ad1
We pleased to request our readers to open the advertisements in between the every articles.

chalni-kaLatni 6-12

கண்ணீர் அஞ்சலி!

அலைமோதும் மக்கள் கூட்டம்
அழுத கண்ணீருடன்..........

அம்மாவோ

நடுவில் அமைதியாக உறங்கும்
நிலைகண்டு கலங்கும் உலகம்

துணிச்சலான பெண்மணி
தைரியத்தின் இலக்கணம்
சாதனையின் இலக்கியம்
சாதிப்பதற்கே பிறவி எடுத்த
மனிதருள் நன்மாணிக்கம்

மக்களால் நான் 
மக்களுக்காக நான்
என்ற நாடித் துடிப்பில் 
ஓய்வின்றி உழைத்த தாய்
ஓய்வு எடுக்கிறார் இறைவன் திருவடியில்

தொண்டர்களுக்கு ஆறுதல் இல்லை
தமிழக மக்களுக்கு தேறுதல் இல்லை
அம்மாவின் புகழுக்கு புகழாரம்
ஆனாலும் ஈடுசெய்ய இயலாத இழப்பு

பெண்ணுரிமைக்கு முழக்கம்
முன்னுதாரணத்திற்கு விளக்கம்
அன்பு பண்பு விடாமுயற்சி தன்னம்பிக்கை
மக்களை ஈர்த்த பலமும் இதுவே!

வெற்றிக்கு பொருள் ஜெயா
அதனை கையாள்வதில் எத்துணை லலிதம்
இனிவருமோ ஒரு வசந்தம் 
அம்மாவின் ஆட்சி தொடரட்டும் அவரது அபிமானிகளால்
அதுவே அவருக்கு செலுத்தும் அஞ்சலி!

- சூர்யா ஞானேஸ்வர் 

User Comments

Question : 4
+
8=