ad1
askinAk nava orsu subha nanthinin

gOthru charithru...15

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்

தொகுத்தளிப்பவர்

சூர்யாஞானேஸ்வர்

19.பராஸர மகரிஷி

வசிஷ்ட மகரிஷியின் பேரன் பராஸர மகரிஷி. வேதத்தின் ஆறாவது அங்கமான ஜோதிட சாஸ்திரத்தில் தன்னிகரற்றப் புலமைப் பெற்றவர் இம்மகரிஷி. பராஸரர் வேதத்தின் முதல் பாக விளக்கமாக பராசர விசிஷ்ட பரதர்ம சாஸ்திரம் என்னும் ஸ்மிருதியையும் வேதத்தின் உத்திர பாகத்தின் விளக்கமாக விஷ்ணுபுராணமும் அருளியவர்.

இம்மகரிஷிக்கு புலஸ்தியராலும் பாட்டனாரான வசிஷ்டராலும் பரம்பொருள் யார் என்ற உண்மையை உணரக்கூடிய வரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு பராசரர் என்ற பெயர் வருவதற்குண்டான காரணமும் கூறப்பட்டுள்ளது. அதாவது வேதத்திற்கு புறம்பான பாஹ்யர்களும் வேதத்திற்கு அவப்பெயர்களை உருவாக்கும் குத்ருஷ்டி மார்க்கத்தவராகிய பரர்களை பிராமண தர்க்க நியாயங்களை இம்சிக்கிறவர் ஆகையால் இவருக்கு பராசரர் என்ற பெயர் வழங்கலாயிற்று. மேலும் இவர் ஸ்ரீராமானுஜரின் ஆச்சார்ய சிரேஷ்டர் ஆளவந்தாரால் மிகவும் மதிக்கப்பட்டார்.

ஒரு சமயம் இவர் ஆற்றைக் கடக்க விரைந்து வந்தார். வானசாஸ்திரப்படி அன்றைய தினம் மிக அற்புதமான கிரகச்சேர்க்கை இருந்தது. இந்த நன்னாளில் புத்திரன் பிறந்தால் அவன் மிக்க அறிவாளியாகவும் சிறந்த ஞானியாகவும் திகழ்வான் என்பதே பராசரரின் அவசரத்திற்குக் காரணம். அச்சமயம் ஆற்றில் பரிசல் ஓட்டும் மச்சகந்தி என்ற மீனவப்பெண்ணின் அழகில் மயங்கி அவள் மூலம் ஓர் ஆண் மகவைப் பெற்றார். ஆற்றைக் கடந்து கிருஷ்ணா என்னும் தீவில் குழந்தைப் பிறந்ததால் அக்குழந்தைக்கு கிருஷ்ணா துவைப்பாயனர் என்று பெயரிட்டார். பிற்காலத்தில் இக்குழந்தைதான் வேதங்களை வகுத்தும் பகுத்தும் கொடுத்ததால் வேதவியாசர் என்று போற்றப்படும் மகாஞானியானர். மகாபாரதத்தின் மூலவித்து இவர்தான்.

தாயானவள் தம்மை நினைக்கும்போது நேரில் வருவதாக கூறிவிட்டு தவ வாழ்க்கையை மேற்கொண்ட முனிசிரேஷ்டர். இம்மகரிஷியின் ஆசிரமத்தின் சிஷ்ய-பிரசிஷ்யைகளின் வழிவந்தவர்களே பராசர கோத்திரத்தவர். 

பராஸர கோத்திரத்தின் ஸ்லோகம்:

ஸ்ரீஸ{ர்ய தை3வம் ஸிதபஞச தாரா

மார்ஜார யோநிர் விபு3தா4 க3ணம்ச

வேணுஸ்ச வ்ருகே;ஷா விஹக3ஸ்ச ஹம்ஸோ

பராஸராக3ஸ்த்ய மரீசிஜாநாம்.

 

பாராஸர கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : புனர்பூசம்

கோ3த்ரு : பராஸர கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : சூரியன் 

க3ணம் : தேவ க3ணம்

வாஹநொ : மஞ்ஜிரி (பூனை)

பட்சி : அன்னப்பட்சி 

விருட்சம் : வேணுவிருட்சம் 

வாந் : பொ4கு3நுவான்/போமவாந்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : வசிஷ்ட, ஸாக்தேய மற்றும் பராஸர ஆகிய கோத்திரங்கள்

       திரியாரிஷ ப்ரவரம்.


ராஸர மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

1. பொ4குணாந் (பொவுணா)

2. மொண்ட3ல்லு (மண்ட3ல்)

3. பா3ணால் (வாணால்)

4. காளா

5. நெத்தி

6. மளிமன்னா

7. ருப்பா

8. தேவேந்திரியா

9. ஜெக்கு

10. பொ3ஸடி3

11. ஸாரங்க3ம்

12. பூலாமடை

13. காவேடி

14. த3ஸ்மா

15. புரோஹிதம்

16. கொண்டாட்டா

17. புஞ்சி

18. முத்3த3ள்கே3ந் (முத்தளகிரி)

19. ஸ{க்கோண்ணு

20. கா3ணாந்

21. கம்மாந்

22. ம:ட்டாந்

23. தாடவடாந்

24. உண்டாந்

25. கொம்மாந்

இது தவிர வேறு விடுப்பட்ட வீட்டுப்பெயர்கள் இருந்தால் தெரியப்படுத்தி இப்பணியினை முழுமையடைய செய்யவேண்டுகிறேன். 

 

 

User Comments

Question : 3
+
7=