ad1
askinAk nava orsu subha nanthinin

sou.keerthanai

வரப்பெற்றோம்:

நூலின் பெயர்: ஸ்ரீமத் கவி வேங்கடசூரி சுவாமிகள் ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் அருளிச்செய்த ஸெளராஷ்ட்ர மொழிக் கீர்த்தனைகள் (ஸ்வரக் குறிப்புடன்)

ஸ்வரப்படுத்தியவர்: (வைத்தியம்) வி.கே. நீலாராவ்

விலை: ரூ.75.00 

கிடைக்குமிடம்: விச்சு பதிப்பகம், 64, என்.எஸ்.கோனார் தெரு, ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு, மதுரை – 625011.

நூலைப்பற்றி சில வரிகள்:

இந்நூலில் நீலாராவ் எழுதிய நான்கு பாடல்கள் ஸ்ரீமத் வேங்கடசூரி சுவாமிகள் இயற்றிய இராமாயணத்திலிருந்து ஏழு கீர்த்தனைகள் ஸ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகள் இயற்றிய கீர்த்தனைகளில் இருபத்து ஐந்து என மொத்தம் முப்பத்து ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ளது. அனைத்து பாடல்களுக்கும் ஸ்வரம் எழுதி ராக தாளக் குறிப்புக்களுடன் எழுபத்து இரண்டு மேளகர்த்தாவில் ஒவ்வொரு பாடலும் சார்ந்துள்ள வரிசையையும் குறிப்பிடப் பட்டுள்ளது. வாக்கேயர்களுக்கும் வாத்தியக்காரர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் தொகுக்கப்பட்ட இந்நூல் இசையுலக வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் என்பதில் ஐயமில்லை. இசைப்பிரியர்களிடமும் சங்கீத வித்வான்களிடமும் அவசியம் இருக்கவேண்டிய அரிய பொக்கிஷம் என்றே கூறலாம். இந்நூலுக்கு பத்மபூஷண் முனைவர் பி.சுசிலா ஆசி வழங்கியுள்ளார். பிரபல வயலின் வித்வான் குடந்தை எம்.ஆர்.கோபிநாத் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். 

 

User Comments

Question : 2
+
7=