ad1
askinAk nava orsu subha nanthinin

chalni-kaLatni 01-01-16

 

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் 26 நாடுகள் கலந்து கொண்ட ஆர்ச்சரி விளையாட்டுப் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. 20 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான உலக கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று உலகஅளவில் 5வது இடத்தைப் பெற்றவர் மாஸ்டர் ஆதித்யா ரமேஷ். இவர் ஸெளராஷ்ட்ர சமூகத்தைச் சேர்ந்த தஞ்சையை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வசிக்கும் ரமேஷ்-அனந்தலெட்சுமி தம்பதியரின் மகன். விரைவில் ஆதித்யா ரமேஷ் உலக கோப்பையை வென்று இந்தியாவிற்கும் நம் ஸெளராஷ்ட்ர சமூகத்திற்கும் பெருமை சேர்க்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம். 
தகவல்: தஞ்சை சுரேந்திரன்.(பாபு)

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் 26 நாடுகள் கலந்து கொண்ட ஆர்ச்சரி விளையாட்டுப் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. 20 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான உலக கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று உலகஅளவில் 5வது இடத்தைப் பெற்றவர் மாஸ்டர் ஆதித்யா ரமேஷ். இவர் ஸெளராஷ்ட்ர சமூகத்தைச் சேர்ந்த தஞ்சையை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வசிக்கும் ரமேஷ்-அனந்தலெட்சுமி தம்பதியரின் மகன். விரைவில் ஆதித்யா ரமேஷ் உலக கோப்பையை வென்று இந்தியாவிற்கும் நம் ஸெளராஷ்ட்ர சமூகத்திற்கும் பெருமை சேர்க்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம். 

தகவல்: தஞ்சை சுரேந்திரன்.(பாபு)


சௌபாக்யா மகளிர் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் 7வது ஆண்டு விழா இன்று மதுரை வைரமணி ஹாலில் நடைப்பெற்றது. சென்னை தனலட்சுமி பொறியியல் கல்லூரியின் தலைவர் முனைவர்.ராமமூர்த்தி அவரது துணைவியார் தனலட்சுமி தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு  மையத்தின் திட்ட அலுவலர் மோகன்ராம் கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மேம்பாட்டு மையத்தின் திட்ட அலுவலர் ரூப் சந்த் ஆகியோர் வாழ்த்துக்களை வழங்கினார்கள். 

முன்னதாக இணை செயலாளர் புனிதவதி வரவேற்புரையாற்றினார். செயலாளர் ரோஜா ராணி ஆண்டறிக்கை வாசித்தார். நிறுவன தலைவர் மஹாலக்ஷ்மி மற்றும் தலைவர் ராதிகா ஆகியோர் தலைமை உரையாற்றினார்கள். கௌரவ ஆலோசகர்   மரு. விஜயலக்ஷ்மி நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தும் பொதிகை தொலைக் காட்சியினர் ஒளி பரப்பு செய்வதற்கு படமெடுத்தனர்.


 

 

பிரபல சௌராஷ்ட்ர எழுத்தாளரும் நூலாசிரியருமான தோராளி சங்கரன் 16-12-2016 பகல் 12.30 மணிக்கு சென்னையில் காலமானார். இவருடைய ஹிட்லரின் கடல் போர் சாகசங்கள் மற்றும் ஹிட்லரின் காதல் கடிதங்கள் இரண்டு புத்தகத்திற்கும் மொதி ரெத்து மாத இதழில் விமர்சனம் எழுதி வெளியிட்டோம். நன்றாக பழக கூடியவர். இவரின் குடும்பத்தோடு நீண்ட நாள் பழக்கம். இவரது ஆத்ம இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும். இவரது குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.


வருகின்ற 08-01-2017 ஞாயிறன்று பெங்களுரில் செயல்பட்டுவரும் கர்நாடக யுனைடெட் ஸெளராஷ்ட்ர ஆர்கனைசேஷன் தனது 24வது ஆண்டுவிழாவை கலாச்சார விழாவாக பெங்களுர் காந்திநகர், அம்பேத்கார் வீதியிலுள்ள ஞானஜோதி ஆடிட்டோரியத்தில் காலை 8.00 மணிமுதல் தொடங்குகிறது. இவ்விழாவில் கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் புதபாய் வாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இசைந்துள்ளார். கோடே குழுமத்தின் இயக்குநர் சீனிவாசகோடே விழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில் ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் கமலேஷ் ஜோஷிபுரா, ராஜ்கோட் நகரத்தின் முன்னாள் மேயர் திருமதி. முனைவர் பாவனா ஜோஷிபுரா மற்றும் பத்மஸ்ரீ டாக்டர். சந்திரசேகர் ஆகியோர் கௌரவிக்கப்பட உள்ளனர். விழாவிற்கு அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் தலைவர் பதி, செயலாளர் ஜெயபால் வேண்டுகிறார்கள்.


 

ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளின் 174வது ஜெயந்தி விழா இம்மாதம் 8ஆம் தேதி மதுரை ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகள் ஆன்மீக எழுச்சி இயக்கத்தினரால் காதக்கிணறில் அமைந்துள்ள பிருந்தாவன திருக்கோவிலில் நடைபெறுகிறது. இவ்விழாவில் கே.எல்.என் பாலிடெக்னிக் கல்லூரியின் கௌரவக் காரியதரிசி ராதாகிருஷ்ணன் ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி பொதுக்காரியதரிசி ராமசுப்பிரமணியன் நாயகி இயக்கத்தின் மாநில அமைப்பாளர் பிரகாஷ்குமார் மாநில தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொள்கிறார்கள். 

காலையில் நடைபெறவுள்ள கோபூஜைக்கு விநாயகமிஷன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ராஜேந்திரன், கஜ பூஜைக்கு பிவிகே பவுண்டசேன் குழுமத்தின் தலைவர் பாலா, அஷ்வ பூஜைக்கு தேனி ஸெளராஷ்ட்ரக் கல்லூரி சேர்மன் ஜவஹர்லால் ஆகியோர்கள் தலைமையில் கோலாகலமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

 

ஆன்மீக அன்பர்கள் அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்குமாறு விழாக்குழு சார்பில் வேண்டுகின்றனர். சுpறப்பான அன்னதான விருந்து உபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 

User Comments

Question : 2
+
7=