ad1
askinAk nava orsu subha nanthinin

chalni kaLatni 1-12

27-11-17 ன்று ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸதஸ் சார்பில் வருகின்ற ஜனவரியில் (மாதம் 26 அல்லது 27 தேதிகளில் ஏதாவது ஒரு நாள்) நடைபெறவுள்ள ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய ஸம்மேளனம் பற்றிய முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

 

இதில் மொழி வளர்ச்சி தொடர்பாக வித்யாபீடம், இலக்கிய வளர்ச்சி தொடர்பாக கவி ஸதஸ், ஸெளராஷ்ட்ர ஸமூக ஸிரேஷ்டுந் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஊரிலும் இலக்கிய வளர்ச்சிக்கு உதவிய புரவலர்கள் பற்றிய சிறப்புரை, வட்டார மொழியை அறிந்து கொள்ளும் விதத்தில் மாணவர்களின் பேச்சு, புதிதாக அச்சிலேறியுள்ள ஸெளராஷ்ட்ர இலக்கிய நூல்களின் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பேராசிரியர் தாமோதரன், கோவர்தனன், சாம்பசிவமூர்த்தி, குபேந்திரன், ராணி. சத்தியமூர்த்தி, புலவர் பரசுராமன், புலவர்குபேந்திரன், கசின் ஆனந்தம், N.S.விஸ்வநாதன், ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன், கே.ஆர்.கிருஷ்ணமாச்சாரி, ராகவன், ஜுட்டு தியாகராசன், கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.ஜெனார்தனன் மற்றும் திருமதி. சரோஜினி குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

User Comments

Question : 1
+
6=