Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Muthumai varam

முதுமை வரம்

சுவர்ணலதா குப்பா

மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்தில் வினோத்தின் மன ஓட்டங்கள் பலவாறாக இருந்தது. முதன் முதலில் அமெரிக்கா போகும் பொழுது,  மதுரை விமான நிலையத்தில் சுற்றம் சூழ இவர்களை விட்டுப் பிரிந்துப் போகிறோமே என்ற மனவருத்தம் இருந்தாலும், அனைவரிடமும் அப்பா, அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள், என்ன விஷயம் என்றாலும் என்னை உடனே தொடர்பு கொள்ளுங்கள் என்று கண்ணீருடன் விடைப்பெற்ற அந்த நாள் இன்றும் மனக்கண்ணில் நிழலாடியது!

 

நாட்கள் மாதங்களாகி, பின்பு வருடங்களாகி, வேலை, மனைவி, குழந்தைகள் என்றான பிறகு அம்மா, அப்பா மேல் இருந்த பாசம் குறையாமல் இருந்தாலும் அவர்களின் நினைவு தன்னை விட்டு விலகிப் போவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

என்னப்பா, எப்ப ஊருக்கு வரப் போற, பேரக்குழந்தைகளையும் உங்களையும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. எங்களுக்கும் வயதாகி விட்டது. உங்கள் ஊருக்கும் அடிக்கடி வந்து போறது முடியற விஷயமில்ல என்று அம்மா கேட்கும் பொழுதெல்லாம் மௌனம் தான் பல நேரங்களில் பதிலானது!

 

இப்பொழுது ஏன் இவர்களை அருகில் வைத்துக் கொள்ளாமல் விட்டோம், தப்புச் செய்து விட்டோமா என்று அனலில் விழுந்த புழு போல் மனம் தவிக்கிறது.

 

எனக்கு ஒன்று என்றால் பதறிப் போய்த் தூங்காமல் கண் விழித்துக் காத்திருந்த அவர்கள் எங்கே? ஆஸ்பத்திரிச் செலவுக்கு, நர்சுக்கு என்று பணம் அனுப்பி விட்டு என் கடமை முடிந்தது என்று சுயநலமாக இருந்த நான் எங்கே? அப்படியா என் அப்பாவும், அம்மாவும் என்னை வளர்த்தார்கள்? நான் ஏன் மாறிப் போனேன் என்று வினோத்தின் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் குலுங்கி அழுவதைப் பார்த்த சக பயணியும் திகைத்துப் போயிருந்தார்!

 

ஒரு வழியாக விமான நிலையம் வந்து கணேஷைப் பார்த்து அழுதவுடன், கணேஷும் அழுது கொண்டே, என்னடா இது சின்னக்கொழந்தையாட்டம், வீட்டுக்குப் போய் பேசிக் கொள்ளலாம் என்று வண்டியில் ஏற, அங்கிருந்த கூட்டம் என்ன ஏது என்று புரியாமல் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.

 

வீடு சேரும் வரை மெளனமாக இருந்த வினோத், அம்மாவைப் பார்த்ததும் கதறியழுது என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, சுயநலமாக இருந்து விட்டேன், அப்பாவின் சாவிற்குக் கூட வரமுடியாமல் போய் விட்டது என்று அழுத அழுகை, சுற்றி நின்றவர்கள் அம்மாவையும், மகனையும் எப்படி சமாதனப்படுத்துவது என்று புரியாமல் தவித்தார்கள்.

 

எவ்வளவு அன்பான குடும்பம்! தொலைவில் மகனைத் தொலைத்தவர்கள் படும் பாடு. இது போன்ற சமயங்களில் அதன் விகார முகத்தை காட்டும் போது அதன் வலி மரண வலியை விட அதிகமாகி விடுகிறது.

 

அதற்குப் பிறகு வினோத் செய்ய வேண்டிய கடமைகளை 'மளமள'வென்று செய்து முடித்து , அம்மா என் கூட நீ வந்து விடு. உன்னை விட்டு விட்டு என்னால் போக முடியாது என்று சொல்ல, காயத்ரியும், என் கட்டை இந்த மண்ணில் வேகட்டும், நீ ஊருக்குப் போ தம்பி, என்னை நான் பார்த்துக் கொள்கிறேன், கவலைப்படாதே என்று சொன்னாலும் தன்னை விட்டுத் தன் ஒரே மகன் போய் விடுவானோ என்ற ஏக்கமும், துக்கமும் அவளை வாட்டியது.

 

நாம் தான் தவறு செய்து விட்டோமோ, ஆரம்பத்தில் மகன் அமெரிக்காவில் இருக்கிறான் என்று சொல்வது பெருமையாக இருந்தது. இன்றோ, மகன் அருகில் இல்லையே என்ற வெறுமை தானே இருக்கிறது என்று ஆழ்ந்த சிந்தனையுடன் மகனைப் பார்க்க…. …..

 

அவன் முகத்தில் தெளிவான ஒரு முடிவு பிறந்திருந்தது!

User Comments
santhilal
muthumai varam- swarnalatha -win muthal kathai.,aanaalum nanraaka ullathu..vaazhththukkal.paaraattukkal.
Latha Kuppa
Thank you very much, Santhilal dha. I wrote 'Kanave Kalaiyaadhe' before :)
Information
Name
Comments
 
Verification Code
4 + 9 =