Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
vidiyalai....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:
விடியலை நோக்கி!
தொழில் சமுதாயமாக இருந்த ஸெளராஷ்ட்ர சமூகம் தனது நிலையிலிருந்து மாறுப்பட்டு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வியால் முன்னேறி வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்ள தம்மை முழுதுமாக தயார்ப்படுத்திக் கொண்டுவிட்டது. 
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் ஸெளராஷ்ட்ரர்கள் நெசவுத்தொழில் தவிர சாயத்தொழில் அதனைச்சார்ந்த சலவைத்தொழில் மற்றும் சுங்கிடிப்புடவை தயாரிப்பு போன்ற தொழிலில் இருந்து வந்ததுள்ளனர். திருச்சியில் உறையூர் புதுக்கோட்டையி;ல் இலுப்பூர் போன்ற ஊர்களில் செயற்கை வைரங்களுக்குப் பட்டைத் தீட்டும் தொழிலில் இருந்து வருகின்றார்கள். சேலம் செவ்வாய்ப்பேட்டையில் வெள்ளிக்கொலுசு தயாரிப்பிலும் வியாபாரம் என்று எடுத்துக் கொண்டால் சாயப்பவுடர்ää நூல்வியாபாரம்ää ஜவுளி வியாபாரம்ää பலகாரம் தயாரிப்பது போன்றவற்றிலும் தங்களை ஈடுப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர். 
இந்த தொழில்களி;ல் வருவாய் மிகவும் குறைவாக இருந்ததால் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட இயலாமல் போய்விட்டது. இதனால் தங்களது குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் என்று விரும்பினர். படிக்க வைத்தனர். படித்தவர்கள் வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதித்து தங்கள் பெற்றோர்களை குளிரச் செய்தனர். இதனால் நமது வாழ்க்கை நிலையும் வளர்ந்தது. சமூகப் பொருளாதாரமும் உயர்ந்தது. இழந்தது நம் குலத்தொழில்களை!
படித்த நாம் நம் குலத்தொழில்களை கைகளால் செய்வதைத் தவிர்த்து இயந்திரங்கள் மூலம் செய்யும் முறையைத் தேர்ந்தெடுக்காமலேயே விட்டுவிட்டோம். அது அடுத்தவர்களுக்கு பயன் பட்டது. இதனால் நம் தொழில் நசிந்தது. கைநெசவு போய் இயந்திரத்தில் நெசவு. குறைந்த செலவில் அதிக உற்பத்தி. சாயத்தொழிலிலும் இயந்திரமயமே! கைகளால் செய்த அனைத்திற்கும் இயந்திர மூலம் செய்யும் முறை கண்டறியப்பட்டது. அதைக்கொண்டு பிற சமுதாயத்தினர் முன்னேறினர். நாமோ படித்தப் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்திலே வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். விடியலை நோக்கி!
நம் முன்னோர்களின் தொழிலை இயந்திரங்களின் மூலம் செய்யும் நுட்பத்தை கண்டறிய இன்றைய படித்த இளைஞர்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் நீங்கள் கற்ற கல்விக்கும் நம் சமுதாயத்திற்கும் பெருமையாக இருக்கும். நம் சமூகத் தொழில்களும் காப்பாற்றப்படும்.

ஸ்ரேயங்க3ம்:

Vol.4 16th April  2017 Issue: 16

விடியலை நோக்கி!

தொழில் சமுதாயமாக இருந்த ஸெளராஷ்ட்ர சமூகம் தனது நிலையிலிருந்து மாறுப்பட்டு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வியால் முன்னேறி வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்ள தம்மை முழுதுமாக தயார்ப்படுத்திக் கொண்டுவிட்டது. 

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் ஸெளராஷ்ட்ரர்கள் நெசவுத்தொழில் தவிர சாயத்தொழில் அதனைச்சார்ந்த சலவைத்தொழில் மற்றும் சுங்கிடிப்புடவை தயாரிப்பு போன்ற தொழிலில் இருந்து வந்ததுள்ளனர். திருச்சியில் உறையூர் புதுக்கோட்டையில் இலுப்பூர் போன்ற ஊர்களில் செயற்கை வைரங்களுக்குப் பட்டைத் தீட்டும் தொழிலில் இருந்து வருகின்றார்கள். சேலம் செவ்வாய்ப்பேட்டையில் வெள்ளிக்கொலுசு தயாரிப்பிலும் வியாபாரம் என்று எடுத்துக் கொண்டால் சாயப்பவுடர், நூல்வியாபாரம், ஜவுளி வியாபாரம், பலகாரம் தயாரிப்பது போன்றவற்றிலும் தங்களை ஈடுப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர். 

இந்த தொழில்களில் வருவாய் மிகவும் குறைவாக இருந்ததால் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட இயலாமல் போய்விட்டது. இதனால் தங்களது குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும் என்று விரும்பினர். படிக்க வைத்தனர். படித்தவர்கள் வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதித்து தங்கள் பெற்றோர்களை குளிரச் செய்தனர். இதனால் நமது வாழ்க்கை நிலையும் வளர்ந்தது. சமூகப் பொருளாதாரமும் உயர்ந்தது. இழந்தது நம் குலத்தொழில்களை!

படித்த நாம் நம் குலத்தொழில்களை கைகளால் செய்வதைத் தவிர்த்து இயந்திரங்கள் மூலம் செய்யும் முறையைத் தேர்ந்தெடுக்காமலேயே விட்டுவிட்டோம். அது அடுத்தவர்களுக்கு பயன் பட்டது. இதனால் நம் தொழில் நசிந்தது. கைநெசவு போய் இயந்திரத்தில் நெசவு. குறைந்த செலவில் அதிக உற்பத்தி. சாயத்தொழிலிலும் இயந்திரமயமே! கைகளால் செய்த அனைத்திற்கும் இயந்திர மூலம் செய்யும் முறை கண்டறியப்பட்டது. அதைக்கொண்டு பிற சமுதாயத்தினர் முன்னேறினர். நாமோ படித்தப் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்திலே வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். விடியலை நோக்கி!

நம் முன்னோர்களின் தொழிலை இயந்திரங்களின் மூலம் செய்யும் நுட்பத்தை கண்டறிய இன்றைய படித்த இளைஞர்கள் முன்வரவேண்டும். அப்போதுதான் நீங்கள் கற்ற கல்விக்கும் நம் சமுதாயத்திற்கும் பெருமையாக இருக்கும். நம் சமூகத் தொழில்களும் காப்பாற்றப்படும்.

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 7 =