ad1
Sourashtri sahitya sammelano 07-03-2020 Saturday. venue: Sri Natana Gopala Nayaki Mandir. Chief guest Dr. R.B. Zala and Dr. Pasumpon aski tenu avo avo

jithrau...

 

ஜித்ரவ் மெனரிய பரமபதம்

 

திரைக்கு வந்துள்ள ஸெளராஷ்ட்ர மொழி வீடியோ திரைபட வரிசையில் இதுவும் ஒன்று. நகைச்சுவையை சுவைபட செய்துள்ளார்கள். வலுவில்லாத கதை. ஏழை வீட்டுப் பெண்ணை பணக்கார வீட்டுப்பையனுக்கும் பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு ஏழை வீட்டுப் பையன் மீது காதல் வருவதும் அந்த காதலுக்கு சிவப்புக் கொடிக் காட்டுவதும் பிறகு ஒன்று சேர்வதும் வழக்கமான கதைதான்.

கணினி தொழில் நுட்பத்தில் ஸெளராஷ்ட்ரக் கலைஞர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிக்கும் வண்ணம் காதல் காட்சிகள் - பாடல் காட்சிகள் படமாக்கியிருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. பாடல்களை அப்பன்ராஜ் மற்றும் வைகை ராஜா எழுதியுள்ளார்கள். பழைய தமிழ் திரைப்படப் பாடல்களில் வெகுவாக மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற பாடல்களின் மெட்டில் பாடல்களை கேட்கும்போது இனிமையாக இருக்கிறது.

இப்படத்திற்கு அரண்சௌகி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ஜேகே. மதுரை எஸ்கேஎஸ், திருப்பூர் காயத்ரி, மதுரை சுமதி ஆகியோர் பின்னணிப் பாடியுள்ளார்கள். பி.எஸ். ரத்தின குமார் எடிட்டிங் பணியை சரியாக செய்துள்ளார். தயாரிப்பு ஏ.கே. குருமூர்த்தி

நடிகர்கள் நடிகையர்கள் பற்றி சொல்லியே ஆக வேண்டும். சோயாகிரி வசனம் இயக்கம் என்று இரண்டு பணிகள் செய்து தனது முதல் திரைப் பிரவேசத்தை முத்திரைப் பதிக்க முயற்சி எடுத்துள்ளார். செது3வ் படத்தை தயாரித்த சீனிவாசன் நகைச்சுவையில் மனதில் நிற்கிறார். நீலகண்டன் பணக்கார அப்பாவாக வருகிறார். கொஞ்சம் வில்லத்தனமாகக் காட்டுவது நம் சமூகத்திற்கு ஒன்றாத காட்சியாக உள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிப்பது தேர்தலில் நம் சமூகத்தவர்க்கே வாக்களிக்க வேண்டும் என்பது போன்ற காட்சிகள் கதைக்கு ஒட்டவில்லை என்றாலும் சமூகத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்ற முயற்சிக்கு அமைக்கப்பட்ட காட்சியை நன்றாகவே  செய்துள்ளார்கள்.

மொத்தத்தில் இப்படம் மூலம் அவரவர் ஆசைகளை நிறைவேற்றியுள்ளார்கள். -சூரியாஞானேஸ்வர்.

 

User Comments

Jithrav padam mii siiriani haalthi thure vimarsanam seraadi tune kellathak musarani. Konko nadippu thii chokkat se meni rhovvo paaraattu dhiiravaai. Thure review chevdhatho vaaippu abbethago sonthosh

Govardanan Laguduva
Question : 4
+
6=