ad1
askinAk nava orsu subha nanthinin

thErthal ...2

அன்புள்ள தம்பிக்கு….

ஆசீர்வாதம். சென்ற வாரம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டப்படி சட்டமன்றத்திற்கு செல்லும் ஸெளராஷ்ட்ரர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். தொகுதி மக்களுக்கு நல்லமுறையில் பணிகள் செய்து நல்லபெயர் எடுக்கவேண்டும். அத்துடன் அவரை நம் சமூகத்திற்கு கிடைத்தற்கரிய பொக்கிஷமாகக் கருதுவதால் சமூக நலனில் அதாவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் வாழுகின்ற அனைத்து ஸெளராஷ்ட்ரர்கள் நலனில் முழு அக்கறைக் கொண்டு செயல்படுபவராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதன்படி செயல்படும் தன்மை யாருக்கு உள்ளதோ அவர்களை சரியாக இனங்கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். 

இந்த வாரம் அரசியல் கட்சிகளில் சமூகப்பிரமுகர்களின் ஈடுபாடு குறைந்து உள்ளதற்கான காரணங்களை ஆராய்வோம். சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இந்த நாட்டிற்குள் சிறைச்சாலையா? சிறைச்சாலைக்குள் இந்த நாடா? என்று. அதனை சற்றே மாற்றி அரசியல் கட்சிகளுக்குள் நமது சமூகமா? இல்லை நம் சமூகத்திற்குள் அரசியல் கட்சிகளா? என்ற கண்ணோட்டத்தில் சிந்தனையை ஓடவிடுவோம். 

அகிம்சை, ஆன்மீகம், சத்தியம், தர்மம், உண்ணாவிரதம் என்ற கோட்பாட்டில் இருந்தது அன்றைய காங்கிரஸ் கட்சி. அதனால் ஈர்க்கப்பட்டு நம் சமூகப்பிரமுகர்கள் அரசியலில் அதிக அளவு பங்கெடுத்துக் கொண்டனர். ஆனால் இன்றைய அரசியல் கட்சிகள் அப்படியா உள்ளன? எதற்கெடுத்தாலும் அடிதடி, ரவுடித்தனம், மிரட்டல், தர்மத்திற்கும் சத்தியத்திற்கும் கட்டுப்பாடாமை, ஆன்மீகத்தை வைத்து அரசியல் பண்ணும் கட்சிகள், அகிம்சை மறைந்து இம்சையே தலைவிரித்து ஆடுகின்ற இந்த சூழலில் நம் சமூகப் பிரமுகர்கள் சரி இளைஞர்கள் சரி அரசியலில் ஆர்வங்காட்டாமல் ஒதுங்கியிருக்க காரணமாகி விட்டது என்பதுதான் அப்பட்டமான உண்மை. 

ஏனென்றால் ஒழுக்கத்தாலும் பிறர் மனம் நோகாமல் நடந்துக் கொள்வதிலும் பிறருக்காக உதவி செய்து மகிழ்வதிலும் சத்தியம் தர்மம் ஆன்மீகம் என்று எல்லாவற்றிலும் நல்ல பண்பாட்டுடன் நடந்து கொள்ளும் விதத்தாலும் அடிதடிää ரகளைää குடி என்று எந்த வகையிலும் வழக்கு வியாஜ்ஜியங்களில் ஈடுபடாத சமுதாயம் என்று போலிஸ் தரப்பினரால் பாராட்டப்படும் நாம் எப்படி இந்த அரசியலில் ஆர்வங்காட்ட முடியும் என்று கொஞ்சம் சிந்தித்துப்பார். 

இருப்பினும் இருக்கின்ற நல்ல பெயரால் மதுரை தெற்குத்தொகுதியில் நம் கண் முன்னே கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் வாழுகின்ற அனைத்து ஊர் ஸெளராஷ்ட்ரர்களுக்கும் மகுடம் வைத்தாற்போல இருப்பது சட்டமன்றத்திற்கு இந்த தெற்குத்தொகுதியும் நாடாளுமன்றத்திற்கு மதுரை தொகுதியும்தான் என்பதை நாம் நன்றாக நினைவில் கொண்டு செயல்படவேண்டும். 

தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.விற்கு மாற்று அ.தி.மு.க.ää அ.தி.மு.க.விற்கு மாற்று தி.மு.கää  என்ற நிலைப்பாடு தவிர வேறு மாற்றத்தை உருவாக்குவது மிகவும் கடினம். ஆனால் ஒரு கட்சி குடும்பத்திற்காக உழைக்கிறது. மற்றொருக் கட்சி நட்பு வட்டாரம் என்ற கொள்கையில் சர்வாதிகாரமாக செயல்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கும் மக்களால் நல்லதொரு மாற்று சக்தியை உருவாக்க இயலாமல் திணறிக்கொண்டிருப்பது உனக்கும் தெரிகிறது. 

இன்றைய ஆளுங்கட்சியானாலும் சரி இதுவரை ஆண்ட கட்சியானாலும் சரி அனைவருக்கும் நமது சமூகத்தின் தன்மை, இறையாண்மை, நம் சமூகப்பிரமுகர்கள் அரசியலில் செய்துள்ள சாதனைகள், அரசிற்கு செய்துள்ள உபகாரங்கள், வழிகாட்டுதல்கள் என்று செய்துள்ள ஏராளமான சேவைகள் பற்றி நன்றாகத் தெரியும். இருந்தாலும் இன்றைய சூழ்நிலை அரசியல் வியாபார ஸ்தலமாகி விட்டதால் அது யாரை ஈர்க்கிறதோ அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் மட்டுமே ஆக்கிரமித்துக் கொள்ளும் மேடையாக மாறியுள்ளது என்பதை நீ நன்றாக புரிந்துகொள். 

இறுதியாக இந்தக் கடிதத்தை முடிக்கும் முன்னர் உனக்கு நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான். அரசியல் கட்சிகளுக்குள் நமது சமூகத்தை சிக்க வைப்பதா? இல்லை நமது சமூகத்திற்குள் அனைத்து கட்சிகளையும் புகுத்துவதா? இதற்கான விடையை நீ தெளிவுப் படுத்திக் கொள்.

அடுத்தக் கடிதத்தில் மேலும் உன்னைத் தெளிவுப்படுத்தும் வகையில் இன்னும் சில கருத்துக்களை கூறுகின்றேன். தேர்தலுக்குள் நீ யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை நீயே முடிவெடுக்க அது உனக்கு உதவும். நன்றி!

உனதன்பு சகோதரன்

சூரியாஞானேஸ்வர்

 

User Comments

Question : 3
+
9=