ad1
askinAk nava orsu subha nanthinin

chalni-kaLatni 14-12

ஆரியன்காவு ஸ்ரீதர்ம சாஸ்தா ஸ்ரீபுஷ்கலாதேவி திருக்கல்யாண உற்சவம் மற்றும் மண்டலாபிஷேகம் வருகின்ற 23, 24, 25, 26 ஆகிய நாட்களில் ஆர்யன்காவு திருக்கோவிலில் நடைபெற உள்ளது. 23ஆம் தேதி மாம்பழத்துறையிலிருந்து ஜோதி ரூபமாக ஆர்யன்காவு திருக்கோவிலுக்குப் புறப்பாடு. 24ஆம் தேதி பாண்டியன் முடிப்பு என்னும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி. 25ஆம் தேதி தர்ம சாஸ்தாவிற்கு புஷ்கலா தேவிக்கு திருக்கல்யாண வைபவம் இரவு 10 மணிக்கு நடைபெறும். பின்னர் மறுநாள் 26ஆம் தேதி திங்கட்கிழமை மண்டலாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நான்கு நாள் நிகழ்ச்சிக்கும் சம்மந்தி என்ற முறையில் ஸெளராஷ்ட்ர மக்களுக்கு கேரள தேவஸ்வம் போர்டார் அழைப்பு விடுத்தி விருந்து உபச்சாரம் செய்கிறார்கள். ஸெளராஷ்ட்ர பக்தகோடிகள் அனைவரும் திரளாக வந்திருந்து விழாவினை சிறப்பாக நடத்தி தரவேண்டுமாய் ஆர்யங்காவு தேவஸ்தான ஸெளராஷ்ட்ர மகாஜன சங்கத்தின் செயலாளர் ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

User Comments

Question : 2
+
8=