ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

gOthru charithru...1

கோ3த்ரு சரித்ரு - கே4ருநாவுந் 

தொகுத்தளிப்பவர்:

சூர்யா ஞானேஸ்வர்

ஸெளராஷ்ட்ரன் என்பதை அறிந்து கொள்ள வீட்டுப்பெயரும் அதனைச் சார்ந்த கோத்திரத்தின் பெயரும் அவசியமாகிறது. ஓவ்வொரு ஸெளராஷ்ட்ரனும் வீட்டுப்பெயர் தெரிந்து கொள்வதிலும் கோத்திரம் இன்னது என்று தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டத் தொடங்குவது திருமண காலங்களில்தான். அப்போதுதான் கோத்திரம் வீட்டுப்பெயர் போன்றவை பயனுள்ளதாகவும் நமது கலாச்சாரம் காப்பாற்றப்படுகிறது என்பதிலும் ஒரு நம்பிக்கை உருவாகிறது. இந்த கோத்திரம் என்பது என்ன? ரிஷி வழி வந்தவர்களை அடையாளப்படுத்திட கோத்திரம் துணைபுரிகிறது. ஒரே கோத்திரத்தில் பல வீட்டுப்பெயர்கள் இருப்பது சகோதரத்துவத்தைக் காட்டுவதாகும். எனவே ஸெளராஷ்ட்ரர்கள் ஒரே கோத்திரத்தில் கொள்வினை-கொடுப்புவினை நடத்த மாட்டார்கள். திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும்போது ப4வ்லாஸ் என்று சொல்கிறோமே அது என்ன என்று இன்றைய தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும்.

நாம் வடக்கேயுள்ள ஸெளராஷ்ட்ர தேசத்தின் சோமநாதபுரத்திலிருந்து புறப்பட்டு தென்பகுதிக்கு வந்து வாழத்தொடங்கியதாக சில சரித்திர உண்மைகள் சொல்லப்பட்டு பின் ஒரு மகரிஷியின் பெயரைச் சொல்லி அந்த கோத்திரத்தவர்கள் என்று கூறி தங்கள் குடும்பத்திற்குரிய தேவதை, வாகனம், கணம், பட்சி, விருட்சம், வான், ஆரிஷம், வேதம், ஸ{த்ரு போன்ற விபரங்களைக் கூறி தங்கள் வீட்டுப்பெயரையும் சொல்லி அவர்களுடைய மூன்று தலைமுறை பெரியோர்களின் பெயரைக் குறிப்பிட்டு அந்த வழியில் வந்த மணப்பெண்/மணமகன் பெயரைச் சொல்லி திருமணம் நிச்சயம் பெரியோர்கள் உறவினர்கள் முன்னிலையில் செய்யப்படுகிறது என்று இருவீட்டாரும் மனமுவந்து சொல்லி தாம்பூலம் மாற்றிக்கொள்ளும் சம்பிரதாயம் தொன்றுதொட்டு நடந்து வருகிறது.

இக்கட்டுரையில் நாம் காணவிருப்பது கோத்திரத்தின் பெயர் ஒரு மகரிஷியின் பெயராக வரும். அந்த மகரிஷி யார் என்பது பற்றியும் அவர் வழிவரும் வீட்டுப்பெயர்கள் என்னென்ன உள்ளது என்பது பற்றியும் அனைவரும் தெரிந்து கொள்வதற்கே. முதலில் நாம் காணவிருப்பது மௌத்கல்ய கோத்ரம். மௌத்கல்ய மகரிஷியைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

திருச்சி இளம்பூரணன் வெளியிட்டுள்ள மஹரிஷிகளின் ப்ரபாவம் மதுரை ஸெளராஷ்ட்ர சபை வெளியிட்ட சார்க3ள ஷாட் கோ3த்ரு கா3ண்டொ3, கே.ஆர். சேதுராமன் எழுதிய கோ3த்ரு கே4ரு நாவு அக3ராதி மற்றும் சேலம் மள்வாதுந். ஜெயபால் எழுதிய ஸெளராஷ்ட்ர கோ3த்ராயெ க2ண்டு3 ஆகிய நூல்களை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரையை எழுத முற்படுகிறேன்.

முதலில் வருபவர் மௌத்கல்ய மஹரிஷி. 

நளாயினியின் கணவரான இம்மஹரிஷி தன் மனைவியின் பதிவிரதா தருமத்தை பரிசோதிக்க எண்ணினார். தன்னை ஒரு குஷ்டரூபியாக மாற்றிக்கொண்டார். தனது இந்த கொடூர உருவத்தைப் போக்கிக்கொள்ள தீர்த்த யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று தனது மனைவி நளாயினியிடம் கூறினார். நளாயினியும் தனது கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு மூங்கில் கூடையைத் தயார் செய்தார். அந்த கூடையில் மௌத்கல்ய மஹரிஷியை அமரச்செய்தார். அதனை தன் தோள் மீது வைத்து சுமந்து சென்றார். அவ்வாறு செல்லும்போது ஒருநாள் இரவு ஒரு சோலை வழியே செல்ல நேரிட்டது. அதுசமயம் பூர்வகர்மத்தால் மாண்டவ்ய மஹரிஷி கழுமரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். நளாயினி சுமந்து வந்த கூடை தொங்கிக்கொண்டிருந்த மாண்டவ்ய மஹரிஷியின் காலில் பட்டது. உடனே வலியின் மிகுதியால் துடிக்க பொழுது விடிவதற்குள் நீ மாங்கல்யம் இழப்பாயாக என்று சபித்து விட்டார்.

நளாயினி செய்வதறியாது திகைத்தார். உடனே பொழுது விடியக்கூடாது என்று சாபமிட்டாள். இதனால் தேவர்களின் நித்ய கர்மாக்கள் அனுஷ்டானங்கள் செய்ய இயலாமல் தடைபட தேவர்கள் மாண்டவ்ய மஹரிஷி வணங்கி தீர்வு கேட்டு விண்ணப்பித்தனர். மஹரிஷியும் நளாயினியின் கற்பின் மகத்துவத்தை உணர்ந்து அவளிடம் அனுக்கிரகம் பெறுமாறு சொன்னார். அதன்பின் பொழுது விடியச் செய்தாள் நளாயினி. பின்னர் நளாயினிக்கு நல்ல உபதேசங்கள் அருளி மௌத்கல்ய மஹரிஷி பரம்பொருளை தியானிக்க மனைவியைப் பிரிந்துச் சென்றார். 

இவரது ஆசிரமத்தின் சிஷ்யைகள் மற்றும் சிஷ்யர்கள் வழிவந்தவர்கள் மௌத்கல்ய மஹரிஷி கோத்ரத்தவர் ஆவர்.

மறுபிறவியில் நளாயினி காசிராஜனின் மகளாக பிறந்து சிவபெருமானை தியானிக்க அவரும் நேரில் தோன்றி வேண்டிய வரத்தை கேட்குமாறு கூறினார். அவளும் தனக்கு தர்மசீலனாகவும் பலவானாகவும் பராக்கிரமசாலியாகவும் சௌந்தர்யம் சாஸ்திர ஞானம் ஆகிய ஐந்து குணங்களுடன் கணவன் அமையவேண்டும் என்று கேட்டாள். இந்த ஐந்து குணங்களும் கொண்ட ஒருவன் கிடைக்க மாட்டான் என்றும் தனித்தனியே இந்த குணங்களைக் கொண்ட ஐந்து கணவன்களை மறுஜன்மத்தில் அடைவாய் என்று வரமளித்து மறைந்தார். மறு ஜன்மத்தில் துருபதராஜனின் புத்திரகாமேஷ்டி யாகத்தில் யாகாக்னியில் தோன்றியவள்தான் திரௌபதி. பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியாகிறாள். 

ஸெளராஷ்ட்ரர்களுக்கும் திரௌபதிக்கும் தொடர்பு இருப்பதால் தானோ மதுரையில் இரண்டு இடங்களில் திரௌபதியம்மன் கோவில் கட்டி அந்த பதிவிரதாதேவியை வழிப்பட்டு வருகின்றனர்.

மௌத்கல்ய மஹரிஷி கோத்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3

ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு

நட்சத்ரு : அஸ்வினி

கோ3த்ரு : மௌத்கல்ய கோத்ரம்

தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்

கா3ம் : ஸோமநாதபுரி

தே3வதொ : ஹயக்ரீவர்(அஸ்விநி தே3தாந்)

க3ணம் : தே3வ க3ணம்

வாஹநொ : அஸ்வம் (கொ4டொ)

பட்சி : ராஜளி (பேரண்டம்)

விருட்சம் : முஸிண்டி3 ஜா2ட்

வாந் : பாமவாந்

ஆரிஷம் : திரியாரிஷம்


மௌத்கல்ய மஹரிஷி கோ3த்ருக் செரெ கே4ருநாவுந்:

1. பா4வாந்

2. குரிந்

3. பொ3ம்மாந்

4. பே4ண்டா3ந்

5. அரசடிந்

6. த4ந்தே3ந்

7. குருவிந்

8. விட்டோல்நு

9. பிஸாந்

10. ஸிங்கு3ந்

11. கூ3ரியாந்

12. ஹண்டீ3ந் (பா4வா)

13. ராஜுந்

14. அய்யம்பேடா ஸிங்கூ3ந்

இந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மதுரை, பரமக்குடி, எமனேஸ்வரம், திருச்சி, திருப்பதி, சேலம் போன்ற ஊர்களில் வசித்து வருகின்றனர். இது தவிர வேறு ஊர்களில் இந்த கோத்ரத்தைச் சேர்ந்த வேறு வீட்டுப்பெயர் கொண்டவர்கள் இருந்தால் நமக்கு தெரிவிக்கலாம். அடுத்த இதழில் மதங்க மஹரிஷியின் வரலாறும் வீட்டுப்பெயர்களும் இடம்பெறும்.


 

User Comments

ꢪꣃꢣ꣄ꢔꢭ꣄ꢫ ꢔꣂꢡ꣄ꢬꢸ மௌத்3க3ல்ய கோ3த்ரு ஸ்லோகம் :- மௌத்3க3ல்ய மதங்க மைத்ரேய கோ3த்ர ஸம்பூ4த ஜானாம் துரக3ஸ்ச யோனி | தாராஸ்த்ர்யோ தே3வ க3ணம் புமாம் ஸ ஸைனஸ்ச பக்ஷீ விஷம்ருஷ்டி வ்ருக்ஷ || நக்ஷத்ரு : அஸ்வினி நக்ஷத்ரு கோ3த்ரு : மௌத்3க3ல்ய கோ3த்ரு தே3வதொ : ஹயக்3ரீவ தே3வதொ க3ணம் : தே3வ க3ணம் வாஹனொ : கொ4டா3 வாஹனொ பக்ஷி : பே4ரண்ட3 பக்ஷி ஜா2டு3 : முஸிண்டி3 ஜா2டு3 வான் : பா4மவான் ஆரிஷம் : த்ரியாரிஷம் கே4ரு நாவுன் :- 1. அப்பண்டா3ண் 2. அய்யம்பேடான் 3. அரஸடி3ன் 4. காவேரின் 5. கம்ப3ருன் 6. குருவின் 7. குரின் 8. கூரியான் 9. கெ3ஜவுன் 10. கெ3டின் 11. த4ந்தே3ன் 12. நகலூன் 13. பிஸான் 14. பொல்வான் 15. பு3த்3தி3ன் 16. பு3ஸ்னான் 17. பொம்மான் 18. சுக்கான் 19. ப4வான் 20. பா4மவான் 21. பே4ண்டா3ன் 22. ராஜுன் 23. விட்டலுன் 24. ஸிங்கா3ரமுன் 25. ஸிங்கு3ன் 26. ஹண்டி3ன்

Kondaa Senthilkumar

மௌத்3க3ல்ய கோ3த்ரு கெரின் மதங்க கோ3த்ரு கெரின் மைத்ரேய கோ3த்ரு கெரின் எல்லெ தி2னு கோ3த்ரு க் ஒண்டே ஸ்லோகம் கின் ஒண்டே மாதிரி நக்ஷத்ரு வாஹனொ பக்ஷ்சி ............... இஸொ ஒண்டெ ஸ் கன் அவரியொ ஹாலி எல்லெ தி2னு கோ3த்ரு கெரின் த3தொ3 பை3ன் ஸொகன்

Kondaa Senthilkumar, Madurai

Where to find the details of "Manikkaa" in gOthru charithru? Please give the url link.

Srinivassan Pondicherry

ஐயா, நான் செளராஷ்டிரா பிராமணர். எனது பெயர் சரவணன். எங்கள் கோத்திரம் :மெளத்கல்ய கோத்திரம் எங்கள் வீட்டு பெயர் :குடுமி என்று சொல்கிறார்கள். இது சரியா தவறா. எங்கள் குல தெய்வம் இஷ்ட தெய்வம் பராம்பரிய தெய்வம் என்ன என்பதை தயவு செய்து கூறவும்

சரவணன்
Question : 4
+
5=