Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Moolam Aayilyam

 

ஸெளராஷ்ட்ரர்களிடம் மட்டுமின்றி அனைத்து சமூகத்தினருக்கும் தம் மக்கள் திருமண காலத்தில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது ஒரு வழக்கமாக உள்ளது. இது எந்த அளவிற்கு ஆரோக்கியமான பழக்கமாக வளர்ந்துள்ளது என்று கவனிப்போமேயானால் விஞ்ஞான ரீதியில் ஜாதகங்கள் கணிக்கப்பட்டாலும் அதிலுள்ள சில பலன்கள் மனிதனின் வாழ்க்கையில் அன்றாடம் காணப்படும் - ஒருவரையொருவர் மிஞ்சிவிடக் கூடாது என்பதில் துளிர்விடும் ஒருவித அகங்காரம் (நபழ) தான் ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை குறைந்து மனவருத்தம் மேலோங்க காரணமாக உள்ளது. எனவேதான் இந்த கட்டுரையை எழுத முற்பட்டேன்.
பொதுவாக மூலம்ää ஆயில்யம்ää கேட்டைää விசாகம் இந்த நட்சத்திரங்கள் முறையே மாமனார்ää மாமியார்ää மூத்த சகோதரன்ää இளைய சகோதரன் ஆகியோர்களுக்கு ஆகாது என்று ஒரு வழக்கம் உள்ளது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் மூல நூல்கள் எதிலும் இதற்கான குறிப்போää விதிமுறை போன்ற ஆதாரங்களோ காணப்படவில்லை என்றுதான் வல்லுனர்கள் கூறுகின்றனர். பின் எப்படி இந்த நட்சத்திரங்கள் பெண்களுக்கு தோஷம் என வந்தது என்பதை ஆராய்ந்துப் பார்த்தோமானால் நடைமுறையில் ஒரு வழக்கமாக்கி கொண்டுள்ளதாகதான் தெரிகிறது. இன்றைய நாளில் ஆண்களுக்கு இந்த நட்சத்திரம் அமைந்தாலும் நிராகரிக்கும் மனமாற்றத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம். 
துக்ளக் இதழில் நம் சமூகத்தின் பிரபல ஜோதிடர் திரு. எஸ்.ஏ. வரதன் தமது 98வது வயதில் 10-5-2006ல் பொதுநலன் கருதி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மூல நட்சத்திரம் என்று பெண்ணை நிராகரிப்பவர்கள் நல்ல மணமகள் அடையும் வாய்ப்பினை இழக்கிறார்கள் இது போன்றே கேட்டைää ஆயில்யம் போன்ற நட்சத்திரங்களுக்கும் தோஷம் கிடையாது என்றும் அவரது அனுபவத்தில் சுமார் 100 மூல நட்சத்திர பெண்களை மனமார பிள்ளை வீட்டார்கள் ஏற்று அனைவரும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அந்த விளம்பரம் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும் எனது ஆசான் திரு. பாலகுமார் அவர்களும் மூலம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்து பெண்களின் ஜாதகங்களை ஆராய்ந்து திருமணத்திற்கு பின்னரும் அவர்கள் மாமனார்ää மாமியார் நல்ல ஆயுளுடன் உள்ளனர் என்பதை தனது Ph.னு ஆய்வில் சமர்ப்பித்துள்ளார்.
மூலம்ää ஆயில்யம்ää கேட்டைää விசாகம் நட்சத்திரங்கள் ஆகாது என்று கூறத் தொடங்கி நாளடைவில் அதுவே கூடாது என்று நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். நாளடைவில் இதுவே உயிருக்கும் ஆபத்து என்று அபத்தமாக சொல்லும் அளவிற்கு மூடநம்பிக்கை வளர்ந்து விட்டது.
மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண் எப்படி இருப்பாள். குணத்தில் மாமனாரை மிஞ்சும் அளவிற்கு குடும்ப நிர்வாகத்தில் சிறந்து விளங்குவாள். மாமனார் எடுக்கும் முடிவுக்கு மாற்றாக நல்ல முடிவை மூல நட்சத்திரப் பெண் எடுக்கும்போது அங்கு நான் என்னும் அகங்காரம் அதாவது (நபழ) தலைதூக்குகிறது. அதன் விளைவு காலப்போக்கில் மாமனாருக்கு ஆகாது என்று கூறியிருக்கலாம் என்பது எனது கருத்து.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் எப்படி இருப்பாள். குணத்தில் மாமியரை மிஞ்சும் அளவிற்கு பாசத்துடன் குடும்பத்தை நடத்தி செல்வாள். இந்த இடத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் நபழ ஏற்பட்டு நீயா நானா என்றளவிற்கு பிரச்னைகள் வளர்ந்து விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் குடும்பமே இரண்டாகும் சூழ்நிலை உருவாகி இருக்கலாம். இதனால் ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்று கூறிவிட்டனர் போலும்! 
ஆகää மூலம்ää ஆயில்யம் நட்சத்திர பெண்ணை மறுப்பதன் மூலம் நல்ல நிர்வாகத் திறமைமிக்க பாசம் காட்டும் பெண்களை மருமகளாக வாய்ப்பினை இழக்கிறார்கள்.
உங்கள் சிந்தனைக்கு ஒரு கேள்வி. ஒரு வீட்டில் ஒரு ஆணோ பெண்ணோ இறக்கும் தருவாயில் இருக்கும்போது கர்மயோகம் வந்துள்ளதா என்பதை கணிக்க மகனுடைய ஜாதகம்தான் காட்டப்படுகிறதே தவிர மருமகனின் ஜாதகமோ மருமகளின் ஜாதகமோ காட்டி ஜோதிடம் கேட்பதில்லை. இது யாவரும் அறிந்த உண்மை. 
எனவே-
மூலம்ää ஆயில்யம் என்றால் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தேவையற்ற மனக் குழப்பத்தை விட்டுவிட்டு இதுவும் நல்ல வரனே என்று ஏற்று வாழ்வில் நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி வளமோடு வாழ்வோமாக! 

மூலம் ஆயில்யம் நல்லதொரு ஜாதகமே!

 

உயமன்யு. ஜே.கே.விஜிகுமார்

 

ஸெளராஷ்ட்ரர்களிடம் மட்டுமின்றி அனைத்து சமூகத்தினருக்கும் தம் மக்கள் திருமண காலத்தில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது ஒரு வழக்கமாக உள்ளது. இது எந்த அளவிற்கு ஆரோக்கியமான பழக்கமாக வளர்ந்துள்ளது என்று கவனிப்போமேயானால் விஞ்ஞான ரீதியில் ஜாதகங்கள் கணிக்கப்பட்டாலும் அதிலுள்ள சில பலன்கள் மனிதனின் வாழ்க்கையில் அன்றாடம் காணப்படும் - ஒருவரையொருவர் மிஞ்சிவிடக் கூடாது என்பதில் துளிர்விடும் ஒருவித அகங்காரம் (Ego) தான் ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை குறைந்து மனவருத்தம் மேலோங்க காரணமாக உள்ளது. எனவேதான் இந்த கட்டுரையை எழுத முற்பட்டேன்.


பொதுவாக மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் இந்த நட்சத்திரங்கள் முறையே மாமனார்,  மாமியார், மூத்த சகோதரன், இளைய சகோதரன் ஆகியோர்களுக்கு ஆகாது என்று ஒரு வழக்கம் உள்ளது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் மூல நூல்கள் எதிலும் இதற்கான குறிப்போ, விதிமுறை போன்ற ஆதாரங்களோ காணப்படவில்லை என்றுதான் வல்லுனர்கள் கூறுகின்றனர். பின் எப்படி இந்த நட்சத்திரங்கள் பெண்களுக்கு தோஷம் என வந்தது என்பதை ஆராய்ந்துப் பார்த்தோமானால் நடைமுறையில் ஒரு வழக்கமாக்கி கொண்டுள்ளதாகதான் தெரிகிறது. இன்றைய நாளில் ஆண்களுக்கு இந்த நட்சத்திரம் அமைந்தாலும் நிராகரிக்கும் மனமாற்றத்திற்கு நாம் ஆளாகியுள்ளோம். 


துக்ளக் இதழில் நம் சமூகத்தின் பிரபல ஜோதிடர் திரு. எஸ்.ஏ. வரதன் தமது 98வது வயதில் 10-5-2006ல் பொதுநலன் கருதி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மூல நட்சத்திரம் என்று பெண்ணை நிராகரிப்பவர்கள் நல்ல மணமகள் அடையும் வாய்ப்பினை இழக்கிறார்கள் இது போன்றே கேட்டை, ஆயில்யம் போன்ற நட்சத்திரங்களுக்கும் தோஷம் கிடையாது என்றும் அவரது அனுபவத்தில் சுமார் 100 மூல நட்சத்திர பெண்களை மனமார பிள்ளை வீட்டார்கள் ஏற்று அனைவரும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அந்த விளம்பரம் மூலம் தெரிவித்துள்ளார்.


மேலும் எனது ஆசான் திரு. பாலகுமார் அவர்களும் மூலம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்து பெண்களின் ஜாதகங்களை ஆராய்ந்து திருமணத்திற்கு பின்னரும் அவர்கள் மாமனார், மாமியார் நல்ல ஆயுளுடன் உள்ளனர் என்பதை தனது Ph.D. ஆய்வில் சமர்ப்பித்துள்ளார்.


மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் நட்சத்திரங்கள் ஆகாது என்று கூறத் தொடங்கி நாளடைவில் அதுவே கூடாது என்று நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். நாளடைவில் இதுவே உயிருக்கும் ஆபத்து என்று அபத்தமாக சொல்லும் அளவிற்கு மூடநம்பிக்கை வளர்ந்து விட்டது.


மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண் எப்படி இருப்பாள்?. குணத்தில் மாமனாரை மிஞ்சும் அளவிற்கு குடும்ப நிர்வாகத்தில் சிறந்து விளங்குவாள். மாமனார் எடுக்கும் முடிவுக்கு மாற்றாக நல்ல முடிவை மூல நட்சத்திரப் பெண் எடுக்கும்போது அங்கு நான் என்னும் அகங்காரம் அதாவது (Ego) தலைதூக்குகிறது. அதன் விளைவு காலப்போக்கில் மாமனாருக்கு ஆகாது என்று கூறியிருக்கலாம் என்பது எனது கருத்து.


ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் எப்படி இருப்பாள்?. குணத்தில் மாமியரை மிஞ்சும் அளவிற்கு பாசத்துடன் குடும்பத்தை நடத்தி செல்வாள். இந்த இடத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் Ego ஏற்பட்டு நீயா நானா என்றளவிற்கு பிரச்னைகள் வளர்ந்து விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் குடும்பமே இரண்டாகும் சூழ்நிலை உருவாகி இருக்கலாம். இதனால் ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்று கூறிவிட்டனர் போலும்! 


ஆக, மூலம், ஆயில்யம் நட்சத்திர பெண்ணை மறுப்பதன் மூலம் நல்ல நிர்வாகத் திறமைமிக்க பாசம் காட்டும் பெண்களை மருமகளாக  அடையும்  வாய்ப்பினை இழக்கிறார்கள்.


உங்கள் சிந்தனைக்கு ஒரு கேள்வி. ஒரு வீட்டில் ஒரு தாயோ தந்தையோ இறக்கும் தருவாயில் இருக்கும்போது கர்மயோகம் வந்துள்ளதா என்பதை கணிக்க மகனுடைய ஜாதகம்தான் காட்டப்படுகிறதே தவிர மருமகனின் ஜாதகமோ மருமகளின் ஜாதகமோ காட்டி ஜோதிடம் கேட்பதில்லை. இது யாவரும் அறிந்த உண்மை. 


எனவே-


மூலம், ஆயில்யம் என்றால் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தேவையற்ற மனக் குழப்பத்தை விட்டுவிட்டு இதுவும் நல்ல வரனே என்று ஏற்று வாழ்வில் நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி வளமோடு வாழ்வோமாக! 

 

User Comments
santhilal
our people should ignore the supersitions of muulam,oilyam,kaettai etc.If I say they react .,now Vijayakumar astrologer has said.,we will see,how much r responding.?
Rangachari Vaithiam, Madurai
Moolam is supposed to bad for father in law .In astrology it is stated birth and death are decided by God even beforee birth and is written on fore head.if longevity of father is good according to his horoscope why worry about moolam for the daughter in law. So also there are 3 star visakam ,ailyam and keetai. .There is no such rule in classics but people have introduced in the middle without any basi.
Information
Name
Comments
 
Verification Code
3 + 8 =