Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni -kaLatni 03-12-18

CIIL - SOURASHTRA LANGUAGE VOCABULARY

DEVELOPMENT WORKSHOP

ஸெளராஷ்ட்ரீ வார்த்தைகள் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை மைசூரிலிருக்கும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் லாங்க்வேஜ் ஏற்பாட்டில் 26-11-2018 முதல் 01-12-2018 முடிய ஆறு நாட்கள் மைசூர் ஊஐஐடு ல் சிறப்பாக நடைப்பெற்றது. தொடக்க நாளில் இயக்குநரும் பேராசிரியாருமான டி.ஜி. ராவ் பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக இப்பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளாரும் விரிவுரையாளரும் இளம் ஆய்வு அலுவலருமான முனைவர். எல்.ஆர்.பிரேம்குமார் இயக்குநரையும் உதவி இயக்குநரான பேராசிரியர் உமாராணி பாப்புசாமி மற்றும் பட்டறையில் பங்கு கொள்ள வந்திருந்த ஸெளராஷ்ட்ர மொழி ஆர்வலர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அவர் தனது வரவேற்புரையில் ஊஐஐடு மைனாரிட்டி மொழியினர்களின் மொழியை காப்பதில் ஆழ்ந்த கவனத்துடன் இறவாநிலையை அடையவிடாமல் தமது முழுமனதுடன் ஒத்துழைப்பினை நல்கி அவரவர் மொழிகளுக்குப் பாதுகாப்பளிக்கிறது. ஸெளராஷ்ட்ர மொழியை பொறுத்தமட்டில் பல கருத்தரங்குகள் மற்றும் இதுபோன்ற பட்டறைகள் நடத்தியுள்ளது. அதுபோல இந்த பயிற்சி பட்டறையின் நோக்கம் குறைந்தபட்சம் 6000 வார்த்தைகளை கொண்ட பயனுள்ள அகராதியை தயாரிக்கும் பணியினை முழுமை செய்வதாகும் என்று குறிப்பிட்டார். 
இயக்குநரும் பேராசிரியருமான டி.ஜி.ராவ் உரையாற்றும்போதுää இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் மொழிகள் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருப்பதை தடுத்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டார். ஆங்கில மொழியின் ஆதிக்கம் பல பெரும்பான்மை மொழிகளையும் மாநில மொழிகளையும் விட்டுவைக்கவில்லை. கல்விக் கூடங்களிலும் வீடுகளிலும் கூட தாய்மொழியை விடுத்து ஆங்கில மொழி அமர்ந்து ஆதிக்கம் செய்துவருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறுபான்மையினர் தங்களது மொழியினை காப்பதிலும் வளர்ப்பதிலும் சிந்தனையிலும் முழுமுனைப்புடன் செயல்படவேண்டும். அப்படி செயற்படாவிட்டால் அவர்களுடைய மொழியினை மரணத்திலிருந்து காப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும். 
இயக்குநர் ராவ் இப்பட்டறைக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் வருகை தந்துள்ள ஸெளராஷ்ட்ர மொழி வல்லுநர்களை பாராட்டியதுடன்ää தாய்மொழி வளர்ச்சிக்காக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பல பட்டறைகள் மூலம் எடுத்துக்கொண்ட கடும் முயற்சியால் பற்பல புதிய வார்த்தைகளும் இணைக்கப்பட உள்ளது. அத்துடன் பல வெளியீடுகள் ஸெளராஷ்ட்ர மொழியில் இருப்பதால் இந்த சமுதாயத்தினர் தாய்மொழி கற்பதால் என்ன பயன் என்ற கேள்விக்கு இடமின்றி இளைஞர்களும் பயின்றுவருவது பாராட்டுக்குரியது. தாய்மொழியை கற்கும்போது கற்பவர்கள் மனதைக் கவரும் வண்ணம் சிறுகதைää கவிதைää சிறுவர்களுக்கான படைப்புகள் போன்று பற்பல இருக்கவேண்டும். மேலும் இயக்குநர் ராவ் இப்பட்டறையில் இந்த ஒரு வாரகாலத்தில் சுமார் 6000 வார்த்தைகளை பற்பல தலைப்புகளில் வெற்றிக்கரமாக முடிக்க முழுமனதுடன் வாழ்த்தினார். ஊஐஐடு சிறுபான்மை மொழியினருக்கு தனது முழு ஒத்துழைப்பினை தொடர்ந்து வழங்கும் என்றும் குறிப்பிட்டார். 
உதவி இயக்குநரான பேராசிரியர் உமாராணி பப்புசாமி தமது உரையின்போதுää இந்த பட்டறையில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களை பாராட்டியதுடன் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு புதிய வார்த்தைகளை இணைக்க வேண்டும் என்று கூறிய மொழியியல் வல்லுநரான அவர் முன்னர் வெளியாகியுள்ள ஸெளராஷ்ட்ர மொழி அகராதிகளை பார்த்து மிகவும் மகிழ்ந்தார். இந்த பட்டறையின் மூலம் பிறர் உயர்வாக பாராட்டும் வண்ணம் அதிகமான புதிய வார்த்தைகளை இந்த வல்லுனர்கள் இணைப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மதிய உணவிற்குப்பின்னர் ஒருவருக்கு 600 வார்த்தைகள் என்று பத்துபேருக்கு 6000 வார்த்தைகள் கொடுக்கப்பட்டது. தினசரி பிற்பகல் 4.00 மணிவரை வார்த்தைகள் தேடல். பின்னர் தேடிய வார்த்தைகள் குறித்து விவாதம் செய்து உறுதி செய்தல் என்று வகுக்கப்பட்ட நியதிகள் படி பணிகள் தொடரப்பட்டன. பணி நிறைவின் போது மற்ற செய்திகள் வெளியிடப்படும். 

ஸெளராஷ்ட்ரீ வார்த்தைகள் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை மைசூரிலிருக்கும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் லாங்க்வேஜ் ஏற்பாட்டில் 26-11-2018 முதல் 01-12-2018 முடிய ஆறு நாட்கள் மைசூர் CIIL ல் சிறப்பாக நடைப்பெற்றது. தொடக்க நாளில் இயக்குநரும் பேராசிரியாருமான டி.ஜி. ராவ் பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக இப்பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளாரும் விரிவுரையாளரும் இளம் ஆய்வு அலுவலருமான முனைவர். எல்.ஆர்.பிரேம்குமார் இயக்குநரையும் உதவி இயக்குநரான பேராசிரியர் உமாராணி பாப்புசாமி மற்றும் பட்டறையில் பங்கு கொள்ள வந்திருந்த ஸெளராஷ்ட்ர மொழி ஆர்வலர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அவர் தனது வரவேற்புரையில் CIIL மைனாரிட்டி மொழியினர்களின் மொழியை காப்பதில் ஆழ்ந்த கவனத்துடன் சிதைந்து விடாமல் தமது முழுமனதுடன் ஒத்துழைப்பினை நல்கி அவரவர் மொழிகளுக்குப் பாதுகாப்பளிக்கிறது. ஸெளராஷ்ட்ர மொழியை பொறுத்தமட்டில் பல கருத்தரங்குகள் மற்றும் இதுபோன்ற பட்டறைகள் நடத்தியுள்ளது. அதுபோல இந்த பயிற்சி பட்டறையின் நோக்கம் குறைந்தபட்சம் 6000 வார்த்தைகளை கொண்ட பயனுள்ள அகராதியை தயாரிக்கும் பணியினை முழுமை செய்வதாகும் என்று குறிப்பிட்டார். 

 

இயக்குநரும் பேராசிரியருமான டி.ஜி.ராவ் உரையாற்றும்போது, இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் மொழிகள் மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருப்பதை தடுத்து பாதுகாக்க வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டார். ஆங்கில மொழியின் ஆதிக்கம் பல பெரும்பான்மை மொழிகளையும் மாநில மொழிகளையும் விட்டுவைக்கவில்லை. கல்விக் கூடங்களிலும் வீடுகளிலும் கூட தாய்மொழியை விடுத்து ஆங்கில மொழி அமர்ந்து ஆதிக்கம் செய்துவருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறுபான்மையினர் தங்களது மொழியினை காப்பதிலும் வளர்ப்பதிலும் சிந்தனையிலும் முழுமுனைப்புடன் செயல்படவேண்டும். அப்படி செயற்படாவிட்டால் அவர்களுடைய மொழியினை சிதைந்து விடாமல் காப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகிவிடும். 

இயக்குநர் ராவ் இப்பட்டறைக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் வருகை தந்துள்ள ஸெளராஷ்ட்ர மொழி வல்லுநர்களை பாராட்டியதுடன், தாய்மொழி வளர்ச்சிக்காக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பல பட்டறைகள் மூலம் எடுத்துக்கொண்ட கடும் முயற்சியால் பற்பல புதிய வார்த்தைகளும் இணைக்கப்பட உள்ளது. அத்துடன் பல வெளியீடுகள் ஸெளராஷ்ட்ர மொழியில் இருப்பதால் இந்த சமுதாயத்தினர் தாய்மொழி கற்பதால் என்ன பயன் என்ற கேள்விக்கு இடமின்றி இளைஞர்களும் பயின்றுவருவது பாராட்டுக்குரியது. தாய்மொழியை கற்கும்போது கற்பவர்கள் மனதைக் கவரும் வண்ணம் சிறுகதை, கவிதை, சிறுவர்களுக்கான படைப்புகள் போன்று பற்பல இருக்கவேண்டும். மேலும் இயக்குநர் ராவ் இப்பட்டறையில் இந்த ஒரு வாரகாலத்தில் சுமார் 6000 வார்த்தைகளை பற்பல தலைப்புகளில் வெற்றிக்கரமாக முடிக்க முழுமனதுடன் வாழ்த்தினார். CIIL சிறுபான்மை மொழியினருக்கு தனது முழு ஒத்துழைப்பினை தொடர்ந்து வழங்கும் என்றும் குறிப்பிட்டார். 

 

உதவி இயக்குநரான பேராசிரியர் உமாராணி பப்புசாமி தமது உரையின்போது, இந்த பட்டறையில் கலந்து கொள்ள வந்திருந்தவர்களை பாராட்டியதுடன் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு புதிய வார்த்தைகளை இணைக்க வேண்டும் என்று கூறினார். மொழியியல் வல்லுநரான அவர் முன்னர் வெளியாகியுள்ள ஸெளராஷ்ட்ர மொழி அகராதிகளை பார்த்து மிகவும் மகிழ்ந்தார். இந்த பட்டறையின் மூலம் பிறர் உயர்வாக பாராட்டும் வண்ணம் அதிகமான புதிய வார்த்தைகளை இந்த வல்லுனர்கள் இணைப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மதிய உணவிற்குப்பின்னர் ஒருவருக்கு 600 வார்த்தைகள் என்று பத்துபேருக்கு 6000 வார்த்தைகள் கொடுக்கப்பட்டது. தினசரி பிற்பகல் 4.00 மணிவரை வார்த்தைகள் தேடல். பின்னர் தேடிய வார்த்தைகள் குறித்து விவாதம் செய்து உறுதி செய்தல் என்று வகுக்கப்பட்ட நியதிகள் படி பணிகள் தொடரப்பட்டன. பணி நிறைவின் போது மற்ற செய்திகள் வெளியிடப்படும். 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 9 =