Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
gOthru charithru...16

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்
தொகுத்தளிப்பவர்
சூர்யாஞானேஸ்வர்
20. அகஸ்திய மகரிஷி
சப்த ரிஷிகளில் ஒருவரான காசியப மகரிஷியின் குமாரர்தான் அகஸ்திய மகரிஷி. இவர் ஒரு குடத்திலிருந்து வெளிவந்ததால் இவருக்கு கும்பசம்பவா என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவர் சிறு வயதுமுதலே தவவாழ்க்கையை மேற்கொண்டவர். ர்pக்வேதத்தில் முதலாவது மண்டலத்தில் 179வது சாகையில் ஆறு ரிக்குகளுக்கு இவரே மகரிஷி. இவர் வேதகாலத்தில் இருந்ததால் இதிகாச புராணங்களில் இவரைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.
அந்தக் குறிப்புக்களின் மூலமே இவரைப்பற்றிய நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வுhதாபி வில்வளன் என்ற இரு அரக்கர்களை மாய்த்ததும் விந்தியமலையின் கர்வத்தை அடக்கியதுமான வரலாற்றுக் குறிப்புகள் இதிகாச புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விதர்ப தேசத்து அரசனின் மகளாகிய லோபாமுத்திரையை இவர் மணந்துள்ளார். பார்வதி பரமேஸ்வரனின் திருமணத்தின்போது தேவர்கள் ஒன்றாக கூடியதால் பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. அதனைச் சமன் செய்ய பரமேஸ்வரன் அகஸ்தியரை தென்திசைக்கு அனுப்பினார். வழியில் சீறிப்பாய்ந்தோடிய பொன்னி ஆற்றின் கர்வத்தை அடக்க தன் கமண்டலத்தில் தேக்கி வைத்தார். நாரதரின் ஆலோசனைப்படி விநாயகப் பெருமான் காக்கை வடிவில் வந்து கமண்டலத்தை கவிழ்த்து பொன்னியை விடுவித்தார். காக்கையால் கமண்டலம் கவிழ்க்கப்பட்டதாலும் விரிந்து பாய்ந்து ஓடியதாலும் காவிரி என்ற பெயர் பொன்னிக்கு அன்றுமுதல் உண்டானது.
தென்திசைக்கு வந்த அகஸ்தியர் பொதிகைமலையில் தங்கி அசிரமம் அமைத்து தமிழை ஆய்ந்ததார். இவர் குள்ளமாக இருந்த காரணத்தால் சங்க இலக்கியங்களில் இவரை குறுமுனி என்றும் குறிப்பிட்டுள்ளனர். அஸ்திர வித்தைகளை தம் மாணக்கர்களில் சிறந்தவரான அக்னிவேசருக்கு கற்றுத் தந்தார். இவரிடமிருந்து துரோணாச்சாரியார் அஸ்திர வித்தைகளை பயின்றதாக மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழுக்கு அகத்தியம் என்ற இலக்கண நூலை அருளியவரும் இவருடைய மாணவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்த தொல்காப்பியர் எழுதிய இலக்கண நூலைப் பாராட்டி பின்னாளில் தொல்காப்பியம் சிறந்த தமிழ் இலக்கண நூலாக திகழும் என்று பாராட்டியதாக வரலாறு கூறுகிறது.
இவரது ஆசிரமத்தின் சிஷ்ய பிரசிஷ்யர்களின் வழிவந்தவர்கள் அகஸ்திய கோத்திரத்தவராவர்.
அகஸ்திய கோத்திரத்தின் ஸ்லோகம்:
ஸ்ரீஸ{ர்ய தை3வம் ஸிதபஞ்ச தாரா
மார்ஜார யோநிர் விபு3தா4 க3ணம்ச
வேணுஸ்ச வ்ருகே;ஷா விஹக3ஸ்ச ஹம்ஸோ
பராஸரா க3ஸ்திய மரீசிஜாநாம்
அகஸ்திய கோ3த்ரம்:
வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆப3ஸ்தம்ப3 ஸ{த்ரு
நட்சத்ரு : புனர்பூசம்
கோ3த்ரு : அகஸ்தியர் கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ர தே3ஸ்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : ஸ{ர்யன்
க3ணம் : தே3வ க3ணம்
வாஹநொ : மஞ்ஜிரி
பட்சி : அன்னப்பட்சி
விருட்சம் : பொ3ங்கு3 ஜா2ட்
வாந் : விடலவாந்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : அகஸ்திய தா3ர்ட்3யாச்சுத இத்3மாவஹ ஆகிய கோத்திரங்கள் 
திரியாரிஷ ப்ரவரம்.
அகஸ்திய மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:
1. பிஸா (பீஸா)
2. ஆதி3ந்
3. உண்டல்
4. தொகூகு3ளுவா
5. விட்டல்வாந்
6. பொ3ருட்டாந்
7. பொம்மலாட்டம்
8. அளகாதி
9. தாடா
10. குன்னியா
11. பொடி3
12. மொலவுந்
13. ஸ{குடுந்
14. புரோஹிதம்
இதுதவிர வேறு விடுப்பட்ட வீட்டுப்பெயர்கள் இருந்தால் தெரியப்படுத்தி இப்பணியினை முழுமையடையச் செய்ய வேண்டுகிறேன்.

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்

தொகுத்தளிப்பவர்

சூர்யாஞானேஸ்வர்

20. அகஸ்திய மகரிஷி

சப்த ரிஷிகளில் ஒருவரான காசியப மகரிஷியின் குமாரர்தான் அகஸ்திய மகரிஷி. இவர் ஒரு குடத்திலிருந்து வெளிவந்ததால் இவருக்கு கும்பசம்பவா என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவர் சிறு வயதுமுதலே தவவாழ்க்கையை மேற்கொண்டவர். ரிக்வேதத்தில் முதலாவது மண்டலத்தில் 179வது சாகையில் ஆறு ரிக்குகளுக்கு இவரே மகரிஷி. இவர் வேதகாலத்தில் இருந்ததால் இதிகாச புராணங்களில் இவரைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

அந்தக் குறிப்புக்களின் மூலமே இவரைப்பற்றிய நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வுhதாபி வில்வளன் என்ற இரு அரக்கர்களை மாய்த்ததும் விந்தியமலையின் கர்வத்தை அடக்கியதுமான வரலாற்றுக் குறிப்புகள் இதிகாச புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விதர்ப தேசத்து அரசனின் மகளாகிய லோபாமுத்திரையை இவர் மணந்துள்ளார். பார்வதி பரமேஸ்வரனின் திருமணத்தின்போது தேவர்கள் ஒன்றாக கூடியதால் பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. அதனைச் சமன் செய்ய பரமேஸ்வரன் அகஸ்தியரை தென்திசைக்கு அனுப்பினார். வழியில் சீறிப்பாய்ந்தோடிய பொன்னி ஆற்றின் கர்வத்தை அடக்க தன் கமண்டலத்தில் தேக்கி வைத்தார். நாரதரின் ஆலோசனைப்படி விநாயகப் பெருமான் காக்கை வடிவில் வந்து கமண்டலத்தை கவிழ்த்து பொன்னியை விடுவித்தார். காக்கையால் கமண்டலம் கவிழ்க்கப்பட்டதாலும் விரிந்து பாய்ந்து ஓடியதாலும் காவிரி என்ற பெயர் பொன்னிக்கு அன்றுமுதல் உண்டானது.

தென்திசைக்கு வந்த அகஸ்தியர் பொதிகைமலையில் தங்கி அசிரமம் அமைத்து தமிழை ஆய்ந்ததார். இவர் குள்ளமாக இருந்த காரணத்தால் சங்க இலக்கியங்களில் இவரை குறுமுனி என்றும் குறிப்பிட்டுள்ளனர். அஸ்திர வித்தைகளை தம் மாணக்கர்களில் சிறந்தவரான அக்னிவேசருக்கு கற்றுத் தந்தார். இவரிடமிருந்து துரோணாச்சாரியார் அஸ்திர வித்தைகளை பயின்றதாக மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழுக்கு அகத்தியம் என்ற இலக்கண நூலை அருளியவரும் இவருடைய மாணவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்த தொல்காப்பியர் எழுதிய இலக்கண நூலைப் பாராட்டி பின்னாளில் தொல்காப்பியம் சிறந்த தமிழ் இலக்கண நூலாக திகழும் என்று பாராட்டியதாக வரலாறு கூறுகிறது.

இவரது ஆசிரமத்தின் சிஷ்ய பிரசிஷ்யர்களின் வழிவந்தவர்கள் அகஸ்திய கோத்திரத்தவராவர்.

அகஸ்திய கோத்திரத்தின் ஸ்லோகம்:

ஸ்ரீஸ{ர்ய தை3வம் ஸிதபஞ்ச தாரா

மார்ஜார யோநிர் விபு3தா4 க3ணம்ச

வேணுஸ்ச வ்ருகே;ஷா விஹக3ஸ்ச ஹம்ஸோ

பராஸரா க3ஸ்திய மரீசிஜாநாம்

அகஸ்திய கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆப3ஸ்தம்ப3 ஸ{த்ரு

நட்சத்ரு : புனர்பூசம்

கோ3த்ரு : அகஸ்தியர் கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ர தே3ஸ்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : ஸ{ர்யன்

க3ணம் : தே3வ க3ணம்

வாஹநொ : மஞ்ஜிரி

பட்சி : அன்னப்பட்சி

விருட்சம் : பொ3ங்கு3 ஜா2ட்

வாந் : விடலவாந்

ஆரிஷம் : திரியாரிஷம்

பிரவரம் : அகஸ்திய தா3ர்ட்3யாச்சுத இத்3மாவஹ ஆகிய கோத்திரங்கள் 

திரியாரிஷ ப்ரவரம்.

அகஸ்திய மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:

1. பிஸா (பீஸா)

2. ஆதி3ந்

3. உண்டல்

4. தொகூகு3ளுவா

5. விட்டல்வாந்

6. பொ3ருட்டாந்

7. பொம்மலாட்டம்

8. அளகாதி

9. தாடா

10. குன்னியா

11. பொடி3

12. மொலவுந்

13. ஸ{குடுந்

14. புரோஹிதம்

இதுதவிர வேறு விடுப்பட்ட வீட்டுப்பெயர்கள் இருந்தால் தெரியப்படுத்தி இப்பணியினை முழுமையடையச் செய்ய வேண்டுகிறேன்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 5 =