Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
marukka ....Shreyangam

ஸ்ரேயங்க3ம்:


Vol.3 16th July 2016 Issue: 22


 

மறுக்க முடியாத உண்மை 

எல்லா தரப்பினரையும் அரவணைத்து அனைவரும் விரும்பும் வண்ணம் விஷயங்களை கொடுத்து பத்திரிகை நடத்துவது என்பது எத்தகைய கடினமான காரியம் என்று பத்திரிகை துறையில் உள்ளவர்களுக்கு நன்றாக புரியும். அதுவும் சிற்றிதழ்….சமூகப் பத்திரிகை என்னும்போது எவ்வளவு பெரிய சிரமங்களை சந்திக்க வேண்டும் என்பதை தம்மை ஈடுப்படுத்திக் கொண்டோரால் மட்டுமே உணர முடியும். 

ஸெளராஷ்ட்ரர்களுக்காக ஒரு பத்திரிகை நடத்தவேண்டும் என்றால் அவர் முழுக்க முழுக்க ஸெளராஷ்ட்ரராக மட்டுமே இருக்கவேண்டும். ஸெளராஷ்ட்ர மொழி இலக்கியம் சமுதாயம் கல்வி தொழில் என்று அனைத்துத் துறையிலும் ஈடுபாட்டுடன் செயல்படக் கூடிய ஒருவரால் மட்டுமே வெற்றிக்கரமாக நடத்த முடியும். அதுவும் நம் சமூக வியாபார பெருமக்கள் விளம்பரங்களைக் கொடுத்து பத்திரிகையாளர்களை ஊக்கப்படுத்தினால் மட்டுமே சாதனைகளை சாத்தியங்களாக மாற்ற முடியும். 

அந்த வகையில் ஸெளராஷ்ட்ர டைம் தனது பயணத்தில் சிறிது தூரம் பிரிண்டட் மீடியாவாக செயல்பட்டு மிகுந்த சிரமங்களை சந்தித்துள்ளது. பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டதால் ஓர் இடைவெளி. அதன்பின் இந்த தலைமுறையினரோடு கைகோர்த்து புதிய கணினி தொழில் நுட்பத்தோடு இணைந்து இ-பத்திரிகையாக நடத்த முடிவு செய்து அதன்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வெற்றிக்கரமாக நடத்தப்பட்டு வருவது எல்லோரும் அறிந்ததே. மாதந்தோறும் சுமார் மூவாயிரம் வாசகர்கள் பார்த்து வருகிறார்கள். வியாபார பெருமக்களின் விளம்பரங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும் சமாளிக்கக் கூடிய அளவில் இருப்பதை பெருமிதமாக சொல்லிக் கொள்கிறேன். 

இனி வருங்காலங்களில் ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகையில் அனைத்து ஊர் சமூக வியாபார பெருமக்களின் விளம்பரங்கள் வெளிவரவேண்டும். அதற்கான முயற்சிகளில் நம் பத்திரிகை ஆதரவாளர்கள் நண்பர்கள் வாசகர்கள் என்று அனைவரும் முயற்சிகள் மேற்கொண்டு விளம்பரங்களைப் பெற்று தரவேண்டுகிறேன். வாசகர்கள் இணையதளத்தில் ஸெளராஷ்ட்ர டைமை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பினை உருவாக்கி கொடுத்திருப்பதால் பத்திரிகை நடத்த பொருளாதார ரீதியாக விளம்பரங்கள்தான் கைகொடுக்க வேண்டும். 

விளம்பரங்களை சேகரித்துத்தர ஆதரவாளர்கள் முயற்சி செய்யவேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். அவரவர் ஊர்களில் நடக்கும் நிகழ்வுகளை தொகுத்தனுப்பிட சபைகள் இளைஞர் அமைப்புகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் உலகாளாவிய முறையில் நம் செய்திகள் அனைவருக்கும் சென்றடையும். இந்த அரிய வாய்ப்பு ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகையில் மட்டுமே சாத்தியமாகும் என்பதே மறுக்க முடியாத உண்மை. எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை தாராளமாக அனுப்பி வைக்கலாம். ஸெளராஷ்ட்ர சாகித்யாகர்த்தாக்கள் தங்கள் படைப்புகளை வெளியிட ஸெளராஷ்ட்ர டைம் என்றும் உறுதுணையாக இருக்கும். 

ஸெளராஷ்ட்ர டைம் இ-பத்திரிகைக்கு சந்தா நன்கொடை என்று எதுவும் பெறாமல் விளம்பரங்களை மட்டுமே நம்பி தொடர்ந்து வண்ணப்படங்களுடன் செய்திகள் கட்டுரைகள் என்று வெளியிட்டு உலகம் முழுவதும் உள்ள ஸெளராஷ்ட்ரர்களால் வரவேற்கப்படும் எங்களது இந்த புதிய கன்னி முயற்சிக்கு பேராதாரவினை தொடர்ந்து தரும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.   

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
4 + 7 =