கொ

ஹோன கை g+h;j;jp ]j;jk vd;fpwhh;.

அதிர்ஷ்டத்துடன் இணைந்து செயல்பட “மெனிக்யத்தன் மிளின் ஹொனொ என்கிறார். அதாவது மனித முயற்சியும் வேண்டும். தி2ய்யொ மிள்னாத்தொ காமஸ்கொ ஹோன என்கிறார். அதிர்ஷ்டமும் மனித முயற்சியும் இணைய வேண்டும். இரண்டும் இணைந்தால் தான் எந்த காரியமும் கைக்கூடும் என்று கூறுகிறார்.

கற்றறிந்த அறிஞர்கள் அதிர்ஷ்டம் தன்னை வந்து சேருமென்று எப்பொழுதும் எண்ணிக் கொண்டிருக்காது காரியமாகுமாறு காரியங்களை செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டிருப்பார்கள் என்று நான்காவது சுலோகத்தில் சொல்கிறார். அதிர்ஷ்டமும் மனித முயற்சியும் இணையாது இருக்குமானால் அது எதைப்போன்றது என்பதை மற்றொரு சிறந்த உதாரணத்தால் விளக்குகிறார். 

தை3வத்தன் பீ3ஸொகன் மென்னொ

மெனிக்யத்தன் பொ4ய்ஞ் ஸொகன் 

பொ4ய்ஞ்பீ3ன் மிளேத்ன ஹோஸ் ஸஸ்யொ

தி3ய்யொ மிள்னாத்தொ ஹோனா கை – என்கிறார்.

அதாவது அதிர்ஷ்டம் என்பது விதை போன்றது. மனித முயற்சி என்பது நிலம் போன்றது. நிலத்தைப் போல நல்லது கெட்டது எதுவரினும் தாங்கிக்கொள்ளும் மனோதிடத்துடன் மனிதன் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக இங்கு மனித முயற்சியினை நிலத்திற்கு ஒப்பிடுகிறார். அதே நேரத்தில் விதை நல்ல சூழ்நிலையில்தான் முளைக்க தொடங்கும். அத்தருணத்தில் நன்றாக கவனித்தால்தான் முளையைக் காக்கமுடியும். நீர் அதிகமாகி போனாலும் விதை அழுகிவிடும். 

எனவே நல்ல நிலம் போன்ற மனித முயற்சியுடையவனிடம் அதிர்ஷ்டம் என்ற விதை செல்ல அது நன்கு முளைக்கும். முயற்சியில்லா மனிதனிடம் அதிர்ஷ்டம் செல்ல அது பயனற்றுவிடும் என்பதற்காகவே இராமராய் இத்தகு சிறந்த உவமையை கையாள்கிறார். நிலமும் விதையும் இணையாமல் முளைக்காது. அதுபோல மனிதமுயற்சியும் அதிர்ஷ்டமும் இணையாமல் முழுப்பயனளிக்காது என்று உறுதியாகக் கூறுகிறார். 

அதிர்ஷ்டமும் மனிதமுயற்சியும் இணையவேண்டும் என்று வலியுறுத்தும் இராமராய் மனிதன் எவ்வாறு வாழ்ந்து காட்டவேண்டும் என்றும் கூறுகிறார். பொதுவாக இந்த மண்ணுலக வாழ்வில் மனித எண்ணமானது ஒரு சாண் வயிற்றை நோக்கியே சுழன்றுக் கொண்டிருக்கிறது. வயிற்றுக்காக எப்படியும் வாழலாம் என்றில்லாமல் தன்மானத்துடன் இப்படித்தான் வாழ்வது என்று வரையறுத்துக் கொள்ளவேண்டும். தன்மானத்திற்கு இழுக்கு வரும் விதத்தில் இழிந்த செயலை செய்யக்கூடாது என்பதை ஏழாவது சுலோகத்தில் கூறுகிறார்.

பீ4கு3 மைநாத்தொ ஹோ இந்து3ரு

அபுல் ஸ்ரமொதொகன் மிளெ

ப4ஜ்ஜிதி க2ய்ஜிவெத் நிம்மள்

க3ரன்ஸே தெங்கொ கொ2ப்பி3கு3 

அதாவது பிறரை அண்டிச்சென்று இரந்து வாழ்வதைவிட தனக்கு கிடைக்கும் அதாவது சுயசம்பாத்தியத்தால் கிடைக்கும் கீரை போன்ற எளிய உணவாக இருந்தாலும் அதனையே திருப்தியாக உண்டு வாழ்வதால் கிடைக்கும் இன்பமே என்றும் நிலைக்கும் என்கிறார்.

பீ4கு3 மைனாத்தபுல் கொ4ம்மொ

ப4ஜ்ஜிதி க2ய்ஜிவெத் ப3ரொ

ஸெஜ்ஜெகே4ர் ஜெமன் மென்தின்

ஜெமே தௌமானுஜை தெகொ

இந்த சுலோகத்தில் மேலே சொன்ன கருத்தினை வலியுறுத்தும் விதத்தில் இரந்துண்டு வாழாதே அதற்கு பதிலாக தன் வீட்டிலேயே இருந்து கொண்டு கீரைப்போன்ற எளிய உணவாக இருப்பினும் அதனை உண்டு வாழ்வதே சாலச்சிறந்தது. அண்டைவீட்டில் அறுசுவையோடு அமுது படைப்பினும் அங்குச் செல்லக்கூடாது என்கிறார். அப்படி சென்றால் என்ன என்று ஒரு வினாவை எழுப்பினால் அதற்கும் பதிலளிக்கிறார். ஸெஜ்ஜெகே4ர் ஜெமன் மென்தின் ஜெமே தௌமானுஜை தெகொ என்று கூறுகிறார்.

அடுத்து வாய்மையைப் பற்றி கூறுகிறார். நான்மறைகளையும் சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்று புண்ணிய நீராடியிருப்பினும் அவையெல்லாம் வாய்மைக்கு ஈடாகாது. வாய்மைக்கு ஈடான எந்த அறநூலும் கிடையாது என்று வள்ளுவப் பெருந்தகை கூறியிருப்பதை இங்கு நினைவு கொள்ளலாம். 

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லைஎனைத் தொன்றும்

வாய்மையின் நல்ல பிற – திருக்குறள் 300

வாய்மை தவறாது வாழ வேண்டும். சத்தியத்தின் அன்பு கொண்டு அதனை பின்பற்றி வாழ்பவரே உத்தம புருஷர்கள் என்பது அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கையால் யாவரும் அறிந்த ஓர் உண்மை. சத்தியம் என்பது எத்தகைய சிறப்பினையுடையது என்பதை இராமராய் அவர்கள் பத்தாவது சுலோகத்தில் சொல்கிறார்.

ஸம்ஹீர்னுகு ஹிரோஸ் லானி

ஸம்ஹிரானுக் க்ரதூஸ் ப3ர

ஸம்யாகு3னுக் பெ3டோஸ் லானி

ஸம்பெ3டானுக் epg+3]; g3u

 என்ற இந்த சுலோகத்தில் நிலைத்த இன்பம் தருவது எதுவெனக் கூறுகிறார். நூறு கிணறுகளை விட ஒரு குளம் மேல். நூறு குளங்களை விட ஒரு யாகம் செய்வது மேல். அவ்வாறு செய்யப்படும் நூறு யாகங்களைவிட ஒரு மகனைப் பெறுவது மேல். நூறு மகன்களைவிட ஒருவனுக்கு சத்தியமே நிலைத்த இன்பம் தரும்.

மேலும் அடுத்த சுலோகத்திலேயே சத்தியத்திற்கு மதிப்பீடும் தருகிறார். ஆயிரம

User Comments
K.V.Pathy
artun amre bhaaShaam likket chokkaD.
Information
Name
Comments
 
Verification Code
2 + 9 =