Sourashtra Time
NOW AVAILABLE IN READY STOCK. RUSH YOUR ORDER FOR hiinun caLisye, hitavun caLisye and cunuk caLisye for Rs. 250/- ONLY.
Advertisement
Chalni - KaLatni 16-5

03-04-2016 அன்று ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன் - மாலினி தம்பதியர்க்கு மதுரை தெற்குப்பெருமாள் மேஸ்திரி வீதியிலுள்ள சி.எஸ்.ஆர். விசாலாட்சி கல்யாண மண்டபத்தில் சஷ்டியப்த பூர்த்தி சாந்தி வைபவம் நடைப்பெற்றது. காலை 7மணிக்கு ஸ்ரீசீதாராமாஞ்சநேயர் கோவிலின் முன்புறம் அஸ்வத்தபிரதட்சணம் நடைப்பெற்றது. அதன் பின்னர் காலை 9 மணியிலிருந்து அனைத்து ஹோமங்களுடன் லட்சுமிநாராயண தம்பதியர்களின் பாதபூஜையும் பின்னர் திவ்யதம்பதியர்களுக்கு கலச தீர்த்த ஸ்நானமும் செய்விக்கப்பட்டது. பகல் 3 மணிக்குமேல் மாங்கல்ய தாரணமும் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த விழாவில் உறவினர்கள் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி பொதுச் செயலாளர் ராமசுப்பிரமணியன், மொதிபாபு, உமாபதி, பேராசிரியர் தி.இரா.தாமோதரன் தம்பதியர் ஜே.ஆர்.ஜவஹர்லால் தம்பதியர் நேரில் வந்து ஆசிர்வதித்தனர். மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்பாபு, பாஷாபிமானி ஆசிரியர் குபேந்திரன், ஸொந்நாகொடு3ம் ஆசிரியர் சதாசிவன் தம்பதியர் குசோ அமைப்பிலிருந்து ரமணா. பாஸ்கர் ஸெளராஷ்ட்ர திரைப்பட இயக்குநர் நீலாராவ் மற்றும் ஸெளராஷ்ட்ர எழுத்தாளர்கள் கசின் ஆனந்தம் சோலை ராகவன் ஸெளராஷ்ட்ர மித்ரன் நிறுவனர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் ஸெளராஷ்ட்ர கவிஞர்கள் கோவை திருமதி சரோஜா சுந்தரராஜன்ää ராசிபுரம் அனந்தராமன் திருபுவனம் எம்.எஸ். ரமணி ஆகியோர் ஸெளராஷ்ட்ர கவிதை மூலம் தங்கள் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இவர்களுடன் ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் முன்னாள் செயலாளாரும் நண்பருமான தஞ்சை எம்.எஸ்.ராமலிங்கம் வாழ்த்து மடல் அனுப்பியும் சிறப்பித்தனர். சென்னையிலிருந்து வெளிவரும் ஜுட்டிசன் பத்திரிகையின் ஆசிரியர் ராம.ஈஸ்வர்லால் தனது பத்திரிகையில் சஷ்டியப்த பூர்த்தி சாந்தி வைபவத்தின் அழைப்பிதழை வெளியிட்டு ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியரை கௌரவித்து சிறப்பித்திருந்தார்.


டாக்டர் டி.எஸ்.சந்திரசேகரன் பத்மஸ்ரீ விருது பெற்றமைக்கு அவரது குடும்பத்தார் நடத்திய மாபெரும் பாராட்டுவிழா மதுரையில் 17-04-2016 அன்று மாலை தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் நடைப்பெற்றது. திருமதி கீதாபாரதியின் இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்த விழாவில் டாக்டர் சந்திரசேகர் புதல்வி செல்வி. ராஷ்மிகாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. தொடர்ந்து முனைவர் கிருஷ்ணாராம் வரவேற்புரை நிகழ்த்தினார். ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.

பத்மஸ்ரீ டாக்டர் சந்திரசேகர் அவர்கள் இந்தியாவில் முதன்முதலாக தமிழில் உருவாக்கிய பொதுமக்களுக்கான ஜீரண நல நோய்களுக்கான விழிப்புணர்வு இணையதளத்தை கலைமாமணி விருதுபெற்ற தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா வெளியிட்டு பாராட்டி ஆசி வழங்கினார். பட்டிமன்றப் பேச்சாளரும் திரைப்பட நடிகருமான எஸ். ராஜா டாக்டர் மோகன் பிரசாத் டாக்டர் ஜெயக்குமார் டாக்டர் ராஜசேகரன் டாக்டர் விஜயலட்சுமி மற்றும் சந்திரசேகர், தருமராஜ் முனைவர் தா.கு.சுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள்.

டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் ஏற்புரையில் தொகுளுவா சேஷாத்திரி-ருக்மணி தம்பதியரின் ஆறாவதாக பிறந்தேன். தம்பிக்குடையான் படைக்கு அஞ்சான் என்பது போல எனது தம்பி ரவிசன் எனது ஐந்து அண்ணன்கள் நல்லதோர் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். எனது தந்தை படிக்க வைப்பதில் சளைக்காமல் அவரவர் போக்கிலே படிக்க வைத்துள்ளார். நான் மருத்துவப் படிப்பு முடித்தவுடன் சம்பாதிக்க தொடங்கு என்று என்னைக் கூறவில்லை. மாறாக அடுத்து என்ன செய்யப்போகிறாய் என்றுதான் கேட்டுள்ளார். நான் மருத்துவப்படிப்பில் மேல்படிப்பைத் தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தினை தெரிவித்தபோது என்னை ஊக்கம் கொடுத்து நீ விரும்பியபடி செய். நீ நல்ல நிலைக்கு வருவாய் என்று என்னை வாழத்தி ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். அவருடைய பிள்ளைகளாக பிறக்க நாம் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். அதனால்தான் இன்று நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருது பெறும் தகுதியை ஏற்படுத்தியுள்ளது. 

 

நான் மருத்துவத்துறையில் யாரும் செய்யாத ஒன்றைச் செய்து சாதிக்கவேண்டும் என்று விரும்பினேன். அதன்படி ஜீரணத் துறையில் கால் பதித்தேன். எண்டாஸ்கோப்பிக் முறையில் இதுவரை 23ஆயிரத்திற்கு மேல் அறுவை சிகிச்சை செய்துள்ளேன். அவைகளை 14 டிவிடிகளில் பதிவு செய்து கிராம புறங்களில் உள்ள மருத்துவர்கள் ஐந்தே வருடங்களில் இத்துறை அனுபவம் முழுமையாக பெறுவதற்கான வழிவகைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளேன். பிரதமர் மோடியிடம் கலந்துரையாடிய அனுபவம் இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் பார்வையற்றோர் திறனை மேம்படுத்தும் விதமாக அவர்கள் கல்வி பயிலும் முறையில் வடிவமைத்து தந்துள்ளேன். சுத்தமான இந்தியா உருவாக்க எனது துறை சார்ந்த பணியை மேற்கொண்டுவருகிறேன். 


எனது மருத்துவமனையில் வருகின்ற அனைவருக்கும் ஆலோசனைக் கட்டணத்தில் 50சதம் தள்ளுபடி செய்கிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு முழுக்கட்டணச் சலுகையாகவும் செய்ய இருக்கிறேன். மதுரையில் எனது வீட்டில் ஒரு மருத்துவ மனை அமைத்து நம் ஸெளராஷ்ட்ரர்களுக்கு இலவச மருத்துவ வசதிகளை செய்ய இருக்கிறேன் என்று கூறியபோது கண்களில் கண்ணீர் பனித்தது. பலருக்கும் உதாரணமாக விளங்கும் இவரது வாழ்க்கை இன்றைய நமது இளைஞர் சமுதாயத்திற்கு நல்லதோர் பாடமாக இருக்கும் என்பது ஸெளராஷ்ட்ர டைம் கணிப்பு. இறுதியில் டி.எஸ்.சாந்தாராம் நன்றி கூறினார். 

 

நிகழ்ச்சிகளை பேராசிரியர் தி.இரா.தாமோதரன் தொகுத்து வழங்கினார். 


ஸெளராஷ்ட்ர மொழித் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்ற 13-04-2016 அன்று மாலை 6.00 மணிக்கு சென்னை பிலிம் அண்டு டெலிவிஷன் புரொடியூசர்ஸ் கில்டு ஆப் சௌத் இந்தியா செயலாளர் ஜாகுவார் தங்கம் அவர்களிடம் ஒரு கோரிக்கை மனு தரப்பட்டது.


புதிதாக ஸெளராஷ்ட்ர மொழியில் திரைப்படம் தயாரித்து க்யூப் டெக்னாலஜியில் கொடுத்து படங்களை வெளியீடு செய்வதற்கு ஐம்பதாயிரம்  ரூபாய் செலுத்தி வந்த நிலையி;ல் தற்சமயம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதை முன்புபோலவே ஐம்பதாயிரமாக குறைக்கவும் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் தமிழ்த்திரைப்படத்திற்கு வாங்கும் வாடகையே ஸெளராஷ்ட்ர மொழித்திரைப்படங்களுக்கும் வாங்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி ஸெளராஷ்ட்ர மொழித் திரைப்படத் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஹாதுமகொ தயாரிப்பாளரும் ஸெளராஷ்ட்ர மித்ரன் நிறுவனரும் ஸெளராஷ்ட்ர மொழித்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான ராஜ்குமார்ää பொதுச்செயலாளர் ஹந்தார் மொந்நு தயாரிப்பாளர் மல்லி.ரவி, செயற்குழு உறுப்பினர் கோபிநாத் மற்றும் தயாரிப்பாளர்கள் பாண்டுரெங்கா ராம்குமார், கெ4நம் சீனிவாசன், எகோஸ் எநொ கெட்டி குமரன், வினோத்கண்ணா, குமரேஷ் ஆகியோர் திரளாக சென்று வேண்டிக் கொண்டார்கள். இவர்களுடன் ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன் ஸொந்நா கொடு3ம் ஆசிரியர் சதாசிவன் ஆகியேர் உடன் இருந்தனர். 


சென்ற 14-04-2016 அன்று சென்னை தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் கே.எல்.என். பொறியியல் கல்லூரியின் செயலாளர் முனைவர். கே.என்.கே. கணேஷ் தலைமையில் மாபெரும் தமிழ்நாடு ஸெளராஷ்ட்ர கல்வியாளர் கூட்டமைப்பு சார்பில் ஸெளராஷ்ட்ர கல்வியாளர் மற்றும் மாணவர் மாநாடு நடைப்பெற்றது. திருமதி தனலட்சுமி ராமமூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மதுரை ஸெளராஷ்ட்ரக் கல்லூரி தாளாளர் எஸ்.கே.ஜெகந்நாதன் முன்னிலை வகித்தார். தனலட்சுமி பொறியியல் கல்லூரி தலைவர் முனைவர் வி.பி. ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். நெல்லை லெட்சுமிராமன் மெட்ரிக் மேனிலைப்பள்ளித் தாளாளர் அனந்தராமன் மாநாடு நடத்துவதன் நோக்கமும் நிகழ்ச்சிகள் பற்றிய அறிக்கையையும் விரிவாகக் கூறினார். 


விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி.ஆர்.ராஜேந்திரன் கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார். சுப்புராமன் பெண்கள் கலைக்கல்லூரி தலைவர் ஜவஹர்பாபு மற்றும் தர்மபுரி விவேகானந்தா நர்சிங் கல்லூரி தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.ஆர்.பாஸ்கர், விஸ்வநாதன், கே.வி.பதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். 

 

இந்திய ஆட்சிப் பணியாளர்களுக்கு நடைப்பெற்ற பாராட்டு விழாவிற்கு ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் தலைமையேற்றார். நம் சமூகத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணியாளர்களான ராமநாதன், ஜவஹர்பாபு, ஷியாம்சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் இந்திய ஆட்சிப் பணியாளர்களான பார்த்திபன், குமரேஷ், ராமன், உமேஷ், செந்தில்குமார், அசோக்பாபு, அருண்விக்னேஷ் ஆகியோர் பாராட்டப்பட்டனர். தா.கு.சுப்பிரமணியன் மற்றும் ஸெளராஷ்ட்ர மத்ய சபை பொதுச்செயலாளர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டிப் பேசினார்கள். 

இந்திய ஆட்சிப் பணிக்கு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் முனைவர் வி.பி. ராமமூர்த்தி தலைமையிலும் ஸெளராஷ்ட்ர மத்ய சபை முன்னாள் பொதுச்செயலாளர் ராமலிங்கம் தேனி ஸெளராஷ்ட்ரக் கல்லூரி தலைவர் ஜவஹர்லால் மத்ய சபை துணைத்தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

இறுதியாக மாணவர்கள் கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் துணைபுரிவது இல்லச்சூழலா? பள்ளிச்சூழலா? என்னும் தலைப்பில் தா.கு. சுப்பிரமணியன் நடுவராக மாபெரும் பட்டிமன்றம் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாநகராட்சி துணைமேயர் துளசிராமன் தலைமை வகித்தார். மதுரை ஸெளராஷ்ட்ர மேனிலைப் பள்ளி செயலாளர் ஜெகந்நாத் நன்றி கூறினார். 

சென்னை தாம்பரத்திலுள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்ற இவ்விழாவிற்கு காலை மதியம் இரவு என்று சிறப்பான விருந்தினை கல்லூரி தலைவர் ராமமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார். 

 

User Comments
Information
Name
Comments
 
Verification Code
3 + 5 =