ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

gOthru charithru...4

கோ3த்ரு சரித்ரு - கே4ருநாவுந் 

தொகுத்தளிப்பவர்:

சூர்யா ஞானேஸ்வர்

4. மாண்டவ்ய மகரிஷி

இதிகாசக் காலங்களில் வாழ்ந்த மகரிஷிகளின் வழிவந்தவர்களே இன்றைய ஸெளராஷ்ட்ரர்கள் என்றால் அது மிகையாகாது. ஒருகாலத்தில் சாளுவ நாடு செல்வம் கொழிக்கும் நாடாக இருந்தது. அது சமயம் ஒருநாள் சில திருடர்கள் சாளுவ நாட்டில் செல்வங்களைக் கொள்ளை அடித்தனர். சாளுவ அரசனும் அவர்களைப் பிடித்துவர காவலர்களை ஏவினான். காவலர்களும் அந்த திருடர்களை பின்தொடர்ந்து பிடிக்க முற்பட்டனர். அவர்களால் இயலவில்லை. காட்டில் பதுங்கிய திருடர்கள் திருடிய செல்வங்களை மாண்டவ்ய மகரிஷியின் ஆசிரமத்திற்கருகே பதுக்கி வைத்தனர். திருடர்களை தேடி வந்த அரண்மனை காவலர்கள் மாண்டவ்ய மகரிஷியின் ஆசிரம வளாகத்தில் திருடுபோன செல்வங்கள் அனைத்தும் கண்டு வியப்புற்று அரசனிடம் சென்று தெரிவித்தனர். உடனே அரசனும் மாண்டவ்ய மகரிஷியை பிடித்துவந்து கழுவில் ஏற்றுமாறு உத்திரவிட்டான். காவலர்களும் அரசனின் கட்டளைப்படி ரிஷியை பிடித்து கழு மரத்தில் ஏற்றினர். மகரிஷி மாண்டவ்யர் அப்பொழுது தவநிலையில் இருந்தார். அதனால் அவருடைய தேகம் சிறிதளவே கழு மரத்தில் இறங்கி நின்றது. 

அப்போது தவம் கலைந்த ரிஷி தனது ஞானக் கண்ணால் சாளுவ மன்னனின் ஆணையால் நடந்த நிகழ்வினை அறிந்து கொண்டார். மிகவும் வேதனையுற்றார். தவசீலரான மகரிஷி தனக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு காரணம் அறிய முற்பட்டார். உடனே எமதர்மனை வரவழைத்து வினவினார். எமதர்மனும் அவருக்கு விளக்கமளித்தார். “நீங்கள் சிறுபிராயத்தில் தும்பியின வண்டினைப் பிடித்து அதன் வால் நுனியில் நூலைக் கட்டி விளையாடினீர்கள். அதனால் இந்த வேதனைக்கு ஆளாகியுள்ளீர்கள்.” என்று எமதர்மன் கூறினார். “அறியாத பாலபருவத்தில் செய்யும் செயல்களால் உண்டாகும் பாவ-புண்ணியங்கள் அவனை ஒட்டாது. அதாவது எட்டு வயது வரை பாலகர்கள் செய்யும் செயல்பாட்டிற்கு பாவ புண்ணிய தோஷங்கள் கிடையாது. எட்டு வயதிற்குமேல் உபநயன சமஸ்காரம் செய்விக்கும் தகுதி ஏற்படுவதால் எட்டு வயதிற்குட்பட்ட பாலகர்கள் செய்யும் குறும்புகள் சேஷ்டைகள் தண்டனைக்குரியதல்ல. இந்த நியதியை மறந்து என்னை தண்டித்த நீ பூவுலகில் மானிடனாய் பிறந்து தர்மத்தை நிலைநாட்ட முடியாமல் அல்லற்பட்டு அவதிப்படுவாய்” என சபித்தார். 

அந்த சாபத்தின் பலனாக எமதர்மன் பூவுலகில் மானிடனாய் பிறந்தான். மகாபாரதத்தில் வரும் விதுரனே எமதர்மனின் அவதாரம். திருதராஷ்டிரனுக்கும் பாண்டு மகாராஜாவுக்கும் சகோதரனாக பிறந்த விதுரன் அத்தினாபுரத்தின் மூத்த அமைச்சராக இருந்தார். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சிறிய தந்தை. இவர் சிறந்த பக்த சிகாமணி. ஸ்ரீகிருஷ்ணன் நாராயணனின் அவதாரமே என அறிந்த உத்தமர்களில் இவரும் ஒருவர். அத்தினாபுரத்திற்கு தூது வந்த கிருஷ்ணன் விதுரனின் வீட்டில் தங்கியிருந்து விருந்துண்டார். விதுர நீதி என்ற அற்புதமான தர்ம சாஸ்திர நூலை எழுதியவர்.  பெரும்பாலும் ரிஷிகளின் சாபங்கள் உலக நன்மைக்கே என்றே கொள்ளலாம். மாண்டவ்ய மகரிஷியும் மௌத்கல்ய மகரிஷியும் சமகாலத்தவர்கள். இந்த ரிஷியின் ஆசிரமத்தின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மாண்டவ்ய கோத்திரத்தினராவர்.

மதங்க கோத்திரத்தின் சுலோகமும் முன்னர் சொல்லிய மௌத்3க3ல்ய மஹரிஷியின் கோத்திரத்தின் சுலோகமும் மைத்ரேய கோத்திரத்தின் சுலோகமும் ஒன்றாகவே வருகிறது. ஆனால் மாண்டவ்ய மகரிஷியின் கோத்திரத்தின் சுலோகம் இதிலிருந்து மாறுபடுகிறது.  மேலும் இந்த கோத்திரம் பஞ்சாரிஷ ப்ரவரத்தைச் சேர்ந்தது.

 

புமாந் த்ரிதாரா யமதே3வதாக்3ய:

க3ணம் நரோப4த்3ர க3ஜஸ்ச யோநி:

பக்ஷீச காகோமலகஸ்ச வ்ருக்ஷா  

மாண்ட3வ்ய வாத்ஸாயந கௌஸிகாநாம்


மாண்ட3வ்ய கோ3த்ரம்:


வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : ப4ரணி

கோ3த்ரு : மாண்ட3வ்ய கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : எமத4ர்மராஜா

க3ணம் : மனுஷ்ய க3ணம்

வாஹநொ : கறுத்த யானை

பட்சி : காகம்

விருட்சம் : அம்பு3ளா ஜா2ட்

வாந் : ஜம்பு3வாந்

ஆரிஷம் : பஞ்சாரிஷம்

பிரவரம் : பா4ர்க3வ, ஸ்யவந, அப்நுவாந, ஒளர்வ, ஜமத3க்3நி 

ஆகிய கோத்திரங்கள் பஞ்சாரிஷ ப்ரவரம்.


மாண்டவ்ய மஹரிஷி கோ3த்ருக் செரெ கே4ருநாவுந்:

1. ஜம்பு3வாந்

2. ஜெம்பு3ந்

3. சொக்காந்

4. பேணுந்

5. ஸோமலிங்கா3

6. புரோஹிதம்

7. த4ருமியா

இந்த கோத்ரத்தைச் சேர்ந்த வேறு வீட்டுப்பெயர் கொண்டவர்கள் இருந்தால் நமக்கு தெரிவிக்கலாம். அடுத்த இதழில் வாத்ஸாயந மஹரிஷியின் வரலாறும் வீட்டுப்பெயர்களும் இடம்பெறும்.

 

User Comments

Question : 1
+
9=