ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

gOthru charithru...13

கோ3த்ரு சரித்ரு கே4ரு நாவுந்
தொகுத்தளிப்பவர்
சூர்யாஞானேஸ்வர்
17.விஸ்வாமித்திர மகரிஷி

காதி தேசத்தின் அரசன் கௌசிகனுக்கு குமாரனாக அவதரித்தவர்தான் விஸ்வாமித்திரர். இவர் ஒரு க்ஷத்திரயனாகப் பிறந்தாலும் பின்னாளில் பிரம்மரிஷி என்று அறியப்பட்டவர். கௌசிகருக்குப் பின் அரச பொறுப்பினை ஏற்றுக்கொண்டு அரசாளும்போது நீண்ட காலம் போரிடவேண்டிச் சென்றதால் தனது நாட்டை சரிவர பரிபாலனம் செய்ய இயலாமல் போனது. பஞ்சத்தால் வாடிய தனது குடிமக்களை காப்பாற்ற பலவகையிலும் முயற்சித்தும் பலனில்லாமல் போனது. இந்த நிலையில் அரசனுக்கு அமைச்சர்களுக்கும் மற்றும் அரண்மனைவாசிகளுக்கும் அறுசுவை உணவு தேடிவந்தது. உணவை அனுப்பி வைத்தவர் வசிஷ்ட மகரிஷி என்பதை அறிந்த மன்னன் நாடெல்லாம் பஞ்சத்தில் இருக்கும்போது இவருக்கு மட்டும் அறுசுவை உணவு எப்படி கிடைத்தது என்பதை அறிய முற்பட்டார். 
வசிஷ்ட மகரிஷியின் ஆசிரமத்திலுள்ள காமதேனு என்ற பசுவின் கன்று நந்தினி கேட்டதைக் கொடுக்கும் வல்லமைப் படைத்தது என்பதை அறிந்தான். அந்த கன்றை தனக்கு தானமாக தரும்படி வசிஷ்டரிடம் கேட்டார். ஆசிரமத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மட்டுமே நந்தினியை பயன்படுத்திக் கொள்ளுகிறபடியால் அதனை தானமாக தர இயலாது என்று கூறி மறுத்துவிட்டார். 
கோபங்கொண்ட விஸ்வாமித்திரர் தனது சேனைகளைத் திரட்டிக்கொண்டு வந்து நந்தினியைக் கவர முற்பட்டார். வசிஷ்டர் தனது தவவலிமையால் பெற்ற தண்டத்தைக் கொண்டு சேனைகள் முழுமையும் அழித்து விடுகிறார். நிராயுதபாணியான விஸ்வாமித்திரர் வசிஷ்டரின் தவ வலிமையை உணர்ந்து தானும் அவரைப்போல தபஸ்வியாக வேண்டும் என்று விரும்பினார். அதனை ஒரு உயரிய வைராக்கியமாகக் கொண்டு ராஜாங்கத்தை தனது மந்திரி பிரதானிகளிடம் ஒப்படைத்து கானகத்தில் சென்று தவ வாழ்க்கையை மேற்கொண்டார். 
கடுமையான தவம் புரிந்து அரிய சக்திகளை பெறுகிறார். இருப்பினும் கானகத்தில் தாடகை என்னும் அரக்கியால் உருவாகும் சங்கடங்களைப் போக்க தசரதனின் புத்திரர்களாக ராம லட்சுமணனின் துணையால் அரக்கியை வதம் செய்கிறார். பிறகு மிதிலை தேசத்தின் இளவரசியான சீதாதேவியை ஸ்ரீராமனை மணமுடித்து வைக்கிறார்.
வசிஷ்டரின் மாணக்கரான திரிசங்கு தன் உடலோடு சொர்க்கத்திற்கு செல்லவேண்டும் என்ற ஆசையை பூர்த்தி செய்யும்படி கேட்கிறார். அதற்கு வசிஷ்டர் மறுத்து விடுகிறார். விஸ்வாமித்திரர் இமயமலையில் தவம் செய்து தனது தவவலிமையால் திரிசங்குவிற்கு ஒரு சொர்க்கத்தை ஏற்படுத்தி தருகிறார். இதனால் அவர் தனது முழுத் தவவலிமை இழக்கிறார். மீண்டும் தவம் செய்கிறார். அவரது தவத்தைக் கெடுக்க எண்ணிய தேவேந்திரன் தேவலோக மங்கையான மேனகையை அனுப்பி தவத்தை கெடுக்க முற்படுகிறார். மேனகையின் அழகில் மயங்கிய விஸ்வாமித்திரரும் அவளுடன் இணைந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார். இதனால் மீண்டும் தனது தவ வலிமையை இழக்கிறார். இந்திரனின் சூழ்ச்சியால் மேனகைக்கும் விஸ்வாமித்திரருக்கும் பிறந்த இந்த பெண் குழந்தைதான் சகுந்தலை. இந்திரனின் சூழ்ச்சியால் தவவலிமையை இழந்த விஸ்வாமித்திரர் மேனகையையும் அக்குழந்தை சகுந்தலையையும் கானகத்தில் விட்டுவிட்டு மீண்டும் தவம் செய்ய புறப்படுகிறார். 
இந்திரனின் ஆணைக்குட்பட்ட மேனகையும் சகுந்தலையை கானகத்திலேயே விட்டுவிட்டு தேவலோகம் சென்றுவிடுகிறாள். அக்குழந்தையை சாகுந்தல பட்சிகள் காப்பாற்றி வருகிறது. அந்த வழியே வரும் கன்வ மகரிஷி தனது ஞானக்கண்ணால் நடந்தவற்றை அறிகிறார். அக்குழந்தையை தனது ஆசிரமத்திற்கு எடுத்துச் சென்று வளர்க்கிறார். பருவ வயதடைந்த பின் ஒரு நாள் துஷ்யந்த மகாராஜா வேட்டைக்கு வரும்போது இருவருக்கும் மலர்ந்த காதலால் காந்தர்வ மணம் செய்து கொள்கின்றனர். இருவருக்கும் பிறந்த குழந்தைதான் பரதன். இவன் பெயரால்தான் நமது நாடு பாரதநாடு என்று அழைக்கப்படுகிறது.
துர்வாச மகரிஷியின் சாபத்தால் துஷ்யந்தன் சகுந்தலையைப் பிரிந்து தனது நாட்டிற்குச் சென்று விடுகிறார். பின்னர் சகுந்தலையையும் பரதனையும் கன்வ மகரிஷி தனது ஆசிரமத்திலேயே வளர்த்து வருகிறார். 
கீழ் திசை சென்று தவம் புரிந்துவரும் விஸ்வாமித்திரருக்கு மும்மூர்த்திகளும் தரிசனம் கொடுக்கிறார்கள். இன்று முதல் நீ பிரம்ம ரிஷி என அழைக்கப்படுவாய் என அருள்புரிந்தனர். இதனால் உள்ளம் மகிழ்ந்த விஸ்வாமித்திரர் 
ஓம் பூர் புவ: ஸ்வ:
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோ யோன: ப்ரோசதயாத்

என்ற காயத்ரி மந்திரத்தை உலகிற்கு அருளினார். 

இவ்வாறு நீண்ட காலம் தவமிருந்து வலிமைகளைப் பெற்று மீண்டும் அதனை இழந்து மீண்டும் மீண்டும் தவபுரிந்து வைராக்கியத்துடன் தவ வாழ்க்கையை மேற்கொண்ட விஸ்வாமித்திரரை பிரம்மரிஷி ஆனபோதிலும் சகரிஷிகளிடம் பணிந்து போக முடியவில்லை. இதன் காரணமாக வசிஷ்டர் இவரை பிரம்மரிஷியாக ஒப்புக்கொள்ளவில்லை. இவ்விஷயத்தில் கன்வமகரிஷி தலையிடுகிறார். விஸ்வாமித்திரரின் பேரனான பரதனின் நலன்பற்றி உபதேசித்து துர்வாசர்ää வசிஷ்டர் ஆகிய ரிஷிகளை சமாதானப்படுத்தி துஷ்யந்த மகாராஜாவின் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறார். விஸ்வாமித்திரரையும் அவ்விடம் வரச் செய்கிறார். துர்வாசர் துஷ்யந்தனுக்கு சாப நீங்க அருள்புரிகிறார். துஷ்யந்தனும் சகுந்தலையை மணம்புரிந்ததும் பரதனை பெற்றெடுத்ததும் போன்ற பழைய சம்பவங்கள் அனைத்தும் நினைவுக்கு வருகிறது. தனது மகன் பரதனை பட்டத்து இளவரசனாக்குகிறார். நீண்டப் போராட்டத்திற்குப் பிறகு வசிஷ்டரும் விஸ்வாமித்திரரை பிரம்மரிஷி என அழைத்து உளமாற பாராட்டி மகிழ்கிறார். இதைத்தான் நாம் பொது வாழ்க்கையில் இருப்பவர்களை பாராட்டுகின்றபோது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று சொல்கிறோம்.

காதி தேசத்து மன்னன் கௌசிகனின் மகனாகப் பிறந்து சத்திரிய வம்சத்து அரசனாகி நாட்டை துறந்து தவவாழ்க்கையை மேற்கொண்டு பற்பல இன்னல்களை அனுபவித்து தலைவணங்காமல் இருந்து வசிஷ்டரின் பல சோதனைகளை வென்று இறுதியில் பிரம்ம ரிஷி பட்டம் பெற்ற ஒரே ராஜரிஷி இவரே என்று துணிந்து கூறலாம். சாதாரண மக்கள் தாங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்கள் துயரங்கள் என்று அனைத்தையும் மறந்து புண்ணிய பலன்கள் பெற விஸ்வாமித்திரரின் கதையை ஒருமுறைப் படித்துப் பார்த்தாலே சுகம்பெற முடியும்.

இவர் அருளிய தர்ம சாஸ்திரம் விஸ்வாமித்திர ஸ்மிருதி ஆகும். இவர் பிரம்மரிஷி என்றும் இராஜரிஷி என்றும் வேதகால மகரிஷி என்றும் போற்றப்படுகிறார். இவர் ஆசிரமத்தின் சிஷ்ய பிறசிஷ்ய வழி வந்தவர்கள் விஸ்வாமித்திர கோத்திரத்தவராவர். 

விஸ்வாமித்திர கோத்திரத்தின் ஸ்லோகம்:
ருத்ரஸ்ச தே3வோ ந்ருகணம்ச நாரீ
ரக்தேக தாரா ஸ{நசஸ்ச யோநி:
க்ரௌஞ்சஸ்ச பக்ஷீ ப3த3ரீச வ்ருகே;ஷா
ப்ருகு3ஸ{த காஸ்யப காதிஸ{நோ:

விஸ்வாமித்திர கோ3த்ரம்:

வேத்3 : யஜுர் வேத்3
ஸ{த்ரு : ஆபஸ்தம்ப ஸ{த்ரு
நட்சத்ரு : ஆருத்3ரா
கோ3த்ரு : விஸ்வாமித்திர கோத்ரம்
தே3ஸ் : ஸெளராஷ்ட்ரம்
கா3ம் : ஸோமநாதபுரி
தே3வதொ : ருத்3ரன்
க3ணம் : மனுஷ்ய க3ணம்
வாஹநொ : பை4ரவொ (நாய்)
பட்சி : சக்ரவாகம் என்ற க்ரௌஞ்ச பக்ஷி
விருட்சம் : போ3ரு ஜா2ட் (இலந்தை மரம்)
வாந் : வாமதே3வவாந்-ஜமுடு3வாந்
ஆரிஷம் : திரியாரிஷம்
பிரவரம் : விஸ்வாமித்திரää தெ3வராத்ää ஒளதல ஆகிய கோத்திரங்கள்
                    திரியாரிஷ ப்ரவரம்.

விஸ்வாமித்திர மகரிஷிக் செரெ கே4ருநாவுந்:
1. பிட்டாந்
2. முத்3து3ந்
3. புட்டாந்
4. தம்பர்
5. கஸ்பண்ணா
6. எத்3து3
7. கவுநா
8. வைத்3யம்
9. மூளிந்
10. திம்நா (வாலாஜா)

இந்த கோத்திரத்தின் வீட்டுப்பெயர்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் அந்தந்த ஊரில் உள்ளவர்கள் அந்த வீட்டுப்பெயர்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 

User Comments

Question : 4
+
7=