ad1
We pleased to request our readers to open the advertisements in between the every articles.

chalni -kaLatni 7-7-18

 

National Workshop on
Vocabulory Development of Sourashtri
குஜராத், ஸெளராஷ்ட்ர பல்கலைக் கழகத்திலிருக்கும் ஸெளராஷ்ட்ர ஹெரிட்டேஜ் சேர் மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் லாங்க்வேஜ், மதுரை ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸதஸ் இணைந்து நடத்தும் தேசீய அளவிலான ஸெளராஷ்ட்ர வார்த்தைகள் வளர்ச்சி என்ற தலைப்பில் பட்டறை நடக்கவுள்ளது. இது வருகின்ற 11-7-18 முதல் 17-7-18 முடிய ராஜ்கோட் ஸெளராஷ்ட்ர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆங்கில துறையின் வியாஸ் செமினார் ஹாலில் நடைபெறுகிறது.
தொடக்க விழா நாளில் ஸெளராஷ்ட்ர ஹெரிடேஜ் சேர் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் ஆர்.பி.ஜாலா அனைவரையும் அறிமுகப்படுத்தி வரவேற்புரையாற்றுகிறார். துணைவேந்தர் பேராசிரியர் நீலாம்பரி தேவ் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து தலைமையுரையாற்றுக்கிறார். சூரத், ஆரொ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அவதேஷ் குமார் சிங் தொடக்க உரையாற்றுகிறார். பவநகர் வனத்துறை கலால் ஆணையாளர் ஸ்ரீமுரளிராவ் சிறப்புரையாற்றுகிறார். பேராசிரியர் முனைவர் தி.இரா.தாமோதரன் சிறப்பு விருந்தினராக கௌரவிக்கப்படுகிறார். முனைவர் எல்.ஆர்.பிரேம்குமார் நன்றியுரையுடன் விழா நிறைவு பெறவுள்ளது.
இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொள்வதற்காக மதுரை, திருச்சி, தஞ்சை ஆகிய ஊர்களிலிலிருந்து மொழியார்வலர்கள் கலந்து கொள்ள செல்கிறார்கள்.

 

 

User Comments

Question : 3
+
5=