Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
chalni -kaLatni 25-7-18

தேசிய ஸௌராஷ்ட்ரீ சொல்விருத்திப் பட்டறை 

குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பெற்ற ஸெளராஷ்ட்ர ஹெரிட்டேஜ் சேர் மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் லாங்க்வேஜ் & மதுரை ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸதஸ் இணைந்து நடத்திய தேசிய அளவிலான ஸெளராஷ்ட்ர வார்த்தைகளின் வளர்ச்சி பற்றிய பயிற்சி பட்டறை 11-7-18 முதல் 17-7-18 முடிய சிறப்பாக நடைப்பெற்றது.

இவ்விழாவில் கலந்து கொள்ள பேராசிரியர் முனைவர் தி.இரா.தாமோதரன் - திருமதி. நிர்மலாதாமோதரன் தலைமையில் பேராசிரியர் முனைவர் எல்.ஆர்.கோவர்தனன்-சக்திமாய், முனைவர் டி.எஸ்.கிருஷ்ணாராம்-உமா, டி.ஜி.துவாகரநாத்-கீதா, கே.பி.சங்கர்லால்-சஞ்சிலட்சுமி, எஸ்.ஆர்.மோகன்-ஜெயஸ்ரீதேவி, கே.எ.ரெங்கராஜன்-விஜயலட்சுமி, ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகை ஆசிரியர் சூர்யா ஞானேஸ்வர்-மாலினி. ஸெளராஷ்ட்ர டிவி சுதர்சன் செட்டி-ஜெயந்தி, கே.ஆர்.கிருஷ்ணமாச்சாரி-துளசி பிருந்தா, அய்யலு.வி.ஜோதிலால், சோலை குமரேஷ், எல்.பி.கிஷோர்குமார், கொண்டா செந்தில்குமார், அர்ஜுனா கிருஷ்ணாராம், கே.எம்.வெங்கடேஷ் ஆகியோர் ரயில் மூலமாக மதுரையிலிருந்து புறப்பட்டனர்.


தொடக்க விழாவில் ஸெளராஷ்ட்ர ஹெரிட்டேஜ் சேர் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ஆர்.பி. ஜாலா, சூரத் ஆரோ பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அவதேஷ் குமார் சிங், பாவ்நகர் கலால் துறை ஆணையர் ஸ்ரீமுரளிராவ், CIIL ஒருங்கிணைப்பாளர் முனைவர் எல்.ஆர்.பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவின்போது ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருமதி. பேராசிரியை நீலாம்பரி தவே, தெலுங்கானா மாநிலத்தின் ரயில்வே கூடுதல் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கே.எம்.கிஷோர்குமர் மற்றும் ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கமலேஷ் ஜோஷிபுரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பட்டறையில் கலந்து கொண்ட மொழி ஆர்வலர்களை உற்சாகப்படுத்தினர்.

விரிவான செய்தி வீடியோ படத்துடன் தொடர்ந்து இடம்பெறும். பார்க்கத் தவறாதீர்கள். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 5 =