Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
maatri....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.4 1st December  2016 Issue: 7


 

மாற்றிக் காட்டுவோம்!

இன்றைய தினம் மனித சமுதாயத்தில் மொழி என்று எடுத்துக் கொண்டால் ஆங்கிலம்தான் நம்மை ஆட்கொண்டிருக்கிறது. நம் தாய்மொழி என்று இருந்தாலும் ஆங்கில ஆதிக்கம் இன்னும் நம்மைவிட்டு அகலவில்லை. தொழிநுட்ப கல்வி முதல் விஞ்ஞான கல்வி வரை ஆங்கிலம் தான் ஆட்கொண்டுள்ளது. இதனால் தாய் மொழி பேசுவோர் தங்கள் மொழியுடன் வட்டார மொழியையும் இந்த ஆங்கில மொழியையும் கலந்து பேசும் தன்மையில் மிக சரளமாக வளர்ச்சியடைந்துள்ளார்கள். இது தவிர்க்கமுடியாதது. ஆனாலும் முயற்சி செய்தால் தவிர்க்கக்கூடியதாகும்.

மேடைப்பேச்சிலும் எழுதும்போதும் இந்த மொழிக்கலப்பினைத் தவிர்க்க முயற்சி செய்யலாம். இப்போதெல்லாம் பெரும்பாலும் ஸெளராஷ்ட்ர மக்கள் தங்கள் அமைப்பிலிருந்து நடத்தும் விழாக்களில் தூய ஸெளராஷ்ட்ர மொழியில் பேசி நிகழ்ச்சிகளை நடத்தலாம். அழைப்பிதழ்களையும் ஸெளராஷ்ட்ர மொழியில் அச்சடிக்கலாம். இதனால் மறந்துபோன வார்த்தைகள் மறைக்கப்பட்ட வார்த்தைகள் எல்லாம் மீண்டும் நடைமுறைக்கு வந்து பிறமொழி கலப்புகள் குறையத் தொடங்கும்.

சமீப காலமாக நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கவனித்து வந்ததை இங்கே குறிப்பிடுகிறேன். 

1. எல்லெ விழாக் தலைமை தாங்கி3ரியொ தலைவர்னுகு ஏட் சிறப்புகன் வத்தொ கெரத்தக் அவ்ரியொ மொ:ட்டானுகு அங்குன் எல்லெ கூட்டமுக் அவ்ரியொ பை4 பெ4ய்னானுகு மொரெ நமஸ்கார் களள்லி மொரெ வத்தொ ஸ்டாட் கெரரியொ.

2. அத்தொ எல்லெ விழாம் கலந்தி3ல்ரியொ விஐபினுகு பொன்னாடை போர்த்தி கௌரவம் கெரஞ்ஜாரியொ.

3. சிறப்பு அழைப்பாளர்கன் அவ்ரியொ மொ:ட்டான் ஜு2க்கு பி3ஸிகன் ஸேத்தெனு. தெங்க ஒர்க் எட3லும் அம்கொ மரியாத்3 தீ3 அவ்ரியொ. அமி தெங்க3 தேங்ஸ் ஸங்கு3லரியொ.

இது உதாரணத்திற்காக எடுக்கப்பட்ட சில வார்த்தைகள். இதுபோல எத்தனையோ உண்டு. சரியாகப் பேசுவதென்றால் எப்படி பேசலாம் என்று மேற்சொன்ன வார்த்தைகளையே திருத்திக் காட்டுகிறேன்.

1. எல்லெ விஸேஷ{க் அக்3ராஸநர்கந் அவ்ரியொ அக்3ராஸநர்நுக் ஏட் விஸேஷ்கந் பா4ஷாநாந் கெரத்தக் அவ்ரியொ மொ:ட்டாநுக் அங்கு3ந் எல்லெ கு3ம்புக் (விஸேஷ{க்) அவ்ரியொ பை4 பெ4ய்நாநுக் மொரெ நமஸ்கார் களள்லி மொரெ வத்தொ ஹரும்ப3ம் கெரரியொ.

2. அத்தொ எல்லெ வைப4வுக் அவ்ரியொ ஸமூக முக்கியஸ்தர்நுக் வஸ்தர் க4லி கெ4நம் கெரஞ்ஜாரியொ.

3. விஸேஷ்கந் பொ3வி அவ்ரியொ மொ:ட்டாந் ஜு2க்கு காம்தா4முந் ஸேத்தெநு. தெங்க காம்தா4ம் ம:த்3தி3ம் அவ்ரெ பொ3வ்நிக் மர்யாத்3தீ3 அவ்ரியொ. தெங்க அமி அவ்ரெ த4ந்நு ஸங்கு3லரியொ.

மேடைகளில் நாம்பேசும்போது மட்டுமாவது தூய ஸெளராஷ்ட்ர மொழியிலேயே பேசுவது என்று உறுதி செய்துகொண்டாலே போதுமே! நம் மொழி காப்பாற்றிக் கொள்ள இப்படியும் ஒரு வழி உண்டு என்பதை அறிந்து கொண்டு இனி வருங்காலங்களில் மேடைப்பேச்சாளர்கள் கட்டுரை எழுதுவோர் கடிதம் எழுதுவோர் என்று அனைவரும் ஸெளராஷ்ட்ர மொழிகளில் பேசவும் எழுதவும் முற்படுங்கள். மாறுதலை விரும்புவோர் முதலில் மாற்றிக் காட்டுங்கள்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
2 + 8 =