Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
puththa kaNkAtchi...Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.3 16th August  2016 Issue: 24


புத்தகக் கண்காட்சி!

ஸெளராஷ்ட்ர மொழி ஒரு திருந்திய மொழியே என்று ஊர்ஜிதப்படுத்தும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். மொழியியல் வல்லுநர்களின் கருத்துப்படி எந்த விதத்தில் திருந்திய மொழியாகிறது என்பதை தெளிவான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட இக்கட்டுரை பலராலும் பாராட்டி வரவேற்கப்பட்டது. 


ஸெளராஷ்ட்ர என்பது ஓர் இனம். ஜாதியல்ல என்பதை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இக்கட்டுரை அமைந்தது சிறப்பானதாகும். 


இதன் வெளிப்பாடாக சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் சேலத்தில் சேலம் ஸெளராஷ்ட்ர சமூக சேவா சங்கம் நடத்திய ஸெளராஷ்ட்ர இலக்கிய புத்தகக் கண்காட்சி இக்கட்டுரைக்கு உயிரோட்டம் கொடுத்தது போலிருந்தது. ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியம் சம்பந்தமான நூல்கள் அதனை வெளியிட்ட பதிப்பாளர்கள் என்று அதிக அளவில் கண்காட்சியில் இடம் பெற்றது. அத்துடன் தற்கால இலக்கிய கர்த்தாக்களான எழுத்தாளர்கள் கவிஞர்கள் என்று அனைவரும் ஏகமாக கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை கண்காட்சியில் இடம்பெறச் செய்தனர். ஸெளராஷ்ட்ரர் வரலாறு பற்றிய நூல்கள் ஸெளராஷ்ட்ர மொழியினை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும் வகையில் ஸெளராஷ்ட்ர புக் டிரஸ்ட் வெளியீடு மேலும் சமூக மகான்கள் படைத்த காவியங்கள் மற்றும் தற்கால கவிஞர்களின் கவிதை தொகுப்புகள் மற்றும் எழுத்தாளர்களின் நாடகங்கள் மகான்களின் இலக்கிய திறனாய்வு நூல்கள்  இடம் பெற்று ஸெளராஷ்ட்ர மொழிக்கு எழுத்து இலக்கியம் இலக்கணம் என்று உள்ளதை வெளி உலகிற்கு காட்டியது இந்த புத்தகக் கண்காட்சியின் சிறப்பம்சமாக இருந்தது.


தமிழ்கூறும் நல்லுலகத்தில் வாழும் நமக்கும் நம் மொழியின் மீது தணியாத ஆர்வம் இருப்பதையும் நமது மொழியின் வளர்ச்சிக்கு இன்றைய இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை எத்துணை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள இந்த கண்காட்சி ஒரு பாலமாக அமைந்தது என்றால் மிகையாகாது. அதற்கு முத்தாய்ப்பாக புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவரையும் பாராட்டி கௌரவித்த சேலம் ஸெளராஷ்ட்ர சமூக சேவா சங்கத்தினர் பாராட்டுக்குரியவர்கள்.


இனி ஆண்டுதோறும் ஸெளராஷ்ட்ர இலக்கிய புத்தகக் கண்காட்சி ஒவ்வொரு ஊரிலும் நடைபெறவேண்டும். ஸெளராஷ்ட்ரர்களால் வெளியிடப்படும் ஸெளராஷ்ட்ர மொழி புத்தகங்கள் அனைவரும் வாங்கிப் படித்து மொழி வல்லுநர்களாக வளர வேண்டும். நல்ல வாழ்க்கை நெறிகளையும் மரபுகளையும் பண்பாட்டினையும் தொடர்ந்து காத்துவர தாய்மொழி இலக்கியம் துணைபுரியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

எனவே –

ஸெளராஷ்ட்ர மொழியில் உள்ள இலக்கியங்களை படிப்போம். வாழ்க்கையில் நல்ல நெறிகளை கடைப்பிடிப்போம். சமுதாயத்தில் உயர்ந்துக் காட்டுவோம்.

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
1 + 7 =