ad1
askinAk nava orsu subha nanthinin

chalni-kaLatni 25-6

தஞ்சையில் பிரபல ஸெளராஷ்ட்ர பிரமுகர் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், ஸெளராஷ்ட்ர மத்ய சபையின் முன்னாள் பொதுக்காரியதரிசியுமான எம்.எஸ்.ராமலிங்கம் - ஜமுனாராணி தம்பதியரின் புத்திரன் ஸ்ரீவத்ஸன் - ஆர்த்தி திருமண வைபவம் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த திருமணத்திற்கு ஸெளராஷ்ட்ர மத்ய சபைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மத்ய சபையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஈரோடு வெங்கட்ராமன், குசோ ஜெயபால், பரமக்குடி பார்த்தசாரதி, ராசிபுரம் சங்கர்லால, திருப்பூர் ரவிசன் மற்றும் முன்னாள் நிர்வாகிகளுடன் ஸெளராஷ்ட்ர டைம் ஆசிரியர் ஞானேஸ்வரன், ஸெளராஷ்ட்ர முரசு ஆசிரியர் பிரேம்நாத், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மகாராஷ்ட்ர ராஜ்ய சபையின் உறுப்பினரான இல.கணேசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.லெட்சுமணன் தஞ்சை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காங்கிரஸ் ஆட்சியின்போது அவசரநிலைப் பிரகடனத்தின்போது கைது செய்யப்பட்ட தினமான இன்று மண்டபத்தில் இல.கணேசன் தலைமையில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. சிறைசென்றவர் தங்கள் அனுபவங்களை நினைவுகூர்ந்தனர். அவர்களுக்கு பாராட்டு செய்யும் விதத்தில் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். 


 

சென்னை  ஸௌராஷ்ட்ர கல்சுரல் அகாடமி ஜூலை மாதம் இரண்டாவது ஞாயிறு (9-7-2017) காலை 9.30 முதல் 12.30 வரை ஜாதக பரிவர்த்தனை பதிவு சூளை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நடைபெறும்.
 

 

ஸௌராஷ்ட்ர கல்சுரல் அகாடமி நிர்வாகிகள் தரும் படிவத்தை முறையாக தங்கள் வது/வரன்களின் விவரங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம். நம் சமூக மக்கள் எந்தவித வேறுபாடுமின்றி அனைவரும் இதில் பங்கு கொள்ளலாம்.படிப்பு விவரங்கள் பற்றி எந்த கவலையும் வேண்டாம்.இச் சேவைக்கு ஒரு ஆண்டுக்கு நன்கொடை ரூ 100.

 

நம் சமூக மக்கள் இச் சேவையை நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

 

ஜூன் மடாம் 7 நொவ்ரின், 36 நொவ்ரான் பான் பதிவ் ஹொய்ரெஸ்.

மேலும் விவரங்களுக்கு :-
திரு ஸி.ந.தியாகராஜன் 89257 34447
திரு B.S.சங்கர்லால் 98405 65490
திரு D.R.சுப்பிரமணியன் 86374 27368
அனைவரும் வருக! பெருமாளின் அருளோடு தங்கள் வது/வரங்களை பெறுக.

 

User Comments

Question : 2
+
5=