ad1
askinAk nava orsu subha nanthinin

pANdavun khetho....

பாண்ட3வுந் கெ2தொ 

கஸின் ஆனந்தம்

வெளியிட்டோர்: கே.எ. சாந்தாமணி

1/805, விவேகாநந்தபுரம்,

கைத்தறிநகர், நிலையூர்,

மதுரை – 625 005. விலை:ரூபாய்: 700/-

 

இந்த நூலுக்கு ஸாஹித்ய அகாடமி விருது பெற்ற கே.ஆர்.சேதுராமன், தாடா. சுப்பிரமணியன், பேராசிரியர் முனைவர். இரா.மோகன், டி.ஜி.துவாரகநாத், தங்கமணி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.கீதாபாரதி ஆகியோர் அணிந்துரை அளித்துள்ளார்கள். டி.வி.குபேந்திரன் நூலாசிரியரைப் பற்றி குறிப்புரை தந்துள்ளார். அனைவரும் நூலாசிரியரின் உற்சாகத்திற்கு மெருகேற்றும் வகையில் ஆழ்ந்து படித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளது இந்த பாண்ட3வுந் கெ2தொ படிப்பவரை ஈர்க்கும்படி அமைந்துள்ளது.


இந்த பாண்ட3வுந் கெ2தொ ஸெளராஷ்ட்ர மொழியில் இது வரை யாரும் மகாபாரதத்தை மொழிப் பெயர்க்கவில்லை என்றாலும் வடமொழியிலும் தமிழிலும் வெளிவந்த பலருடைய படைப்புக்களைச் சார்ந்து வெளிவந்துள்ளதால் இந்த நூல் ஒரு சார்பு நூலே. 


இந்நூலில் நூலாசிரியரது மொழிப்பற்று அவர் கையாண்டுள்ள சொல்லாட்சியிலிருந்து தெரிய வருகிறது. இந்நூல் புதுக்கவிதை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதுகை மோனை என்பது கவிதையின் அழகு. அத்துடன் கவியலங்காரமாக உவமைகள் உவமானங்கள் வார்த்தை ஜாலங்கள் என்று ஏராளமாக இடம் பெறச் செய்துள்ளார் கஸின் ஆனந்தம். 


வெக்கி ஜிவெதி மெளி – அம் பா4ஷொ

பு4க்கி ஜிவ்நொ


பொள்ளாம் கு3ள்ளெ கச்சம்பொ3

பொள்கி3நிம் கு3ள்ளெ ஸெளராஷ்ட்ரம்பொ3 - இது இவரது மொழிப்பற்றுக்கு ஓர் உதாரணம்.


சொற்களை கையாள்வதில் மிகவும் சிரத்தையுடன் நாம் மறந்த சொற்கள் மற்றும் புதிய சொற்கள் என்று தமது திறமையைக் காட்டுகிறார். 


காவலாளிகளை ர:க்வாநு என்றும் காதலனுக்கு ப்ரேமவாந் என்றும் புண்யதீர்த்தளிகெ புத்ரு என்பதற்கு கங்கையின் மைந்தனுக்கும் ஜீகு ஹாரு என்பதற்கு வெற்றிமாலை எனவும் க2வ்நஸ்வாந் சூரியனையும் ம:ளியாந் என்பதற்கு மீனவன் என்றும்  மிஸ்நிந் என்பதற்கு இமைகள் என்றும்  ஏகமாக புதிய சொற்களை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 


பாட் நி:நடி என்பதும் வீளு விடொ3 க2ள்ளுதொ, க2ள்ளுதொ என்ற வரியும் அவரது கற்பனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மேலும் கங்கையின் மைந்தன் என்பதற்கு புண்யதீர்த்தளிகெ புத்ரு என்றும் கூறுகிறார். 


அடு3 அந்தூ3ஸ{ அஸ்க தெக்கடெ3ஸ்

அடு3மு தொரந்க ஹாதுநு தொ2வெஸி – என்பதில் காதல் உணர்வை சுவைப்பட சொல்கிறார்.


ஸெளராஷ்ட்ர மொழியில் பேசப்படும் பழமொழிகளையும் விட்டு வைக்கவில்லை. தகுந்த இடங்களில் சுவைப்பட கையாள்கிறார். ஸ்தி2ரம்மு விஜ்ஜயெ ஸமுஹ{ என்ற வர்ணனையிலிருந்து நம் சமூகத்தின் உயர்வினையும் சொல்ல தவறவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். 


தந தகுநாத்தெ தெல்ல தா2மு யோசந விநெஸ் என்பதிலிருந்தும் பிரம்மன் தன்னுடைய வேதத்தில் எழுதியிருப்பதை வேது3மு லிக்கி விநெஸ் என்பதிலும் சமூகத்தின் பாரம்பரியத் தொழில் நெசவுத் தொழில் என்பதை பறை சாற்றுகிறார். 


வீட்டிற்கு வருகின்ற மருமகளை எப்படி அழைத்துக் கொள்ளவேண்டும் என்பதை சொல்வதில் இவரது சமுதாய உணர்வினைக் காணமுடிகிறது.


பொ4வ்ண்டி3 மெநத்தெந் பொ4ரெ கொ4ம்மொ அவந்

பூ4தே3வி அம்கொ ஸம்ரக்சி ஸீலந் ஸ்ரீதே3வி என்பதிலும் மருமகளை 

ஸ்வர்ணு தீ3பொ3வ்லத்தேஸ் ஸெர்கொ 

திஸொபொ3வ்லுநாத்தென் பு4ர்கொ என்பதிலும் 

ஜகுந பாஞி ஸொம்மர் தொ2வி துரந்-அமி

ஜெந்நாத்த பெ3டிகு

ஸ்வாக3த் கரி பொ3வ்நொ – திகஹால்

ஸ{வாஸ்கரய் ஸம்ப3த்து மெநந் பொ2வ்நொ என்பதிலும் நமது பண்பாட்டினை தெளிவுப்படுத்துகிறார்.


அம்பா அம்பாலிகா இவர்களை வர்ணிக்கும்போது இலக்கிய ரசனை வெளிப்படுகிறது. 

அம்பா3 அந்தூ3ஸ{ம் ரம்பா3

அப்ரஞ்ஜி கு2ம்பா

அம்பா3லிகா

லிம்பு3ளா வநிகாய்

ஜெம்பு3ளா கே2ஸ்காய்

பொ4ம்பு3ள ஹோடுகாய்

இம்ப3ளா போ3லுகாய்

பெண்ணை விரசமின்றி வர்ணிக்கும்போதுதான் கவிஞனின் கவித்துவம் மேன்மையுறுகிறது.

ஸெளராஷ்ட்ர மொழியில் சொற்களை இவர் கையாளும்விதம் மொழிச்சுவையை அனுபவிக்க தோன்றும். ஸெளராஷ்ட்ர இலக்கிய உலகில் இவருடைய இந்த நூல் ஒரு மகுடம்.   –ஆசிரியர். 

 

User Comments

Question : 1
+
5=