ad1
askinAk nava orsu subha nanthinin

chalni kaLatni 13-6-19

ஸ்ரீநாயகியார் ஸெளராஷ்ட்ர ஸாஹித்ய விருதாளர் சூர்யா ஞானேஸ்வர் மொழி பெயர்ப்பு நூலான பி3ந்து3லா கெ2நி மது3ரெ ஸர்கு3 19-05-2019 அன்று மாலை மதுரை சோலை ஸ்ரீமுருகன் திருமண மண்டபத்தில் வெளியீட்டு விழா நடைபெற்றது. பேராசிரியை முனைவர் சாந்தசங்கரி இறைவணக்கம் பாடினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வுப்பெற்ற துணைப் பதிவாளர் சத்தியமூர்த்தி வந்திருந்த பிரமுகர்களின் மொழி இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றியப் பணிகளைக் குறிப்பிட்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.புதுவை ஸெளராஷ்ட்ர சபைத் தலைவரும் புதுவை கம்பன் கழக செயற்குழு உறுப்பினருமான ஜி.ஆர்.ரவீந்திரன் விழாவிற்கு தலைமை வகித்தார். சூர்யா ஞானேஸ்வர் கிட்டத்தட்ட 40 ஆண்டுக்கு மேலாக ஸெளராஷ்ட்ர பத்திரிகைத் துறையில் பணியாற்றி வருபவர். அவருடைய உழைப்பின்மீதுள்ள நம்பிக்கையில் இந்நூலை நன்றாக எழுதியிருப்பார் என்று எண்ணினேன். ஆனால் அதற்கும் மேலாக மிக சிறப்பாக செய்திருப்பதைக் கண்டு சிலிர்த்து போனேன். வார்த்தைகளை கையாண்டுள்ள விதம் புதுப்புது வார்த்தை பொருத்தமாக கொடுத்திருப்பதும் இவருடைய தனிச்சிறப்பு என்று அவர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

படிப்பதற்கு சிறிது கடினமாக இருந்தாலும் படித்தேயாக வேண்டும் என்ற வேட்கையில் படித்து முடித்தவுடன் நூலாசிரியர் பாராட்டுதலுக்கு தகுதியுடையவர் என்றும் ஸெளராஷ்ட்ர மொழியில் அருமையாக வளமான வார்த்தைகள் கொண்டு சுவைபட எழுத முடியும் என்பதை ஞானேஸ்வர் உறுதி செய்துள்ளார். உலகம் முழுதுமுள்ள தமிழ் துறைகளுக்கு செல்லும் போதெல்லாம் பி3ந்து3லா கெ2நி பற்றி சொல்லுவேன். அவ்வளவு சிறப்பாக மொழி பெயர்ப்பு செய்துள்ளார். அந்த நூலை நான் வெளியிடுவதில் மிகவும் பெருமைக் கொள்கிறேன் என்று கூறிய ஸெளராஷ்ட்ரக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா பேராசிரியை முதுமுனைவர்; திருமதி ஆர். சித்ராää நூலை வெளியிட்டார்

சமஸ்கிருத பேராசிரியரும் சாகித்ய அகாடமி விருதாளரும் ஸெளராஷ்ட்ரீ ஸாஹித்ய ஸதஸ் தலைவருமான டி.ஆர். தாமோதரன் முதல் பிரதி பெற்றுக்கொண்டார்.

 

நூலாசிரியரின் முயற்சியைப் பாராட்டி மாத்ரு பா4ஷா நாடக விருத்தி கர்த்தாவும் ஸெளராஷ்ட்ர திரைப்படத் தயாரிப்பாளருமான வி.கே. நீலாராவ் எழுதிய கவிதையை பேராசிரியை முனைவர் சாந்தசங்கரி படித்துக் காட்டி அதன் அச்சுப்பிரதியை அனைவருக்கும் வழங்கினார்.

ஸெளராஷ்ட்ரக் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வரும் டி.எம்.எஸ் அவர்களின் முதன்மை மாணாக்கருமான பேராசிரியர் ஜி.ஆர். மகாதேவன் நூலாசிரியரை பாராட்டி பேசினார். மொழி பெயர்ப்பு பணியில் எனது மாணவரும் ஸெளராஷ்ட்ர டைம் பத்திரிகை ஆசிரியருமான ஞானேஸ்வர் ஈடுபட்டு மகத்தான சாதனையை செய்திருப்பது பெருமையாக உள்ளது என்றும் மதுரைக் காண்டத்தில் நான் சிறப்பாக ரசித்து படித்த பகுதிகள் அனைத்தும் ஸெளராஷ்ட்ர மொழி பெயர்ப்பில் மிக நேர்த்தியாக இருப்பதைக் கண்டு பாராட்டி மகிழ்கிறேன் என்று தனது பாராட்டுரையில் குறிப்பிட்டார்.

ஸெளராஷ்ட்ரக் கல்லூரியின் முன்னாள் ஆங்கிலத் துறை பேராசிரியர் முனைவர் எல்.ஆர். கோவர்தனன் தனது பாராட்டுரையில் நூலாசிரியர் இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றுள்ளார். ஸெளராஷ்ட்ர மொழியில் நாம் மறந்து போனதும் பயன் பாட்டில் இல்லாமல் போன வார்த்தைகள் மற்றும் புதிய வார்த்தைகள் என்று ஏராளமாக கையாண்டுள்ளார். இலக்கியம் படிப்பதால் மட்டுமே ஒரு மொழியின் வார்த்தைகளை காப்பாற்ற முடியும் என்பதை மிக நேர்த்தியாக தனது பி3ந்து3லா கெ2நி மூலம் நிரூபித்துள்ளார் என்று கூறினார்.

ஸொந்நா கொடு3ம் ஆசிரியர் ஆர்.என் சதாசிவன் உரையாற்றும்போது மொதிரெத்து தொடங்கிய காலம் முதல் என்னுடன் தோள் கொடுத்து நின்ற ஞானேஸ்வரன் இந்த அளவிற்கு ஒரு மொழிபெயர்ப்பு நூலை எழுதி முடித்துள்ளதில் எனக்கும் பெருமையுண்டு என்று உணர்ச்சிப் பொங்க குறிப்பிட்டார்.

விழாவில் முனைவர். தா.கு.சுப்பிரமணியன் மறைவிற்கு மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் விழாவிற்கு வருகை புரிந்த மொழி ஆர்வலர்களில் டி.எஸ்.ஞானேஸ்வரன் மற்றும் விஷ்ணுசர்மா சிறப்பாக பாராட்டி உரையாற்றினார்கள்.

நூலாசிரியரின் ஏற்புரைக்குப் பின்னர் நூலாசிரியர் ஸதஸ் சார்பில் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

சோலை ஸ்ரீமுருகன் தர்மடிரஸ்ட் எஸ்.ஆர்.குமரேஷ் நன்றி நவில இரவு விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

User Comments

Question : 3
+
7=